IND vs AUS 4-வது டெஸ்ட் | சதம் விளாசிய கில்: இந்தியா 292 ரன்கள் பின்தங்கியுள்ளது

By செய்திப்பிரிவு

அகமதாபாத்: ஆஸ்திரேலிய அணிக்கு எதிரான நான்காவது டெஸ்ட் கிரிக்கெட் போட்டியின் முதல் இன்னிங்ஸில் இந்திய அணி வீரர் சுப்மன் கில் சதம் விளாசி உள்ளார். மூன்றாம் நாள் ஆட்ட தேநீர் நேர இடைவேளையின் போது இந்தியா 2 விக்கெட்டுகள் இழப்பிற்கு 188 ரன்கள் எடுத்துள்ளது. முதல் இன்னிங்ஸில் ஆஸ்திரேலிய அணியை காட்டிலும் 292 ரன்கள் பின்தங்கியுள்ளது இந்தியா.

ஆஸ்திரேலிய அணி முதல் இன்னிங்ஸில் 480 ரன்களுக்கு ஆல் அவுட்டானது. மூன்றாம் நாள் ஆட்டத்தை 36 ரன்கள் உடன் தொடங்கியது இந்தியா. கேப்டன் ரோகித் சர்மா, 58 பந்துகளில் 35 ரன்கள் எடுத்து அவுட்டானார்.

பின்னர் வந்த புஜாராவுடன் இணைந்து 113 ரன்களுக்கு பார்ட்னர்ஷிப் அமைத்தார் கில். தேநீர் நேர இடைவேளை நெருங்க ஒரே ஒரு ஓவர் மட்டும் எஞ்சி இருந்த நிலையில் 121 பந்துகளில் 42 ரன்கள் எடுத்திருந்த புஜாரா அவுட்டானார். தொடர்ந்து களத்திற்கு கோலி வந்தார்.

சுப்மன் கில் சதம்: 194 பந்துகளில் 101 ரன்கள் எடுத்து சதம் பதிவு செய்தார் கில். இது டெஸ்ட் கிரிக்கெட்டில் அவர் பதிவு செய்துள்ள இரண்டாவது சதம். ஆஸ்திரேலிய அணி பவுலர்கள் அவரது விக்கெட்டை கைப்பற்ற பல்வேறு விதமான வியூகத்தை வகுத்தனர். இருந்தும் அந்த முயற்சியில் அவர்களுக்கு பலன் கிடைக்கவில்லை. கில் களத்தில் நங்கூரமிட்டு விளையாடி வருகிறார்.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE