100 சதவீத திறனை வெளிப்படுத்தினால் மட்டுமே இந்தியாவை வீழ்த்த முடியும் என ஆஸ்திரேலிய கிரிக்கெட் அணியின் தொடக்க வீரர் ஆரோன் பின்ச் தெரிவித்துள்ளார்.
ஆஸ்திரேலிய கிரிக்கெட் அணியின் தொடக்க வீரரான ஆரோன் பின்ச், இந்தியாவுக்கு எதிராக கொல்கத்தாவில் நடைபெற்ற 3-வது ஒருநாள் போட்டியில் அதிரடியாக விளையாடி 124 ரன்கள் விளாசினார். இந்த ஆட்டத்தில் ஆஸ்திரேலிய அணி 293 ரன்கள் குவித்த போதிலும் தோல்வியை தவிர்க்க முடியாமல் போனது. விளைவு 5 ஒருநாள் போட்டிகள் கொண்ட தொடரை ஆஸ்திரேலிய அணி 0-3 என பறிகொடுத்துள்ளது. கொல்கத்தா தோல்வியானது ஆஸ்திரேலிய அணி வெளிநாட்டு மண்ணில் கடைசியாக விளையாடிய 13 ஆட்டங்களில் கிடைத்த 11-வது தோல்வியாகும்.
இந்நிலையில் ஆரோன் பின்ச், ஆஸ்திரேலிய கிரிக்கெட் வாரிய இணையதளத்துக்கு அளித்துள்ள பேட்டியில் கூறியிருப்பதாவது:
சிறந்த ஆட்டத்தையே மேற்கொள்கிறோம். ஆனால் போட்டியை சரியான முறையில் அணுக வேண்டும் என்றே கருதுகிறேன். வெற்றி பெறுவதற்கான வாய்ப்பு கிடைக்கும்போது, அதை தவறவிடக்கூடாது. இந்தியாவுக்கு எதிரான முதல் இரு ஆட்டங்களிலும் நாங்கள் சிறந்த நிலையில் இருந்தோம். இந்திய அணிக்கு நீங்கள் வாய்ப்பை கொடுத்து விட்டால் 10 ஆட்டங்களில் 9-ல் வீழ்த்தி விடுவார்கள்.
இங்குள்ள சூழ்நிலைகளில் இந்திய அணியை வீழ்த்த வேண்டுமானால் 100 சதவீத திறனுடன் விளையாட வேண்டும். 90 சதவீத திறமையுடன் விளையாடினாலும், அது அங்கு போதுமானதாக இருக்காது. தற்போதைய சூழ்நிலையில் இரு அணிகள் இடையிலான இடைவெளி வெளிப்படையாக உள்ளது. இதை இந்திய அணி நிருபித்துள்ளது. தொடரில் இந்தியா 3-0 என முன்னணில் உள்ளது.
அவர்கள் உலகின் நம்பர் ஒன் அணியாகவும் திகழ்கின்றனர். இடைவெளியை குறைக்கவும், நாங்கள் விரும்பும் வழியில் முடிவுகள் கிடைக்கவும் வேண்டுமானால் அணியில் உள்ள பழுதுகளை சரிசெய்ய வேண்டும். பெரிய அளவில் தோல்விகளை சந்திக்கும் போது நம்பிக்கையுடன் செயல்படுவது எளிதானது அல்ல. வெளிநாடுகளில் நடைபெறும் போட்டிகளில் எல்லா அணிகளும் வெற்றி பெறவே முயற்சிக்கும். தோல்வியடைய ஆரம்பிக்கும் போது, நீங்கள் உங்களது நம்பிக்கையை இழப்பீர்கள்.
இவ்வாறு ஆரோன் பின்ச் கூறினார்.
முக்கிய செய்திகள்
விளையாட்டு
1 day ago
விளையாட்டு
1 day ago
விளையாட்டு
1 day ago
விளையாட்டு
2 days ago
விளையாட்டு
2 days ago
விளையாட்டு
2 days ago
விளையாட்டு
3 days ago
விளையாட்டு
3 days ago
விளையாட்டு
3 days ago
விளையாட்டு
3 days ago
விளையாட்டு
4 days ago
விளையாட்டு
4 days ago
விளையாட்டு
4 days ago
விளையாட்டு
4 days ago
விளையாட்டு
5 days ago