இந்தியாவுக்கு எதிரான ஒருநாள் போட்டி தொடர் - ஸ்டீவ் ஸ்மித் கேப்டனாக நியமனம்

By செய்திப்பிரிவு

புதுடெல்லி: இந்தியாவுக்கு எதிரான ஒருநாள் கிரிக்கெட் போட்டி தொடரில் பங்கேற்கும் ஆஸ்திரேலிய அணி அறிவிக்கப்பட்டுள்ளது. ஸ்டீவ் ஸ்மித் கேப்டனாக நியமிக்கப்பட்டுள்ளார். முழங்கை காயம் காரணமாக டெஸ்ட் தொடரின் இடையே விலகி இருந்த டேவிட் வார்னரும் அணிக்கு திரும்பி உள்ளார்.

ஆஸ்திரேலிய கிரிக்கெட் அணி இந்தியாவில் சுற்றுப்பயணம் செய்து விளையாடி வருகிறது. இருஅணிகள் இடையிலான 4 டெஸ்ட் போட்டிகள் கொண்ட பார்டர்-கவாஸ்கர் டிராபி தொடரை இந்தியஅணி 2-1 என்ற கணக்கில் வென்றது. டெஸ்ட் தொடரை தொடர்ந்து இரு அணிகளும் 3 ஆட்டங்கள் கொண்ட ஒருநாள் கிரிக்கெட் போட்டித் தொடரில் மோதுகின்றன. இதன் முதல் ஆட்டம் வரும் 17-ம் தேதி மும்பை வான்கடே மைதானத்தில் நடைபெறுகிறது.

2-வது ஆட்டம் 19-ம் தேதி விசாகப்பட்டினத்திலும், கடைசி மற்றும் 3-வது ஆட்டம் 22-ம் தேதிசென்னை சேப்பாக்கம் எம்.ஏ.சிதம்பரம் மைதானத்திலும் நடைபெற உள்ளது. இந்நிலையில் இந்த தொடருக்கான ஆஸ்திரேலிய அணி நேற்று அறிவிக்கப்பட்டது. கடந்த வாரம் தனது தாய் இறந்ததை தொடர்ந்து பாட் கம்மின்ஸ் சிட்னியிலேயே தங்கி உள்ளதால் இந்தியாவுக்கு எதிரான ஒருநாள் கிரிக்கெட் போட்டித் தொடருக்கு ஸ்டீவ்ஸ்மித் கேப்டனாக நியமிக்கப்பட்டுள்ளார். நட்சத்திர வீரரான டேவிட் வார்னரும் அணிக்கு திரும்பி உள்ளார்.

இடது கை தொடக்க வீரரானவார்னர் இந்தியாவுக்கு எதிரானமுதல் இரு டெஸ்ட் போட்டிகளில் பங்கேற்ற நிலையில் முழங்கையில் ஏற்பட்ட காயம் காரணமாகஎஞ்சிய போட்டிகளில் இருந்துவிலகி இருந்தார். தொடர்ந்து தாயகம் திரும்பிய அவர், காயத்துக்கு சிகிச்சை எடுத்துக்கொண்டார். தற்போது உடல் தகுதி பெற்றதை தொடர்ந்து ஒருநாள் போட்டிக்கான அணியில் சேர்க்கப்பட்டுள்ளார்.

வரும் வெள்ளிக்கிழமை தொடங்கும் மூன்று போட்டிகள் கொண்ட தொடர், இந்த ஆண்டு இறுதியில் இந்தியாவில் நடைபெறும் ஒருநாள் கிரிக்கெட் போட்டி உலகக்கோப்பை தொடருக்கு முன்னோட்டமாக ஆஸ்திரேலிய அணியினருக்கு உதவக்கூடும் என எதிர்பார்க்கப்படுகிறது.

அணிவிவரம்: ஸ்டீவ் ஸ்மித் (கேப்டன்), டேவிட் வார்னர், மார்னஷ் லபுஷேன், கிளென் மேக்ஸ் வெல், டிராவிஸ் ஹெட், மிட்செல் மார்ஷ், மார்கஸ் ஸ்டாயினிஸ், அலெக்ஸ் கேரி, ஆடம் ஸம்பா, ஜோஷ் இங்லிஸ், சீன் அபோட், அஷ்டன் அகர், நேதன் எலிஸ், கேமரூன் கிரீன், மிட்செல் ஸ்டார்க்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

விளையாட்டு

12 hours ago

விளையாட்டு

1 day ago

விளையாட்டு

1 day ago

விளையாட்டு

1 day ago

விளையாட்டு

1 day ago

விளையாட்டு

2 days ago

விளையாட்டு

2 days ago

விளையாட்டு

2 days ago

விளையாட்டு

2 days ago

விளையாட்டு

2 days ago

விளையாட்டு

2 days ago

விளையாட்டு

2 days ago

விளையாட்டு

2 days ago

விளையாட்டு

3 days ago

விளையாட்டு

3 days ago

மேலும்