2019-ம் ஆண்டு வங்கதேசத்திற்கு எதிராக சதம் எடுத்ததோடு டெஸ்ட் சதத்திற்கு முழுக்கு போட்ட விராட் கோலி அகமதாபாத் டெஸ்ட்டின் பிளாட் பிட்ச் கைக் கொடுக்க 364 பந்துகளில் 15 பவுண்டரிகளுடன் 186 ரன்களை எடுத்து சத வறட்சியை முடிவுக்குக் கொண்டு வந்தார். இதனையடுத்து அகமதாபாத் டெஸ்ட் போட்டியின் ஆட்ட நாயகனாகத் தேர்வு செய்யப்பட்டார் விராட் கோலி.
உண்மையில் 10 மணிநேரங்களுக்கும் மேல் கடுமையான வெயிலில் போராடி நின்று மாரத்தான் இன்னிங்ஸ் ஆடி 180 ரன்களை குவித்த உஸ்மான் கவாஜாவுக்குத்தான் ஆட்ட நாயகன் விருதைக் கொடுத்திருக்க வேண்டும். அதுவும் தொடருக்கு வருவதற்கு முன்பாக அவருக்கு விசா வழங்க இழுத்தடித்திருந்த வேளையில் கடும் கண்டனங்கள் எழுந்த சூழ்நிலையில் அவர் இந்தியாவுக்கு வந்து ஒரு நல்ல டெஸ்ட் தொடரை அளிக்க பங்களிப்பு செய்ததை கவுரவித்ததாகக் கூட அந்த ஆட்ட நாயகன் விருது அமைந்திருக்கலாம். ஆனால் விராட் கோலி வென்றுவிட்டார்.
இந்நிலையில் அகமதாபாத் டெஸ்ட் போட்டி ட்ரா ஆனதையடுத்து விராட் கோலி ஆட்ட நாயகன் விருதை வென்ற பிறகு ஸ்டார் தொலைக்காட்சிக்குக் கூறியதாவது: “ஒரு வீரனாக என் மீதே நான் வைத்திருக்கும் எதிர்பார்ப்புகள் எனக்கு முக்கியத்துவம் வாய்ந்தவை. கடந்த 10 ஆண்டுகளில் டெஸ்ட் கிரிக்கெட்டில் ஆடுவது குறித்த என் ஆட்டத்திற்கான ஒரு வழிமுறை மற்றும் உத்வேகம் கடந்த சில ஆண்டுகளாக என் ஆட்டத்தில் இல்லை. எனவே அதை மீண்டும் கொண்டு வர முயற்சித்தேன்.
நாக்பூரில் நடந்த முதல் இன்னிங்ஸில் இருந்தே நான் நன்றாக பேட்டிங் செய்வது போல் உணர்ந்தேன். ஆனால் அணிக்காக முடிந்தவரை பேட்டிங்கில் அதிக கவனம் செலுத்தினோம். நான் அதை சில காலங்களுக்கு செய்தேன், ஆனால் கடந்த காலத்தில் நான் செய்ததைப் போல் செய்ய முடியாமல் போனது.
» கேன் வில்லியம்சனின் அற்புத சதம்: கடைசி பந்தில் ‘த்ரில்’ வெற்றி கண்ட நியூஸிலாந்து!
» ராகுல் காந்தியால் நாட்டுக்கு அவமதிப்பா? - கடும் அமளியால் இரு அவைகளும் நாள் முழுவதும் ஒத்திவைப்பு
இதனால் கொஞ்சம் எனக்கு ஏமாற்றமாகவே இருந்தது. ஆனாலும் நன்றாக பேட் செய்கின்றேன், ஒரு டீசன்டான பிட்ச் அமைந்தால் நிச்சயம் பெரிய சதம் அடிப்பேன் என்று நம்பிக்கை எனக்கு இருந்தது” என்றார் விராட் கோலி.
அகமதாபாத் டெஸ்ட் போட்டியின் 5-ம் நாளான இன்று ஆஸ்திரேலியா அணி தன் 2-வது இன்னிங்சில் 2 விக்கெட்டுகள் இழப்புக்கு 175 ரன்கள் எடுத்திருந்தபோது ஆட்டம் முடித்துக் கொள்ளப்பட்டதாக அறிவிக்கப்பட்டது. இந்தியா பார்டர் - கவாஸ்கர் டிராபியை 2-1 என்ற கணக்கில் வென்றதோடு ஐசிசி டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப் போட்டியில் மீண்டும் ஆஸ்திரேலியாவைச் சந்திக்கின்றது. வாசிக்க > அகமதாபாத் டெஸ்ட் டிரா; தொடரை வென்றது இந்தியா - ஐசிசி டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிக்கு தகுதி!
முக்கிய செய்திகள்
விளையாட்டு
1 hour ago
விளையாட்டு
5 hours ago
விளையாட்டு
6 hours ago
விளையாட்டு
8 hours ago
விளையாட்டு
10 hours ago
விளையாட்டு
14 hours ago
விளையாட்டு
1 day ago
விளையாட்டு
1 day ago
விளையாட்டு
1 day ago
விளையாட்டு
1 day ago
விளையாட்டு
1 day ago
விளையாட்டு
1 day ago
விளையாட்டு
1 day ago
விளையாட்டு
2 days ago
விளையாட்டு
2 days ago