IPL 2023 | காயத்தால் அவதிப்படும் வீரர்கள் யார், யார்? சிக்கலில் அணிகள்

By செய்திப்பிரிவு

சென்னை: வரும் 31-ம் தேதி ஐபிஎல் 16-வது சீசன் துவங்க உள்ளது. பத்து அணிகளும் இந்த சீசனுக்காக தங்களை ஆயத்தப்படுத்தி வருகின்றன. இருந்தாலும் பல அணிகளின் பிரதான வீரர்கள் காயத்தால் அவதிப்பட்டு வருகின்றனர். அதனால் அணிகளுக்கும் சிக்கல் எழுந்துள்ளது. மாற்று வீரரை அடையாளம் காண்பது, காயம்பட்ட வீரர் எப்போது ஃபிட்டாக அணிக்கு திரும்புவார், ஆடும் லெவனில் யாரை சேர்ப்பது என இந்த சிக்கல் நீள்கிறது.

இந்நிலையில், காயம் அடைந்துள்ள வீரர்களுக்கு சரியான மாற்று வீரரை அணிகள் களம் இறக்க வேண்டி உள்ளது. இதில் ஆடும் லெவனில் இடம்பெறும் வீரர்களும் அடங்குவர். இதில் சில அணிகளின் கேப்டனும் அடக்கம்.

காயமடைந்த வீரர்கள்

ஐபிஎல் சீசனில் பங்கேற்பதில் சந்தேகம்: இவர்கள் மட்டுமல்லாது சில வீரர்கள் உடற்தகுதி இல்லாமல் அவதிப்பட்டு வருவதாகவும் தகவல். அதனால் அவர்கள் இந்த சீசனில் பங்கேற்பதில் சந்தேகம் ஏற்பட்டுள்ளது.

மாற்று வீரர்கள்: கைல் ஜேமிசனுக்கு மாற்றாக சிசாண்டா மகாலாவை சிஎஸ்கே அறிவித்துள்ளது. வில் ஜேக்ஸுக்கு மாற்றாக பிரேஸ்வெல்லை ஆர்சிபி அறிவித்துள்ளது. பிரசித் கிருஷ்ணாவுக்கு மாற்றாக சந்தீப் சர்மா ராஜஸ்தானில் இணைந்துள்ளார். பேர்ஸ்டோவுக்கு மாற்றாக பஞ்சாப் அணியில் மேத்யூ ஷாட் இணைந்துள்ளார். பும்ரா, ரிச்சர்ட்சன், பந்த் ஆகியோருக்கு மாற்று வீரர்கள் அறிவிக்கப்படவில்லை.

பத்து அணிகளில் குஜராத் டைட்டன்ஸ் மற்றும் சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணிகளில் மட்டுமே எந்த வீரருக்கும் இப்போதைக்கு காயம் இல்லை என தெரிகிறது.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE