கவாஜாவின் மாரத்தான் இன்னிங்ஸ்: கும்ப்ளேயைக் கடந்த அஸ்வின்- அகமதாபாத் டெஸ்ட் சாதனைத் துளிகள்!

By ஆர்.முத்துக்குமார்

அகமதாபாத்: அகமதாபாத் டெஸ்ட்டில் ஆஸ்திரேலியா முதல் இன்னிங்ஸில் 480 ரன்களைக் குவிக்க உஸ்மான் கவாஜா 180 ரன்களைக் குவித்தார். இதனை அவர் 611 நிமிடங்களில் 422 பந்துகளில் எடுத்தார். 21 பவுண்டரிகள் மட்டுமே. மற்ற ரன்களெல்லாம் ஓடி எடுத்தது.

கவாஜா பேட் செய்த 611 நிமிடங்கள் ஆஸ்திரேலிய வீரர் ஒருவர் இந்தியாவில் அதிக நேரம் பேட் செய்த சாதனையாக அமைந்தது. இதற்கு முன்பாக ஆஸ்திரேலியா வீரர் கிரகாம் யாலப் 1979-ம் ஆண்டு தொடரில் ஈடன் கார்டன்சில் 167 ரன்களை எடுத்த போது 520 நிமிடங்கள் பேட் செய்தார்.

அதே போல் அதிகப் பந்துகளை சந்தித்ததிலும் கவாஜா சாதனை புரிந்துள்ளார். 422 பந்துகளைச் சந்தித்தார் கவாஜா. இந்தியாவுக்கு வருகை தரும் அணிகளில் 3 வீரர்கள் மட்டுமே இதுவரை 10 மணி நேரத்துக்கும் மேல் பேட் செய்துள்ளனர். பாகிஸ்தான் பேட்டர் யூனிஸ் கான் 267 ரன்களை பெங்களூருவில் 2005-ல் எடுத்த போது 690 நிமிடங்கள் பேட் செய்துள்ளார். ஹஷிம் ஆம்லா 253 நாட் அவுட்டுக்கு 675 நிமிடங்கள் எடுத்துக் கொண்டார். இது நாக்பூரில் 2010-ல். இலங்கையின் மகேலா ஜெயவர்தனே 2009-ம் ஆண்டு இதே அகமதாபாத்தில் 275 ரன்களை 610 நிமிடங்களில் எடுத்துள்ளார்.

இதோடு சென்னையில் மேத்யூ ஹெய்டன் 203, டீன் ஜோன்ஸ் 210, ராஞ்சியில் ஸ்டீவ் ஸ்மித் 178 நாட் அவுட், கிரகாம் யாலப் 167 ஆகிய முன்னணி வீரர்கள் பட்டியலில் இந்தியாவில் அதிக ஸ்கோர் எடுத்து இணைந்துள்ளார் கவாஜா.

ரவிச்சந்திரன் அஸ்வின் 6 விக்கெட்டுகளைக் கைப்பற்றினார். இந்தியாவில் 26வது முறையாக 5 அல்லது அதற்கு மேல் விக்கெட்டுகளைக் கைப்பற்றியுள்ளார் அஸ்வின். இதன் மூலம் அனில் கும்ப்ளே (25) சாதனையை உடைத்தார் கவாஜா. உள்நாட்டில் முத்தையா முரளிதரன் 45 முறை ஒரு இன்னிங்சில்ல் 5 விக்கெட்டுகளையும் ரங்கனா ஹெராத் 26 முறையும் எடுத்துள்ளனர்.

ஆஸ்திரேலியாவுக்கு எதிராக 113 விக்கெட்டுகளை வீழ்த்தியுள்ளார் அஸ்வின். கும்ப்ளே 111 விக்கெட்டுகளை எடுத்து இருந்ததை அஸ்வின் முறியடித்தார். நேதன் லயனுடன் பார்டர்-கவாஸ்கர் டிராபியில் அதிக விக்கெட்டுகளை எடுத்ததில் இணைந்துள்ளார் அஸ்வின்.

கவாஜா-கிரீன் இடையேயான 208 ரன்கள் கூட்டணி இந்தியாவில் 2 - வது பெரிய கூட்டணி ரன்களாகும். 1979-ம் ஆண்டு கிம் ஹியூஸ் -ஆலன் பார்டர் இணைந்து 222 ரன்க்ள் எடுத்தது சாதனையாகும்.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE