உலக மகளிர் குத்துச்சண்டை சாம்பியன்ஷிப்பில் 2-வது தங்கம்: 81 கிலோ பிரிவில் சாவிட்டி சாம்பியன்!

By செய்திப்பிரிவு

புதுடெல்லி: நடப்பு உலக மகளிர் குத்துச்சண்டை சாம்பியன்ஷிப் தொடரில் 81 கிலோ எடைப் பிரிவில் சாம்பியன் பட்டம் வென்றுள்ளார் இந்தியாவின் சாவிட்டி. சீனாவின் லினா வாங்கை அவர் இறுதிப் போட்டியில் வீழ்த்தியுள்ளார். லைட் ஹெவிவெயிட் பிரிவில் அவர் இந்த பட்டத்தை வென்றுள்ளார்.

அரையிறுதிச் சுற்றில் சாவிட்டி, ஆஸ்திரேலியாவைச் சேர்ந்த கிரீன்ட்ரீ என்பவருடன் மோதினார். இந்தப் போட்டியில் பெரும்பாலும் களத்தின் மையப் பகுதியிலேயே இருவரும் தங்கள் திறமையை காட்டிக் கொண்டிருந்தனர். முடிவில் சாவிட்டி 4-3 என்ற கணக்கில் வெற்றி பெற்று இறுதிக்கு முன்னேறி இருந்தார்.

முன்னதாக, இன்றைய தினம் நடைபெற்ற 48 கிலோ எடைப் பிரிவுக்கான இறுதிப் போட்டியில் இந்தியாவின் நீது சாம்பியன் பட்டம் வென்றிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது. இந்தியா சார்பில் நாளைய தினம் 50 கிலோ எடைப் பிரிவில் நிகத் ஜரீன் மற்றும் 75 கிலோ எடைப் பிரிவில் லோவ்லினா ஆகியோர் இறுதிப் போட்டியில் களம் காண உள்ளனர்.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE