ஆஸ்திரேலிய அணிக்கு எதிரான 2-வது டெஸ்ட் போட்டியின் முதல் நாள் ஆட்டத்தில் வங்கதேச அணி 6 விக்கெட்கள் இழப்புக்கு 253 ரன்கள் சேர்த்தது. கேப்டன் முஷ்பிகுர் ரஹிம், சபிர் ரஹ்மான் அரை சதம் அடித்தனர்.
ஆஸ்திரேலிய கிரிக்கெட் அணி வங்கதேசத்தில் சுற்றுப்பயணம் செய்து விளையாடி வருகிறது. இரு அணிகள் இடையிலான 2 டெஸ்ட் போட்டிகள் கொண்ட தொடரில் டாக்காவில் நடைபெற்ற முதல் ஆட்டத்தில் வங்கதேசம் 20 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. இதனால் அந்த அணி தொடரில் 1-0 என முன்னிலை வகிக்கும் நிலையில் 2-வது டெஸ்ட் போட்டி சிட்டகாங்கில் நேற்று தொடங்கியது. டாஸ் வென்ற வங்கதேச அணியின் கேப்டன் முஷ்பிகுர் ரஹிம், பேட்டிங்கை தேர்வு செய்தார்.
ஆஸ்திரேலிய அணி நாதன் லயன், ஆஷ்டன் அகர், ஸ்டீவ் ஓ கீஃப் ஆகிய 3 சுழற்பந்து வீச்சாளர்களுடன் களமிறங்கியது. நாதன் லயன் சுழலில் வங்கதேச அணி சீரான இடைவேளையில் விக்கெட்களை பறிகொடுத்தது. அவரது பந்து வீச்சில் தமிம் இக்பால் 9, இம்ருல் கெய்ஸ் 4, சவுமியா சர்க்கார் 33, மொமினுல் ஹக் 31 ரன்கள் எடுத்த நிலையில் ஆட்டமிழந்தனர். அடுத்து களமிறங்கிய ஷகிப் அல் ஹசன் 24 ரன்கள் எடுத்த நிலையில் ஆஷ்டன் அகர் பந்தில் வெளியேறினார்.
117 ரன்களுக்கு 5 விக்கெட்களை இழந்த நிலையில் முஷ்பிகுர் ரஹிமுடன் இணைந்த சபிர் ரஹ்மான் அணியை சரிவில் இருந்து மீட்க போராடினார். இருவரும் ஆஸ்திரேலிய பந்து வீச்சை நேர்த்தியாக எதிர்கொண்டு விளையாடி அரை சதம் அடித்தனர். சபிர் ரஹ்மான் 113 பந்துகளில், 6 பவுண்டரிகள், ஒரு சிக்ஸருடன் 66 ரன்கள் எடுத்த நிலையில் நாதன் லயன் பந்தில், ஸ்டம்பிங் ஆனார். இந்த ஜோடி 6-வது விக்கெட்டுக்கு 105 ரன்கள் சேர்த்தது.
நேற்றைய முதல் நாள் ஆட்டத்தின் முடிவில் வங்கதேசம் 90 ஓவர்களில் 6 விக்கெட்கள் இழப்புக்கு 253 ரன்கள் சேர்த்தது. முஷ்பிகுர் ரஹிம் 62, நசீர் ஹோசைன் 19 ரன்களுடன் களத்தில் இருந்தனர். ஆஸ்திரேலிய அணித் தரப்பில் நாதன் லயன் 5, ஆஷ்டன் அகர் ஒரு விக்கெட் வீழ்த்தியிருந்தனர்.
முக்கிய செய்திகள்
விளையாட்டு
52 mins ago
விளையாட்டு
2 hours ago
விளையாட்டு
12 hours ago
விளையாட்டு
16 hours ago
விளையாட்டு
17 hours ago
விளையாட்டு
20 hours ago
விளையாட்டு
21 hours ago
விளையாட்டு
1 day ago
விளையாட்டு
1 day ago
விளையாட்டு
1 day ago
விளையாட்டு
1 day ago
விளையாட்டு
1 day ago
விளையாட்டு
1 day ago
விளையாட்டு
1 day ago
விளையாட்டு
1 day ago