IPL 2023: CSK vs LSG | சேப்பாக்கம் மைதானத்தில் நாய் புகுந்ததால் தாமதமாக தொடங்கிய ஆட்டம்

By செய்திப்பிரிவு

சென்னை: சென்னை சூப்பர் கிங்ஸ் மற்றும் லக்னோ சூப்பர் ஜெயண்ட்ஸ் அணிகள் மோதும் ஐபிஎல் லீக் போட்டியில் சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் நாய் புகுந்ததால் ஆட்டம் தாமதமாக தொடங்கியது.

16ஆவது ஐபிஎல் கிரிக்கெட் தொடர் கோலாகலமாக தொடங்கி நடைப்பெற்று வருகிறது. சென்னை சேப்பாக்கத்தில் உள்ள எம்.ஏ.சிதம்பரம் மைதானத்தில் இன்று நடைபெறும் 6-வது லீக் ஆட்டத்தில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணியும், லக்னோ சூப்பர் ஜெயண்ட்ஸ் அணியும் பலப்பரீட்சை நடத்துகின்றன. தோனி தலைமையிலான சென்னை அணி முதல் போட்டியில் குஜராத் அணியை எதிர்கொண்டது. ஆனால், 5 விக்கெட் வித்தியாசத்தில் சென்னை தோல்வியைத் தழுவியது. அதே நேரத்தில் லோகேஷ் ராகுல் தலைமையிலான லக்னோ அணி தனது தொடக்க ஆட்டத்தில் 50 ரன் வித்தியாசத்தில் டெல்லியை வென்றது. இந்த சூழலில் இந்த இரண்டு அணிகளும் மோதும் ஆட்டம் கிரிக்கெட் ரசிகர்களிடையே ஆர்வத்தை தூண்டியுள்ளது.

இந்நிலையில், இந்த இரண்டு அணிகளும் மோதும் போட்டி சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் 7.30 மணிக்கு தொடங்கும் என அறிவிக்கப்பட்டிருந்தது. ரசிகர்களும் ஆர்வத்துடன் போட்டியை எதிர்நோக்கிக் கொண்டிருக்கும்போது, மைதானத்தில் நாய் புகுந்தது. இதனால் நாயை விரட்ட அங்கிருந்தவர்கள் போராடினர். 3 நிமிடங்களுக்கும் மேலாக நாயை மைதானத்தையே சுற்றி வந்து ரசிகர்களுக்கு மற்றொரு ஆட்டத்தைக் காட்டியது. இதனால் ஆட்டம் தாமதமானது.

சில நிமிட போராட்டத்தைத் தொடர்ந்து ஒருவழியாக நாயை அங்கிருந்து அப்புறப்படுத்திய பின் போட்டி தொடங்கியது. சிஎஸ்கேவுக்கு எதிரான ஆட்டத்தில் டாஸ் வென்ற லக்னோ சூப்பர் ஜெயண்ட் பந்துவீச்சை தேர்வு செய்தது. அதன்படி, சென்னை அணி சார்பில் தொடக்க ஆட்டக்காரர்களாக ருத்ராஜ் கெய்வாட், டெவோன் கான்வே களமிறங்கி விளையாடி வருகின்றனர்.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE