சென்னை: வரும் 31-ம் தேதி ஐபிஎல் 2023 சீசன் தொடங்க உள்ளது. இந்நிலையில், இன்று (மார்ச் 27) சென்னை சூப்பர் கிங்ஸ் அணி வீரர்கள் சேப்பாக்கம் மைதானத்தில் மேற்கொள்ளும் பயிற்சியை காண ரசிகர்களுக்கு அனுமதி அளிக்கப்படுவதாக சிஎஸ்கே நிர்வாகம் அறிவித்துள்ளது. இதை அறிந்த சென்னை அணி ரசிகர்கள் விசில் போட்டு இந்த செய்தியை வைரலாக்கி வருகின்றனர்.
விக்டோரியா ஹாஸ்டல் சாலையில் உள்ள சி,டி மற்றும் இ ஸ்டேண்ட்களில் ரசிகர்கள் இன்று அனுமதிக்கப்படுவார்கள் என தெரிவிக்கப்பட்டுள்ளது. இன்று காலை சென்னை - சேப்பாக்கம் மைதானத்தில் சிஎஸ்கே மற்றும் லக்னோ அணிகளுக்கு இடையிலான போட்டிக்கான டிக்கெட் விற்பனை நடைபெற்றது. ஒரு நபருக்கு 2 டிக்கெட் வீதம் இந்த விற்பனை நடைபெற்றது.
கரோனா தொற்று பரவல் காரணமாக ஐபிஎல் போட்டிகள் குறிப்பிட்ட சில இடங்களில் மட்டுமே நடத்தப்பட்டு வந்தது. இந்நிலையில், நீண்ட நாட்களுக்கு பிறகு பத்து அணிகளும் தங்களது சொந்த மைதானம் மற்றும் பிற அணிகளின் மைதானங்களில் நடைபெறும் போட்டிகளில் இந்த சீசனில் விளையாட உள்ளன. அந்த வகையில் சென்னை - சேப்பாக்கம் மைதானத்தில் 7 போட்டிகள் நடைபெற உள்ளன. இந்தச் சூழலில் ரசிகர்களுக்கு வீரர்கள் மேற்கொள்ளும் பயிற்சியை காண அனுமதி அளிக்கப்பட்டுள்ளது.
» ‘ஆர்ஆர்ஆர்’ படத்துக்காக ஆஸ்கர் பரப்புரைக்கு ஆன செலவு என்ன? - ராஜமவுலி மகன் விளக்கம்
» பிசிசிஐ வீரர்கள் ஒப்பந்தம்: ரோகித், கோலியுடன் உயரிய நிலையில் ஜடேஜா!
முக்கிய செய்திகள்
விளையாட்டு
2 hours ago
விளையாட்டு
5 hours ago
விளையாட்டு
5 hours ago
விளையாட்டு
1 day ago
விளையாட்டு
1 day ago
விளையாட்டு
1 day ago
விளையாட்டு
1 day ago
விளையாட்டு
1 day ago
விளையாட்டு
1 day ago
விளையாட்டு
2 days ago
விளையாட்டு
2 days ago
விளையாட்டு
3 days ago
விளையாட்டு
3 days ago
விளையாட்டு
4 days ago
விளையாட்டு
4 days ago