IPL 2023 போட்டிகளின் வர்ணனையாளர்கள் யார், யார்?

By செய்திப்பிரிவு

சென்னை: எதிர்வரும் ஐபிஎல் 2023 சீசனுக்கான போட்டிகளை வர்ணனை செய்யும் வர்ணனையாளர்கள் விவரம் வெளியாகி உள்ளது. இதில் ஆரோன் ஃபின்ச், முரளி விஜய், ஸ்ரீசாந்த் போன்ற முன்னாள் வீரர்களும் அடங்குவர்.

வரும் 31-ம் தேதி முதல் மே 28-ம் தேதி வரையில் நடைபெற உள்ளது. மொத்தம் 74 போட்டிகள். 10 அணிகள் இதில் பங்கேற்கின்றன. அனைத்து அணிகளும் தங்களது சொந்த மைதானம் மற்றும் பிற அணிகளின் மைதானத்தில் இந்த சீசனில் விளையாடுகின்றன. சென்னை - சேப்பாக்கம் மைதானத்திலும் போட்டிகள் நடைபெறுகின்றன.

ஆங்கில வர்ணனையாளர்கள்: சுனில் கவாஸ்கர், ஜேக் கல்லில், மேத்யூ ஹேடன், கெவின் பீட்டர்சன், ஆரோன் ஃபின்ச், டாம் மூடி, பால் காலிங்வுட், டேனியல் வெட்டோரி, டேனியல் மாரிசன், டேவிட் ஹஸ்ஸி.

தமிழ் வர்ணனையாளர்கள்: கிருஷ்ணமாச்சாரி ஸ்ரீகாந்த், பத்ரிநாத், லக்‌ஷ்மிபதி பாலாஜி, சடகோபன் ரமேஷ், முரளி விஜய், ஆர்ஜே பாலாஜி, யோமகேஷ், முத்துராமன், கே.வி சத்தியநாராயணன், திருஷ் காமினி ஆகியோர் வர்ணனையாளர்களாக செயல்பட உள்ளனர். மலையாள மொழியில் ஸ்ரீசாந்த் போட்டிகளை வர்ணனை செய்கிறார். இந்தியில் சேவாக், ஹர்பஜன் சிங், இர்பான் பதான், யூசுப் பதான், மிதாலி ராஜ் ஆகியோர் வர்ணனையாளர்களாக செயல்பட உள்ளனர்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

விளையாட்டு

21 hours ago

விளையாட்டு

21 hours ago

விளையாட்டு

23 hours ago

விளையாட்டு

2 days ago

விளையாட்டு

2 days ago

விளையாட்டு

2 days ago

விளையாட்டு

3 days ago

விளையாட்டு

3 days ago

விளையாட்டு

3 days ago

விளையாட்டு

3 days ago

விளையாட்டு

3 days ago

விளையாட்டு

4 days ago

விளையாட்டு

4 days ago

விளையாட்டு

4 days ago

விளையாட்டு

5 days ago

மேலும்