ஆஸி. வைத்த பொறியை விராட் கோலி முறியடித்தது எப்படி?

By ஆர்.முத்துக்குமார்

ஆஸ்திரேலியாவுக்கு எதிராக பொதுவாக ரன்களைக் குவிக்கும் விராட் கோலி இந்த ஆண்டில் அந்த அணிக்கு எதிராக 6 இன்னிங்ஸ்களில் 46 ரன்களையே எடுத்திருந்தார். அதாவது கொல்கத்தாவில் நேற்றைய 92 ரன்களுக்கு முன்பாக.

திடீரென ஆஸி.க்கு எதிராக இத்தகைய பார்ம் சரிவுக்குக் காரணம் என்ன? ஒருவேளை விராட் கோலியை ஆஸி. வீச்சாளர்கள் திட்டமிட்டு ‘வொர்க் அவுட்’ செய்து விட்டார்களோ என்ற ஐயம் ஏற்படுவது சகஜமே.

ராகுல் திராவிட், சச்சின் டெண்டுல்கர், விராட் கோலி போன்ற கவர் டிரைவ் நாட்ட வீரர்களுக்கு அந்த ஆசையைக் காட்டியே பவுலர்களும் கேப்டன்களும் வொர்க் அவுட் செய்து விடுவார்கள். அதாவது கவர் திசையில் பீல்டரை நிறுத்தாமல் பேட்ஸ்மென் கண்களுக்கு புல்தரையினூடாக அந்த கவர் பவுண்டரியைக் காட்டி ஆசைகாட்டுவார்கள்.

இப்படி கவரைக் காலியிடமாக்கி ஆஃப் ஸ்டம்புக்கு வெளியே வேகமாகவும், வேகம் குறைவாகவும் லெந்த்தை மாற்றி மாற்றியும், நெருக்கமாகவும் வைடாகவும் வீசி அந்த கவர் திசையில் ஆட சபலமேற்படுத்துவது வழக்க்ம், இந்த பொறியில் சச்சின் பல முறை சிக்கி மீண்டுள்ளார். இப்படிப்பட்ட ஒரு பொறியில் அவர் தொடர்ந்து சிக்கிய போதுதான் 2004-ம் ஆண்டு ஆஸி. தொடரில் சிட்னி டெஸ்ட் போட்டியில் கவர் டிரைவ் ஆடப்போவதில்லை என்று முடிவெடுத்து 241 ரன்களை எடுத்தது நினைவிருக்கலாம்.

சேவாக், லஷ்மண் போன்றவர்களிடம் இந்த பொறி உத்தியெல்லாம் பலிக்காது, ஏனெனில் அவர்கள் பந்து வந்த பிறகு கை-கண் ஒத்துழைப்பில் எங்கு வேண்டுமானாலும் மாற்றி அடிப்பவர்கள். குறிப்பாக லஷ்மண் பேக் ஃபுட் பிளேயர் என்பதால் அவரிடம் இந்த உத்தி பலிக்காது, மார்க் வாஹ் போல் ஆஃப் ஸ்டம்புக்கு வெளியே செல்லும் பந்துகளை நன்றாக உள்ளே விட்டு பிறகுதான் ஆடுவார்கள், பந்து பவுன்ஸ் ஆகும் இடத்துக்கே மட்டையைக் கொண்டு செல்ல மாட்டார்கள்.

இவ்வகையில் கோலி கவர் டிரைவ் பிரியர். அவரது பலத்தையே பலவீனமாக்குவதுதான் ஒரு சிறந்த அணியின் உத்தியாக இருக்க முடியும். ஏனெனில் ஒருவரது பலவீனத்துக்கு வீசிக்கொண்டேயிருந்தால் அவர் பலவீனம் பலமாக மாறும், மாறாக பலத்தில் சோதனை செய்தால் அவரின் எதிர்காலமே கூட பாழாகிப் போகலாம். இதுதான் கிரிக்கெட் மட்டுமல்ல எந்த ஆட்டத்திலும் எந்த ஒரு வீரரின் விதியும்.

விராட் கோலி ஆஸ்திரேலியாவுக்கு எதிராக இந்த ஆண்டு எடுத்த 46 ரன்களில் 3 முறை ஆஃப் ஸ்டம்புக்கு வெளியே சென்ற பந்தை டிரைவ் ஆட முயன்று ஆட்டமிழந்திருக்கிறார். இதே உத்தியில் என்ன செய்வார்கள் என்றால் ஷார்ட் பிட்ச் பந்துகளை தொண்டைக்குழிக்கு ஏற்றி அவரை ஓரிரு பந்துகள் முன்னே வர விடாமல் செய்து, பிறகு ஒரு பந்தை ஆசையாக ஆஃப் திசையில் கவர்ச்சி காட்டி இழுப்பார்கள் அதை வாரிக்கொண்டு அடிக்கப் போகும்போது எட்ஜ் ஆகி ஆட்டமிழந்து விடுவார்கள்.

கோலிக்கு அப்படித்தான் ஒரு பொறியை ஆஸ்திரேலியா அமைத்து வருகிறது, நேற்றும் அப்படித்தான். ஆனால் கோலி கார்டு எடுப்பதில் சிறிய மாற்றம் செய்தார். இம்முறை மிடில் ஸ்டம்பில் கார்ட் எடுத்தார். பந்து வீச பவுலர் வரும் போது ஆஃப் ஸ்டம்ப் நோக்கி நகர்வதினால் கோலியினால் ஆஃப் ஸ்டம்பை கவர் செய்யவும் முடிந்தது, பந்தை ஒன்று விட்டு விடலாம் அல்லது உடலிலிருந்து தள்ளி மட்டை செல்லாமல் உடலுக்கு நெருக்கமாக பந்திற்கு மட்டையைக் கொண்டு செல்லலாம். இதில் கோலி நேற்று பந்து பிட்ச் ஆகும் இடத்துக்கு உடலுக்கும் மட்டைக்கும் அதிக இடைவெளியில்லாமல் பார்த்துக் கொண்டு பந்துகளை மட்டையினால் சந்தித்தார். சில கவர் டிரைவ்கள், ஆஃப் டிரைவ்கள் அற்புதமாக அமைந்தன, மேலும் ஸ்விங்கை குறைக்கும் விதமாக நடந்து வந்தும் ஆடினார்.

இப்படியாக ஸ்மித் பொறியை முறியடித்த விராட் கோலி, ஸ்மித்தின் களவியூகத்தை மாற்றுமாறு செய்தார், ஒருநேரத்துக்குப் பிறகு ஆஃப் திசையில் 5, லெக் திசயில் 4 பீல்டர்கள் என்று ஸ்மித் வியூகத்தை மாற்ற வேண்டியிருந்தது. அப்படியும் ஒரு ஆஃப் ஸ்டம்ப் பந்தை மிக அழகாக, வலது கையை அழுத்திப்பிடித்து மிட்விக்கெட்டில் திருப்பி விட்டு பவுண்டரி அடித்தது அற்புதம். கொஞ்சம் கொஞ்சமாக மிடில் ஸ்டம்பிலிருந்து ஆஃப் ஸ்டம்புக்கு நகர்வதை நிறுத்திக் கொண்ட கோலி அதன் பிறகு தன் வாகிற்கு அனாயசமாக பேட் செய்ய முடிந்தது. கடைசியில் இன்ஸ்விங்கருக்கு தேர்ட் மேன் திசையில் திருப்பி விட ஆசைப்பட்டது தன்னம்பிக்கை என்பதை விட ஆக்ரோஷம் என்றே கூற வேண்டும்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

விளையாட்டு

19 hours ago

விளையாட்டு

1 day ago

விளையாட்டு

1 day ago

விளையாட்டு

1 day ago

விளையாட்டு

1 day ago

விளையாட்டு

2 days ago

விளையாட்டு

2 days ago

விளையாட்டு

2 days ago

விளையாட்டு

2 days ago

விளையாட்டு

3 days ago

விளையாட்டு

3 days ago

விளையாட்டு

3 days ago

விளையாட்டு

3 days ago

விளையாட்டு

3 days ago

விளையாட்டு

4 days ago

மேலும்