பாஸல்: சுவிஸ் ஓபன் பாட்மிண்டன் தொடரில் நடப்பு சாம்பியனான இந்தியாவின் பி.வி.சிந்து 2-வது சுற்றுடன் வெளியேறினார்.
சுவிட்சர்லாந்தின் பாஸல் நகரில் நடைபெற்று வரும் இந்தத் தொடரில் மகளிர் ஒற்றையர் பிரிவு 2-வது சுற்றில் இரு முறை ஒலிம்பிக்கில் பதக்கம் வென்றவரும் நடப்பு சாம்பியனுமான இந்தியாவின் பி.வி.சிந்து, 38-ம் நிலை வீராங்கனையான இந்தோனேஷியாவின் புத்ரி குசுமா வர்தானியை எதிர்த்து விளையாடினார். இதில் சிந்து 15-21, 21-12, 18-21 என்ற செட் கணக்கில் தோல்வி அடைந்து வெளியேறினார்.
ஆடவருக்கான இரட்டையர் பிரிவில் இந்தியாவின் சாட்விக் சாய்ராஜ் ராங்கி ரெட்டி, ஷிராக் ஷெட்டி ஜோடி 2-21, 21-17, 28-26 என்ற செட் கணக்கில் போராடி தைவானின் ஃபாங்-சிஹ் லீ, ஃபாங்-ஜென் லீ ஜோடியை தோற்கடித்து கால் இறுதி சுற்றுக்கு முன்னேறியது. கால் இறுதி சுற்றில் சாட்விக் சாய்ராஜ், ஷிராக் ஷெட்டி ஜோடியானது டென்மார்க்கின் ஜெப்பே பே, லாஸ்ஸே மோல்ஹெட் ஜோடியை எதிர்கொள்கிறது.
ஆடவருக்கான ஒற்றையர் பிரிவு 2-வது சுற்றில் இந்தியாவின் ஹெச்.எஸ்.பிரனாய் 8-21, 8-21 என்ற நேர் செட்டில் பிரான்ஸின் கிறிஸ்டோ போபோவிடம் தோல்வி அடைந்தார். மற்றொரு இந்திய வீரரான கிடாம்பி காந்த் 20-22, 17-21 என்ற நேர் செட்டில் ஹாங் காங்கின் செயுக் யி லீயிடம் போராடி வீழ்ந்தார்.
» உலக மகளிர் குத்துச்சண்டை சாம்பியன்ஷிப் - இறுதி சுற்றில் 4 இந்திய வீராங்கனைகள்
» WPL 2023 எலிமினேட்டர் | உ.பி. வாரியர்ஸை வீழ்த்தி பைனலுக்கு முன்னேறியது மும்பை இந்தியன்ஸ்
முக்கிய செய்திகள்
விளையாட்டு
4 hours ago
விளையாட்டு
22 hours ago
விளையாட்டு
1 day ago
விளையாட்டு
1 day ago
விளையாட்டு
1 day ago
விளையாட்டு
1 day ago
விளையாட்டு
2 days ago
விளையாட்டு
2 days ago
விளையாட்டு
2 days ago
விளையாட்டு
2 days ago
விளையாட்டு
2 days ago
விளையாட்டு
2 days ago
விளையாட்டு
3 days ago
விளையாட்டு
3 days ago
விளையாட்டு
3 days ago