பேட்டிங்கில் தோனி செய்த இரண்டு முக்கிய மாற்றங்கள்

By ஆர்.முத்துக்குமார்

தோனிக்கு அழுத்தம் அதிகரித்துள்ளதால் அவர் தன் பேட்டிங் குறித்த ஒரு தன்னுணர்வுக்கு வந்தடைந்துள்ளார். பொதுவாக தோனி பேட்டிங்கில் சிறந்த உத்திக்கு பெயர் பெற்றவர் இல்லை. அவரே இதனை ஒப்புக் கொண்டுள்ளார்.

அதிகமாக ஸ்விங் ஆனால் நடந்து வந்து ஆடுவார், அவ்வளவுதான் அவருக்குத் தெரிந்த உத்தி. சிக்சர்களை தன் இஷ்டத்துக்கு அடிக்கும் தோனி, ஒன்று இரண்டு என்று விரைவாக ஓடி ரன் சேர்ப்பதை தனது பினிஷிங் ரோலுக்காகப் பழகிக் கொண்டார்.

இதனால் பவுண்டரி அடிக்க வேண்டிய பந்துகளைக் கூட தோனி காலை நீட்டி கிண்டி விட்டு ஒன்று, அல்லது இரண்டு ரன்களை எடுப்பது என்று ஆடியதால் அவரிடமிருந்து கொஞ்சம் கொஞ்சமக பெரிய ஸ்ட்ரோக்குகள் காணாமல் போயின. பவுலர்கள் கடைசி தருணங்களில் தோனிக்கு வீசுவதைக் கனவில் கூட விரும்பாதவர்கள், திடீரென தோனிக்கு வீச நான், நீ என்று போட்டி போடும் அளவுக்கு அவரது பேட்டிங்கில் சரிவு ஏற்பட்டது. மே.இ.தீவுகளுக்கு எதிரான டி20யில் கடைசியில் பினிஷ் செய்ய முடியாமல் ஷார்ட் தேர்ட் மேனில் கேட்ச் கொடுத்தது, சமீபத்தில் மே.இ.தீவுகளில் சிறிய இலக்கைக் கூட பினிஷ் செய்ய முடியாமல் அவுட் ஆகி விரக்தியடைந்தது என்று நாம் பார்த்த்து வருகிறோம். இது மட்டுமல்ல இதற்கு முன்னரும் கூட சில போட்டிகளில் தோனி திணறியதையும் பார்த்திருக்கிறோம்.

இந்நிலையில் ‘பினிஷர்’ பினிஷ் ஆகி விட்டார் என்ற ரீதியில் விமர்சனங்கள் எழ தற்போது இலங்கைத் தொடரில் 3 நாட் அவுட்களுடன் உறுதியான ஒரு பேட்டிங்கை காட்டி வருகிறார்.

இதற்காக அவர் 2 மாற்றங்களைச் செய்து கொண்டார். ஒன்று சச்சின், சேவாக், கங்குலி ஆகியோர் அணியும் இரண்டு ஸ்ட்ராப்கள் மட்டுமே உள்ள பேடிலிருந்து வழக்கமான, பாரம்பரியமான கால்காப்புக்கு அவர் மாறியுள்ளார், இந்த கால்காப்புகளில் 3 ஸ்ட்ராப்கள் இருக்கும்.

இது என்ன மாற்றத்தை ஏற்படுத்தியிருக்கும் என்று கேட்கலாம். சச்சின், சேவாக், இதுவரை தோனி அணிந்த கால்காப்புகள் மற்ற கால்காப்புகளைக் காட்டிலும் எடை குறைவானது, லேசானது. பாரம்பரியமான கால்காப்புகளில் 3 ஸ்ட்ராப்கள் இருக்கும். முழங்காலை இன்னும் கொஞ்சம் சுதந்திரமாகப் பயன்படுத்தி ஆட உதவக்கூடியது பாரம்பரியமான கால்காப்புகளே.

ஆகாஷ் சோப்ரா என்ன கூறுகிறார் என்றால், முன் முழங்காலை எளிதில் மடக்கி நீட்டி ஆடுவதற்கு சச்சின், சேவாக் ரக கால்காப்புகள் கொஞ்சம் சிரமம் கொடுக்கும் காரணம் அதன் முதல் ஸ்ட்ராப் ஏறக்குறைய முழங்காலுக்கு நேர் பின்னால் இருக்கும். ஐபிஎல் போட்டிகளில் தோனி தனது முன் முழங்காலை நன்றாக நீட்டி, மடக்கி ஆடுவதற்கு முயற்சி செய்ததாகவும் ஆகாஷ் சோப்ரா தெரிவித்தார். ஸ்பின்னர்களை ஆடும் போது மரபான கால்காப்புகள் முழங்காலை நன்றாகப் பயன்படுத்த உதவுகின்றன. புதிய வகை கால்காப்புகளினால் அவரால் ஸ்பின்னர்களை வொர்க் செய்து சிங்கிள்கள், இரண்டுகள் எடுக்க முடியாமல் திணறும் நிலை ஏற்பட்டது. தற்போது இந்தக் கால்காப்புகளை அவர் மாற்றியவுடன் கொஞ்சம் அவரது கால்பிரயோகங்களில் மாற்றம் தெரிகிறது.

இன்னொரு மாற்றம் என்னவெனில் தோனி பெரும்பாலும் பவுலர்கள் ஓடி வரும்போது மாற்றமில்லாத ஒரு நிலையான ஸ்டான்ஸைத்தான் விரும்புவார். கண்களைக் கூட சிமிட்ட மாட்டார். இதனால் தொடக்க நகர்வு இல்லாமல் போனது. தற்போது வலது கால் லெக் ஸ்டம்பிலிருந்து ஆஃப் ஸ்டம்புக்கு நகர்கிறது, பேக் அண்ட் அக்ராஸ் என்று இதனைக் கூறுவதுண்டு. அதன் பிறகு முன்னங்காலை நகர்த்தி ஆடுவது, இதைத்தான் சச்சின் டெண்டுல்கர் தனது ஆக்ரோஷ ஆரம்ப நாட்களில் கடைபிடித்தார், சச்சின் மட்டுமல்ல வேகப்பந்து வீச்சில் களத்திலேயே ஆடிப்பழகிய யாராக இருந்தாலும் பேக் அண்ட் அக்ராஸ் உத்தியைக் கடைபிடிப்பர். சச்சின் டெண்டுல்கர் ஆடிய முதல் 3-4 டெஸ்ட் தொடர்கள் அயல்நாட்டில் குறிப்பாக பாகிஸ்தான், நியூஸிலாந்து, இங்கிலாந்து, ஆஸ்திரேலியா ஆகிய வேகப்பந்து வீச்சாளர்கள் அதிகம் இருந்த நாடுகளில் நடந்தது, இதனால் வேகப்பந்து வீச்சை திறம்பட விளையாட சச்சின் இந்த பேக் அண்ட் அக்ராஸ் உத்தியை, அதாவது வலது காலை ஆஃப் ஸ்டம்ப் நோக்கி நகர்த்தி பிறகு தேவைப்பட்டால் முன்னங்காலைக் கொண்டு வரும் உத்தியைக் கடைபிடித்து வெற்றி கண்டார்.

இதைத்தான் தோனி தற்போது செய்து வருகிறார். மீண்டும் ஆகாஷ் சோப்ரா என்ன கூறுகிறார் என்றால், “பவுலர்கள் வீச வரும்போது உடல் நிலையாக இருப்பதை விட ஒரு நகர்வு இருந்தால் பந்துக்கு சரியாக வினையாற்ற முடிகிறது” என்கிறார். விலா எலும்புக்கு பந்துகளை வீசும் பவுலர்களை எதிர்கொள்ள இந்த பேக் அண்ட் அக்ராஸ் உத்தி கைகொடுக்கும் என்கிறார் ஆகாஷ் சோப்ரா. இந்த நகர்வினால்தான் தோனி தற்போது ஷார்ட் பிட்ச் பந்துகளை மிட் விக்கெட்டில் வெளுக்கிறார் முன்னதாக சற்றே இத்தகைய பந்துகளில் ரன் எடுக்கத் திணறினார். பந்தை முன் கூட்டியே ஆட முயற்சி செய்வதன் ரிஸ்கை தவிர்க்க தோனி தற்போது பந்து வந்தவுடன் தேவையான இடத்தில் பந்தை அனுப்ப தற்போது இந்த உத்தியைக் கடைபிடித்து வருகிறார்.

கடைசியில் கிரிக்கெட் ஆட்டத்திற்கு உத்தி மிகவும் முக்கியம் என்ற தன்னுணர்வுக்கு தோனி வந்துள்ளார்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

விளையாட்டு

46 mins ago

விளையாட்டு

20 hours ago

விளையாட்டு

1 day ago

விளையாட்டு

1 day ago

விளையாட்டு

1 day ago

விளையாட்டு

2 days ago

விளையாட்டு

2 days ago

விளையாட்டு

2 days ago

விளையாட்டு

2 days ago

விளையாட்டு

3 days ago

விளையாட்டு

3 days ago

விளையாட்டு

3 days ago

விளையாட்டு

3 days ago

விளையாட்டு

3 days ago

விளையாட்டு

3 days ago

மேலும்