புதுடெல்லி: சர்வதேச ஹாக்கி கூட்டமைப்பு வெளியிட்டுள்ள ஆடவருக்கான ஹாக்கி தரவரிசை பட்டியலில் இந்திய அணி இரு இடங்கள் முன்னேறி 4-வது இடத்தை பிடித்துள்ளது.
சர்வதேச ஹாக்கி கூட்டமைப்பின் புரோ ஹாக்கி லீக்கில் இந்தியஅணியானது ஜெர்மனி, ஆஸ்திரேலிய அணிகளுக்கு எதிரான 4 ஆட்டங்களிலும் வெற்றி கண்டிருந்தது. இதனால் தரவரிசை பட்டியலில் 6-வது இடத்தில் இருந்து 4-வது இடத்துக்கு முன்னேற்றம் கண்டுள்ளது. உலக சாம்பியனான ஜெர்மனி அணி இந்தியாவிடம் இரு ஆட்டங்களில் தோல்விஅடைந்ததால் முதலிடத்தை இழந்து 3-வது இடத்துக்கு தள்ளப்பட்டது.
உலகக் கோப்பை தொடரில் வெண்கலப் பதக்கம் கைப்பற்றிய நெதர்லாந்து முதலிடத்துக்கு முன்னேறி உள்ளது. வெள்ளிப் பதக்கம் வென்ற பெல்ஜியம் 2-வதுஇடம் வகிக்கிறது. புரோ ஹாக்கிலீக்கில் அடுத்தடுத்த இரு தோல்விகளால் ஆஸ்திரேலிய அணி ஒரு இடத்தை இழந்து 5-வது இடத்தை பிடித்துள்ளது. -பிடிஐ
முக்கிய செய்திகள்
விளையாட்டு
1 day ago
விளையாட்டு
1 day ago
விளையாட்டு
1 day ago
விளையாட்டு
2 days ago
விளையாட்டு
2 days ago
விளையாட்டு
2 days ago
விளையாட்டு
3 days ago
விளையாட்டு
3 days ago
விளையாட்டு
3 days ago
விளையாட்டு
3 days ago
விளையாட்டு
4 days ago
விளையாட்டு
4 days ago
விளையாட்டு
4 days ago
விளையாட்டு
4 days ago
விளையாட்டு
5 days ago