லக்னோ: டெல்லி கேபிட்டல்ஸ் அணிக்கு எதிரான ஆட்டத்தில் லக்னோ சூப்பர் ஜெயண்ட்ஸ் அணி 50 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றிபெற்றுள்ளது.
நடப்பு ஐபிஎல் சீசனின் மூன்றாவது லீக் ஆட்டத்தில் லக்னோ சூப்பர் ஜெயண்ட்ஸ், டெல்லி கேபிட்டல்ஸ் அணிகள் இன்று மோதின. லக்னோவில் நடைபெற்ற இந்த ஆட்டத்தில் டாஸ் வென்ற டெல்லி அணி பீல்டிங் தேர்வு செய்தது. அதன்படி, முதலில் பேட்டிங் செய்த லக்னோ அணி நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவரில் 6 விக்கெட்டுக்கு 193 ரன்கள் குவித்தது. தொடக்க வீரர் கைல் மேயர்ஸ் அதிரடியாக ஆடி 38 பந்துகளில் 2 பவுண்டரி, 7 சிக்சர்களுடன் 72 ரன்கள் விளாசினார்.
நிகோலஸ் பூரன் 36 ரன்கள் எடுத்து கைகொடுத்தார். டெல்லி அணி சார்பில் கலீல் அகமது, சேட்டன் சகாரியா தலா 2 விக்கெட் கைப்பற்றினர். அக்சர் பட்டேல், குல்தீப் யாதவ் ஆகியோர் தலா ஒரு விக்கெட் எடுத்தனர்.
தொடர்ந்து 194 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்கை நோக்கி களமிறங்கிய டெல்லி கேப்பிட்டல்ஸ் அணிக்கு, கேப்டனும், தொடக்க ஆட்டக்காரருமான டேவிட் வார்னர் பொறுப்புடன் ஆடி அரை சதமடித்தார். அவர் 56 ரன்னில் ஆட்டமிழந்தார். ரூசோவ் 30 ரன்னில் அவுட்டாக, மற்ற வீரர்கள் நிலைத்து நிற்கவில்லை. கடைசி கட்டத்தில் அக்சர் படேல் 16 ரன்கள் எடுத்தார். லக்னோ அணி சார்பில் மார்க் வுட் சிறப்பாக பந்துவீசி 5 விக்கெட் வீழ்த்தி அசத்தினார்.
ஆவேஷ் கான், ரவி பிஷ்னோய் ஆகியோர் தலா 2 விக்கெட்டும் வீழ்த்தினர். இறுதியில், டெல்லி அணி 143 ரன்கள் மட்டுமே எடுத்து தோற்றது. இதன்மூலம் 50 ரன்கள் வித்தியாசத்தில் லக்னோ சூப்பர் ஜெயண்ட்ஸ் அணி நடப்பு தொடரில் முதல் வெற்றியை ருசித்தது.
முக்கிய செய்திகள்
விளையாட்டு
1 hour ago
விளையாட்டு
2 hours ago
விளையாட்டு
4 hours ago
விளையாட்டு
11 hours ago
விளையாட்டு
13 hours ago
விளையாட்டு
17 hours ago
விளையாட்டு
20 hours ago
விளையாட்டு
1 day ago
விளையாட்டு
1 day ago
விளையாட்டு
1 day ago
விளையாட்டு
1 day ago
விளையாட்டு
1 day ago
விளையாட்டு
1 day ago
விளையாட்டு
2 days ago
விளையாட்டு
2 days ago