ஐபிஎல் டி20 கிரிக்கெட் - ‘அஜிங்க்ய ரஹானேவின் தமிழ்’

By செய்திப்பிரிவு

சென்னை: ஐபிஎல் டி 20 கிரிக்கெட் திருவிழா வரும் 31-ம் தேதி தொடங்க உள்ள நிலையில் பல்வேறு அணிகள் பயிற்சி முகாம்களை தீவிரப்படுத்தி உள்ளன. இதன் ஒரு கட்டமாக சென்னை சூப்பர் கிங்ஸ் இந்த மாத தொடக்கத்திலேயே சேப்பாக்கம் மைதானத்தில் தனது பயிற்சிகளை தொடங்கியது.

இந்த சீசனில் இந்திய வீரர் அஜிங்க்ய ரஹானே சிஎஸ்கே அணிக்காக ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளார்.

இந்நிலையில் இன்ஸ்டாகிராமில் சிஎஸ்கே அணி நிர்வாகம் ரஹானேவின் வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளது.

அதில் ரஹானேவிடம் 3 வாரங்களில் தமிழ் கற்றுக்கொள்ளுங்கள் என்ற வாசகமும் பதிவிடப்பட்டுள்ளது. அந்த வீடியோவில் ரஹானே, “வணக்கம், சாப்பிட்டீங்களா, நீங்க எப்படி இருக்கீங்க, போய்ட்டு வாரேன்” என நான்கு வார்த்தைகளை தமிழில் கூறுகிறார்.

இந்த வீடியோ சமூக வலைதளங்களில் சிஎஸ்கே ரசிகர்களால் அதிகம் பகிரப்பட்டு வருகிறது.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE