மும்பை: எதிர்வரும் உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப் போட்டியில் இந்திய அணியின் விக்கெட் கீப்பர் பேட்ஸ்மேனாக கே.எல்.ராகுல் ஆடும் லெவனில் விளையாடலாம் என முன்னாள் இந்திய வீரர் சுனில் கவாஸ்கர் தெரிவித்துள்ளார். இந்தியா மற்றும் ஆஸ்திரேலிய அணிகளுக்கு இடையிலான டெஸ்ட் தொடர் முடிந்த நிலையில் அவர் இதனை தெரிவித்துள்ளார்.
எதிர்வரும் ஜூன் 7 - 11-ம் தேதிகளில் இந்த இறுதிப் போட்டி நடைபெற உள்ளது. கடைசி நேரத்தில் ஐசிசி உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப் போட்டிக்கு இந்தியா தகுதி பெற்றது. இங்கிலாந்தின் லண்டன் நகரில் உள்ள ஓவல் மைதானத்தில் இந்தப் போட்டி நடைபெற உள்ளது. இந்தப் போட்டியில் இந்தியா மற்றும் ஆஸ்திரேலிய கிரிக்கெட் அணிகள் விளையாட உள்ளன.
“கே.எல்.ராகுலை நீங்கள் விக்கெட்கீப்பராக பார்க்கலாம். இறுதிப் போட்டி நடைபெற உள்ள ஓவல் மைதானத்தில் 5 அல்லது 6-வது பேட்ஸ்மேனாக அவர் களம் கண்டால் அது அணியின் பேட்டிங் ஆர்டருக்கு வலு சேர்க்கும். ஏனெனில் அவர் இங்கிலாந்து நாட்டில் சிறப்பாக விளையாடி உள்ளார். லார்ட்ஸ் மைதானத்தில் சதம் பதிவு செய்துள்ளார். அதனால் இறுதிப் போட்டிக்கு ஆடும் லெவனை தேர்வு செய்யும் போது அதில் கே.எல்.ராகுலை நீங்கள் நிச்சயம் பரிசீலிக்க வேண்டும்” என கவாஸ்கர் தெரிவித்துள்ளார்.
மோசமான ஃபார்ம் காரணமாக இந்திய அணியின் ஆடும் லெவனில் இருந்து வாய்ப்பை இழந்தார் கே.எல்.ராகுல். அவருக்கு மாற்றாக இந்திய அணியின் தொடக்க ஆட்டக்காரராக விளையாடி வரும் கில் சிறப்பாக பேட் செய்து வருகிறார். ரிஷப் பந்த்துக்கு மாற்றாக விளையாடி வரும் மற்றொரு விக்கெட் கீப்பர் கே.எஸ்.பரத், ஆஸ்திரேலிய அணிக்கு எதிரான தொடரில் கடைசி போட்டியில் சிறப்பாக விளையாடி இருந்தார். அவருக்கு உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப் போட்டியில் இந்திய அணியில் வாய்ப்பு கிடைக்கிறதா என்பதை பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டி உள்ளது.
முக்கிய செய்திகள்
விளையாட்டு
6 hours ago
விளையாட்டு
12 hours ago
விளையாட்டு
13 hours ago
விளையாட்டு
17 hours ago
விளையாட்டு
1 day ago
விளையாட்டு
3 days ago
விளையாட்டு
3 days ago
விளையாட்டு
3 days ago
விளையாட்டு
4 days ago
விளையாட்டு
4 days ago
விளையாட்டு
4 days ago
விளையாட்டு
5 days ago
விளையாட்டு
5 days ago
விளையாட்டு
5 days ago
விளையாட்டு
5 days ago