சென்னை: இங்கிலாந்து ஆல்ரவுண்டரான பென் ஸ்டோக்ஸ், ஐபிஎல் தொடரில் சிஎஸ்கே அணிக்காக இந்த சீசனில் ரூ.16.25 கோடிக்கு ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளார். போட்டி தொடங்க இன்னும் இரு தினங்களே உள்ள நிலையில் இடது முழங்காலில் ஏற்பட்டுள்ள காயத்தால் அவதிப்பட்டு வரும் பென் ஸ்டோக்ஸ் தொடக்க ஆட்டங்களில் பேட்ஸ்மேனாக மட்டுமே களமிறங்குவார் என சிஎஸ்கே அணியின் பேட்டிங் பயிற்சியாளர் மைக்கேல் ஹஸ்ஸி தெரிவித்துள்ளார்.
இதுதொடர்பாக அவர் கூறும்போது, “பென் ஸ்டோக்ஸின் உடற்தகுதி விஷயத்தில் சிஎஸ்கே மருத்துவக்குழுவும், இங்கிலாந்து கிரிக்கெட் வாரிய மருத்துவக்குழுவும் நெருக்கமாக இணைந்து செயலாற்றி வருகிறோம். ஐபிஎல் தொடரின் தொடக்க ஆட்டங்களில் பென் ஸ்டோக்ஸ் பேட்ஸ்மேனாக களமிறங்க தயாராக உள்ளார். அவர், பந்து வீச்சுக்கு தயாராவதை பொறுத்திருந்தான் பார்க்க வேண்டும்.
முழங்காலில் ஊசி செலுத்திக் கொண்டுள்ள ஸ்டோக்ஸ், இந்த வார தொடக்கத்தில் லேசான பந்து வீச்சு பயிற்சியில் ஈடுபட்டார். எனது புரிதல் என்னவென்றால் தொடரின் தொடக்கத்தின் சில ஆட்டங்களில் அவர், அதிகம் பந்துவீச மாட்டார். அவர் முழுமையாக பந்து வீச சில வாரங்கள் கூட ஆகலாம், எனினும் எனக்கு 100 சதவீதம் உறுதியாக தெரியவில்லை. ஆனால் ஒரு கட்டத்தில் அவரை பந்துவீச வைப்போம் என்று நம்புகிறேன்”என்றார்.
முக்கிய செய்திகள்
விளையாட்டு
1 day ago
விளையாட்டு
1 day ago
விளையாட்டு
1 day ago
விளையாட்டு
2 days ago
விளையாட்டு
2 days ago
விளையாட்டு
2 days ago
விளையாட்டு
3 days ago
விளையாட்டு
3 days ago
விளையாட்டு
3 days ago
விளையாட்டு
3 days ago
விளையாட்டு
4 days ago
விளையாட்டு
4 days ago
விளையாட்டு
4 days ago
விளையாட்டு
4 days ago
விளையாட்டு
5 days ago