விசாகப்பட்டினம்: இந்தியாவுக்கு எதிரான 2-வது சர்வதேச ஒருநாள் கிரிக்கெட் போட்டியில் ஆஸ்திரேலிய அணி 10 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. மிட்செல் ஸ்டார்க் அபாரமாக பந்துவீசி இந்திய அணியை நிலைகுலையச் செய்தார்.
இந்தியா, ஆஸ்திரேலிய அணிகளுக்கு இடையே தற்போது ஒருநாள் கிரிக்கெட் போட்டி தொடர் நடைபெற்று வருகிறது. மும்பையில் நடைபெற்ற முதல் ஆட்டத்தில் இந்திய அணி வெற்றி பெற்று 1-0 என்ற கணக்கில்முன்னிலை வகித்தது. இந்நிலையில் 2-வது ஆட்டம் ஆந்திர மாநிலம் விசாகப்பட்டினத்தில் நேற்று நடைபெற்றது.
டாஸில் வெற்றி பெற்ற ஆஸ்திரேலிய அணியின் கேப்டன் ஸ்டீவ் ஸ்மித், இந்தியஅணியை பேட்டிங் செய்யஅழைத்தார். இந்திய அணியில் 2மாற்றங்கள் செய்யப்பட்டிருந்தன. இஷன் கிஷன், ஷர்துல் தாக்குர் ஆகியோருக்குப் பதிலாகரோஹித் சர்மா, அக்சர் படேல்இடம் பெற்றனர். அதேபோல் ஆஸ்திரேலிய அணியில்கிளென் மேக்ஸ்வெல், இங்லிஸ் ஆகியோருக்குப் பதிலாக நாதன் எல்லிஸ், அலெக்ஸ் கேரே இடம்பெற்றனர்.
தொடக்க ஆட்டக்காரர்களாக கேப்டன் ரோஹித், ஷுப்மன்கில்களமிறங்கினார். முதல் ஓவரிலேயேஷுப்மன்கில்லை ஆட்டமிழக்கச் செய்தார் ஸ்டார்க். ரன் கணக்கைத் தொடங்காமலேயே கில் ஆட்டமிழந்தார்.
அதன் பிறகு, ஸ்டார்க் பந்துவீச்சில் அனல் பறந்தது. 5-வது ஓவரின் 4-வது பந்தில் ரோஹித்தை ஆட்டமிழக்கச் செய்த ஸ்டார்க், 5-வது பந்தில் சூர்யகுமாரை எல்பிடபிள்யூ முறையில் பெவிலியனுக்கு அனுப்பினார்.
முதல் ஆட்டத்தைப் போலவே இந்தமுறையும், முதல் பந்திலேயே ஆட்டமிழந்தார் சூர்யகுமார் யாதவ். இதனால்3 விக்கெட் இழப்புக்கு 32 ரன்கள் என்ற மோசமான நிலைக்கு இந்திய அணி தள்ளப்பட்டது. அதன் பிறகு சீரான இடைவெளியில் இந்திய விக்கெட்கள் விழுந்த வண்ணம் இருந்தன.
கே.எல். ராகுல் 9, ஹர்திக் பாண்டியா 1, ரவீந்திர ஜடேஜா 16, மொகமது ஷமி 0, மொகமது சிராஜ் 0, குல்தீப் யாதவ் 4 ரன்கள் சேர்த்து வீழ்ந்தனர்.
அணியில் அதிகபட்சமாக விராட் கோலி 31 ரன்கள் சேர்த்தார். அவருக்கு அடுத்தபடியாக அக்சர் படேல் 29 ரன்கள் சேர்த்து ஆட்டமிழக்காமல் இருந்தார். 26 ஓவர்களில் 117 ரன்களுக்கு இந்திய அணியின் இன்னிங்ஸ் முடிவுக்கு வந்தது. மிட்செல் ஸ்டார்க 5, சீன் அபோட் 3, நாதன் எல்லிஸ் 2 விக்கெட்களைச் சாய்த்தனர்.
பின்னர் ஆஸ்திரேலிய அணி 118 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் ஆஸ்திரேலிய அணி விளையாடத் தொடங்கியது.
தொடக்க ஆட்டக்காரர்களாக மிட்செல் ஸ்டார்க்கும், டிராவிஸ் ஹெட்டும் களமிறங்கினர். இருவரும் தொடக்கம் முதலே அதிரடியாக விளையாடி ரன்களைக் குவித்தனர். இதனால் பந்துகள் பவுண்டரிக்கும், சிக்ஸருக்கும் பறந்தன. 11 ஓவர்களிலேயே விக்கெட் இழப்பின்றி 121 ரன்கள் எடுத்து ஆஸ்திரேலிய அணி 10 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. டிராவிஸ் ஹெட் 30 பந்துகளில் 51 ரன்களும், மிட்செல் மார்ஷ் 36 பந்துகளில் 66 ரன்களும்குவித்து அணிக்கு வெற்றி தேடித் தந்தனர். ஸ்டார்க் ஆட்டநாயகனாக தேர்வானார். இந்திய அணியின் இன்னிங்ஸ் 26 ஓவர்களிலும், ஆஸ்திரேலிய அணியின் வெற்றி இலக்கு 11 ஓவர்களிலும் ஆக மொத்தம் 37 ஓவர்களிலேயே ஆட்டம் முடிவுக்கு வந்தது. 234 பந்துகளை மீதம் வைத்து ஆஸ்திரேலிய அணி இந்த ஆட்டத்தில் வெற்றி கண்டது குறிப்பிடத்தக்கது.
இதையடுத்து ஒரு நாள் தொடர் 1-1 என்ற கணக்கில் சமநிலையில் உள்ளது. இவ்விரு அணிகளிடையிலான 3-வது மற்றும் கடைசி ஒரு நாள் கிரிக்கெட் போட்டி சென்னை சேப்பாக்கம் எம்.ஏ. சிதம்பரம் மைதானத்தில் வரும் 22-ம் தேதி நடைபெறவுள்ளது.
3ஆஸ்திரேலிய அணிக்கெதிராக 3-வது குறைந்தபட்ச ஸ்கோரை இந்திய அணி பதிவு செய்துள்ளது. இதற்கு முன்பு சிட்னியில் (1981-ம் ஆண்டு) 63 ரன்களுக்கும், சிட்னியில் (2000-ம் ஆண்டு) 100 ரன்களுக்கும் இந்திய அணி ஆட்டமிழந்துள்ளது. தற்போது 117 ரன்களுக்கு ஆட்டமிழந்து 3-வது குறைந்தபட்ச ஸ்கோரைப் பதிவு செய்துள்ளது.
முக்கிய செய்திகள்
விளையாட்டு
1 day ago
விளையாட்டு
1 day ago
விளையாட்டு
1 day ago
விளையாட்டு
2 days ago
விளையாட்டு
2 days ago
விளையாட்டு
2 days ago
விளையாட்டு
2 days ago
விளையாட்டு
2 days ago
விளையாட்டு
3 days ago
விளையாட்டு
3 days ago
விளையாட்டு
3 days ago
விளையாட்டு
3 days ago
விளையாட்டு
4 days ago
விளையாட்டு
4 days ago
விளையாட்டு
4 days ago