BAN vs ENG | டி20 சாம்பியனுக்கு அதிர்ச்சி: 6 விக்கெட் வித்தியாசத்தில் இங்கிலாந்தை வீழ்த்திய வங்கதேசம்

By செய்திப்பிரிவு

சிட்டகாங்: இங்கிலாந்து மற்றும் வங்கதேச அணிகளுக்கு இடையிலான முதல் டி20 கிரிக்கெட் போட்டியில் நடப்பு டி20 உலக சாம்பியனான இங்கிலாந்துக்கு அதிர்ச்சி கொடுத்துள்ளது வங்கதேசம். 6 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் இந்தப் போட்டியில் இங்கிலாந்தை வீழ்த்தி உள்ளது வங்கதேசம்.

இங்கிலாந்து கிரிக்கெட் அணி வங்கதேசத்தில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு ஒருநாள் மற்றும் டி20 கிரிக்கெட்டில் விளையாடி வருகிறது. ஒருநாள் தொடரை 2-1 என்ற கணக்கில் இங்கிலாந்து வென்றது. இந்நிலையில், 3 போட்டிகள் கொண்ட டி20 தொடர் இன்று துவங்கியது. இந்தப் போட்டி சிட்டகாங் நகரில் நடைபெற்றது.

இதில் டாஸ் வென்ற வங்கதேச அணி பவுலிங் தேர்வு செய்தது. இங்கிலாந்து அணி 20 ஓவர்களில் 6 விக்கெட்டுகள் இழப்பிற்கு 156 ரன்கள் எடுத்தது. 157 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்கை வங்கதேசம் விரட்டியது. நஜ்முல் ஹுசைன் சாண்டோ, 30 பந்துகளில் 51 ரன்கள் எடுத்தார். அந்த அணியின் கேப்டன் ஷகிப் அல் ஹசன், 24 பந்துகளில் 34 ரன்கள் எடுத்தார்.

18 ஓவர்கள் முடிவில் 4 விக்கெட்டுகள் இழப்பிற்கு 158 ரன்கள் எடுத்து வெற்றி பெற்றது வங்கதேசம். இதன் மூலம் நடப்பு டி20 கிரிக்கெட் உலக சாம்பியனான இங்கிலாந்து அணிக்கு வங்கதேசம் அதிர்ச்சி கொடுத்துள்ளது.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

விளையாட்டு

4 hours ago

விளையாட்டு

1 day ago

விளையாட்டு

1 day ago

விளையாட்டு

1 day ago

விளையாட்டு

1 day ago

விளையாட்டு

2 days ago

விளையாட்டு

2 days ago

விளையாட்டு

2 days ago

விளையாட்டு

2 days ago

விளையாட்டு

3 days ago

விளையாட்டு

3 days ago

விளையாட்டு

3 days ago

விளையாட்டு

4 days ago

விளையாட்டு

4 days ago

விளையாட்டு

4 days ago

மேலும்