இன்று ஐபிஎல் கிரிக்கெட்டின் 16-வது சீசன் தொடங்கி உள்ளது. இந்த சீசனின் முதல் லீக் போட்டியில் சென்னை சூப்பர் கிங்ஸ் மற்றும் குஜராத் டைட்டன்ஸ் அணிகள் விளையாடுகின்றன. இந்நிலையில், இந்த சீசனில் விளையாடும் 10 அணிகள் குறித்த ஓர் பார்வை.
மும்பை இந்தியன்ஸ்: கேப்டன்: ரோஹித் சர்மா
முக்கியமான வெளிநாட்டு வீரர்கள்: கேமரூன் கிரீன் (ஆஸ்திரேலியா ஆல்ரவுண்டர்), டிம் டேவிட் (சிங்கப்பூரை பிறப்பிடமாக கொண்ட ஆஸ்திரேலிய பேட்ஸ்மேன்), ஜோப்ரா ஆர்ச்சர் (இங்கிலாந்து வேகப்பந்து வீச்சாளர்)
முக்கியமான இந்திய வீரர்கள்: இஷான் கிஷன் (தொடக்க வீரர்), சூர்யகுமார் யாதவ். இதில் சூர்யகுமார் யாதவ் உலகின் நம்பர் ஒன் பேட்ஸ்மேனாக உள்ளார். மைதானத்தின் எந்த பகுதிக்கும் பந்தை விரட்டும் திறன் கொண்ட அவர்,தனது வித்தியாசமான ஷாட்களால் பிரபலமாக உள்ளார்.
புதுவரவு: கடந்த சீசனில் இங்கிலாந்தின் ஜோப்ரா ஆர்ச்சரை ரூ.8 கோடிக்கு மும்பை இந்தியன்ஸ் ஏலம் எடுத்தது. ஆனால் காயம் காரணமாக அவர், ஒரு ஆட்டத்தில் கூட பங்கேற்கவில்லை. தற்போது புதுப்பொழிவுடன் அவர், அணிக்கு திரும்பி உள்ளார். ஆல்ரவுண்டர்கள் வரிசையை பலப்படுத்தும் விதமாக இந்த சீசனில் ஆஸ்திரேலியாவின் கேமரூன் கிரீனை ரூ.17.50 கோடிக்கு மும்பை இந்தியன்ஸ் வாங்கியுள்ளது.
ஐபிஎல் சாதனை: 5 முறை சாம்பியன் (2013, 2015, 2017, 2019 and 2020), 2010-ம் ஆண்டு 2-வது இடம்.
சென்னை சூப்பர் கிங்ஸ்: கேப்டன்: மகேந்திர சிங் தோனி
முக்கியமான வெளிநாட்டு வீரர்கள்: மொயின் அலி, பென் ஸ்டோக்ஸ் (இங்கிலாந்து ஆல்ரவுண்டர்கள்), டேவன் கான்வே (நியூஸிலாந்து பேட்ஸ்மேன்).
முக்கியமான இந்திய வீரர்கள்: ரவீந்திர ஜடேஜா (பந்து வீச்சு ஆல்ரவுண்டர்), ருதுராஜ் கெய்க்வாட் (பேட்ஸ்மேன்)
புதுவரவு: இங்கிலாந்து டெஸ்ட் கிரிக்கெட் அணியின் கேப்டனும் ஆல்ரவுண்டருமான பென் ஸ்டோக்ஸ் ரூ.16.25 கோடிக்கு ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளார். காயம் காரணமாக அவர், தொடக்க ஆட்டங்களில் பேட்ஸ்மேனாக களமிறங்க உள்ளார்.
ஐபிஎல் சாதனை: 4 முறை சாம்பியன் (2010, 2011, 2018, 2021), 6 முறை 2-வது இடம் (2008, 2012, 2013, 2015, 2019, 2022).
டெல்லி கேபிடல்ஸ்: கேப்டன்: டேவிட் வார்னர்
முக்கியமான வெளிநாட்டு வீரர்கள்: லுங்கி நிகிரி (தென் ஆப்பிரிக்க வேகப்பந்து வீச்சாளர்), மிட்செல் மார்ஷ் (ஆஸ்திரேலியா ஆல்ரவுண்டர்).
முக்கியமான இந்திய வீரர்கள்: குல்தீப் யாதவ் (இடது கை ரிஸ்ட் ஸ்பின்னர்), அக்சர் படேல் (பந்துவீச்சு ஆல்ரவுண்டர்).
புதுசு என்ன?: ரிஷப் பந்த் கடந்த டிசம்பர் மாதம் விபத்தில் சிக்கி காயம் அடைந்ததால் டெல்லி கேபிடல்ஸ் அணியின் கேப்டனாக டேவிட் வார்னர் நியமிக்கப்பட்டுள்ளார்.
ஐபிஎல் சாதனை: 2020-ம் ஆண்டு 2-வது இடம்.
லக்னோ சூப்பர் ஜெயண்ட்ஸ்: கேப்டன்: கே.எல்.ராகுல்
முக்கியமான வெளிநாட்டு வீரர்கள்: குயிண்டன் டி காக் (தென் ஆப்பிரிக்க விக்கெட்கீப்பர் பேட்ஸ்மேன்), மார்கஸ் ஸ்டாயினிஸ் (ஆஸ்திரேலியா ஆல்ரவுண்டர்), நிக்கோலஸ் பூரன் (மேற்கிந்தியத் தீவுகள் ஆல்ரவுண்டர்).
முக்கியமான இந்திய வீரர்கள்: அவேஷ் கான், ஜெயதேவ் உனத்கட் (வேகப்பந்து வீச்சாளர்கள்).
புதுவரவு: விக்கெட் கீப்பர் பேஸ்ட்மேன் நிக்கோலஸ் பூரனை ரூ.16 கோடிக்கு ஏலம் எடுத்துள்ளது லக்னோ சூப்பர் ஜெயண்ட்ஸ் அணி.
ஐபிஎல் சாதனை: அறிமுகமான முதல் சீசனிலேயே (2022-ம் ஆண்டு) 3-வது இடம்.
குஜராத் டைட்டன்ஸ்: கேப்டன்: ஹர்திக் பாண்டியா
முக்கியமான வெளிநாட்டு வீரர்கள்: டேவிட் மில்லர் (தென் ஆப்பிரிக்கா பேட்ஸ்மேன்), ரஷித் கான் (ஆப்கானிஸ்தான் லெக் ஸ்பின்னர்), கேன் வில்லியம்சன் (நியூஸிலாந்து பேட்ஸ்மேன்).
முக்கியமான இந்திய வீரர்கள்: ஷுப்மன் கில் (பேட்ஸ்மேன்), மொகமது ஷமி (வேகப்பந்து வீச்சாளர்).
புதுவரவு: நியூஸிலாந்தின் கேன் வில்லியம்சன், மேற்கிந்தியத் தீவுகளின் வேகப்பந்து வீச்சாளர் ஒடியன் ஸ்மித், அயர்லாந்து வேகப்பந்து வீச்சாளர் ஜோஷ் லிட்டில் ஆகியோர் புதிதாக ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளனர்.
ஐபிஎல் சாதனை: அறிமுகமான முதல் ஆண்டிலேயே (2022) சாம்பியன் பட்டம்.
பஞ்சாப் கிங்ஸ்: கேப்டன்: ஷிகர் தவண்
முக்கியமான வெளிநாட்டு வீரர்கள்: லியாம் லிவிங்ஸ்டன் (இங்கிலாந்து பேட்ஸ்மேன்), காகிசோ ரபாடா (தென் ஆப்பிரிக்கா வேகப்பந்து வீச்சாளர்), சேம் கரண் (இங்கிலாந்து ஆல்ரவுண்டர்).
முக்கியமான இந்திய வீரர்கள்: ஷாருக்கான் (பேட்ஸ்மேன்), ஷிவம் துபே (வேகப்பந்து வீச்சாளர்).
புதுவரவு: இங்கிலாந்து ஆல்ரவுண்டர் சேம் கரண் ரூ.18.5 கோடிக்கு ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளார். இறுதிக்கட்ட ஓவர்களில் சிறப்பாக பந்து வீசும் சேம் கரண், கடந்த ஆண்டு நடைபெற்ற டி 20 உலகக் கோப்பையில் தொடர் நாயகனாக தேர்வாகி இருந்தார்
ஐபிஎல் சாதனை: 2014-ம் ஆண்டு 2-வது இடம்.
ராஜஸ்தான் ராயல்ஸ்: கேப்டன்: சஞ்சு சாம்சன்
முக்கியமான வெளிநாட்டு வீரர்கள்: ஜாஸ் பட்லர் (இங்கிலாந்து விக்கெட் கீப்பர் பேட்ஸ்மேன்), டிரெண்ட் போல்ட் (நியூஸிலாந்து வேகப்பந்து வீச்சாளர்), ஷிம்ரன் ஹெட்மயர் (மேற்கிந்தியத் தீவுகள் பேட்ஸ்மேன்).
முக்கியமான இந்திய வீரர்கள்: யுவேந்திர சாஹல் (லெக் ஸ்பின்னர்), ரவிச்சந்திரன் அஸ்வின் (ஆஃப் ஸ்பின்னர்).
ஐபிஎல் சாதனை: தொடர் அறிமுகம் செய்யப்பட்ட 2008ல் மறைந்த ஆஸ்திரேலிய ஜாம்பவான் ஷேன் வார்ன் தலைமையில் பட்டம் வென்றிருந்தது. 2022-ம் ஆண்டு 2-வது இடம்.
கொல்கத்தா நைட் ரைடர்ஸ்: கேப்டன்: நிதிஷ் ராணா (ஸ்ரேயஸ் ஐயர் காயம் அடைந்துள்ளதால் பொறுப்பு கேப்டனாக நியமிக்கப்பட்டுள்ளார்).
முக்கியமான வெளிநாட்டு வீரர்கள்: ஆந்த்ரே ரஸ்ஸல், சுனில் நரேன் (மேற்கிந்தியத் தீவுகள் ஆல்ரவுண்டர்), டிம் சவுதி (நியூஸிலாந்து வேகப்பந்து வீச்சாளர்).
முக்கியமான இந்திய வீரர்கள்: வெங்கடேஷ் ஐயர் (ஆல்ரவுண்டர்), வருண் சக்ரவர்த்தி (லெக் ஸ்பின்னர்).
ஐபிஎல் சாதனை: இரு முறை சாம்பியன் (2012, 2014), 2021-ம் ஆண்டு 2-வது இடம்.
சன் ரைசர்ஸ் ஹைதராபாத்: கேப்டன்: எய்டன் மார்க்ரம்
முக்கியமான வெளிநாட்டு வீரர்கள்: மார்கோ யான்சன் (தென் ஆப்பிரிக்கா பந்து வீச்சு ஆல்ரவுண்டர்), ஹெய்ன்ரிச் கிளாசன் (தென் ஆப்பிரிக்கா பேட்ஸ்மேன்), ஹாரி புரூக் (இங்கிலாந்து பேட்ஸ்மேன்).
முக்கியமான இந்திய வீரர்கள்: புவனேஷ்வர் குமார், உம்ரன் மாலிக் (வேகப்பந்து வீச்சாளர்), வாஷிங்டன் சுந்தர் (சுழற்பந்து வீச்சாளர்).
புதுவரவு: இங்கிலாந்து அணியின் இளம் அதிரடி பேட்ஸ்மேன் ஹாரி புரூக் ரூ.13.25 கோடிக்கு ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளார்.
ஐபிஎல் சாதனை: 2016-ம் ஆண்டு சாம்பியன்
ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு: கேப்டன்: டு பிளெஸ்ஸிஸ்
முக்கியமான வெளிநாட்டு வீரர்கள்: கிளென் மேக்ஸ்வெல் (ஆஸ்திரேலியா ஆல்ரவுண்டர்), ரீஸ் டாப்லே (இங்கிலாந்து இடது கை வேகப்பந்து வீச்சாளர்), ஜோஷ் ஹேசில்வுட் (ஆஸ்திரேலியா வேகப்பந்து வீச்சாளர்). இதில் ஹேசில்வுட் காயம் காரணமாக விளையாடுவது சந்தேகமாக உள்ளது.
முக்கியமான இந்திய வீரர்கள்: விராட் கோலி (பேட்ஸ்மேன்), மொகமது சிராஜ் (வேகப்பந்து வீச்சாளர்), தினேஷ் கார்த்திக் (விக்கெட்கீப்பர் பேட்ஸ்மேன்).
ஐபிஎல் சாதனை: 3 முறை 2-வது இடம் (2009, 2011, 2016).
முக்கிய செய்திகள்
விளையாட்டு
6 hours ago
விளையாட்டு
21 hours ago
விளையாட்டு
21 hours ago
விளையாட்டு
21 hours ago
விளையாட்டு
21 hours ago
விளையாட்டு
21 hours ago
விளையாட்டு
1 day ago
விளையாட்டு
1 day ago
விளையாட்டு
1 day ago
விளையாட்டு
1 day ago
விளையாட்டு
1 day ago
விளையாட்டு
1 day ago
விளையாட்டு
2 days ago
விளையாட்டு
2 days ago
விளையாட்டு
2 days ago