அகமதாபாத்: இந்தியா மற்றும் ஆஸ்திரேலிய கிரிக்கெட் அணிகளுக்கு இடையிலான நான்காவது டெஸ்ட் கிரிக்கெட் போட்டியின் முதல் நாளில் ஆஸ்திரேலிய அணி 4 விக்கெட்டுகள் இழப்பிற்கு 255 ரன்கள் குவித்துள்ளது. அந்த அணியின் தொடக்க ஆட்டக்காரர் கவாஜா சதம் விளாசி உள்ளார்.
ஆஸ்திரேலிய கிரிக்கெட் அணி இந்தியாவில் சுற்றுப் பயணம் மேற்கொண்டு நான்கு போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் விளையாடி வருகிறது. தொடரில் இந்திய அணி 2-1 என்ற கணக்கில் முன்னிலை பெற்றுள்ளது. இந்தத் தொடரின் கடைசி போட்டி இன்று அகமதாபாத் நகரில் அமைந்துள்ள நரேந்திர மோடி கிரிக்கெட் மைதானத்தில் துவங்கியது.
இந்தப் போட்டியில் டாஸ் வென்ற ஆஸ்திரேலிய அணி பேட்டிங் தேர்வு செய்தது. அந்த அணிக்காக உஸ்மான் கவாஜா மற்றும் ஹெட் தொடக்க வீரர்களாக களம் கண்டனர். ஹெட், 32 ரன்கள் எடுத்து அஸ்வின் சுழலில் விக்கெட்டை இழந்தார். தொடர்ந்து வந்த லபுஷேன், 3 ரன்களில் ஷமி வசம் விக்கெட்டை பறிகொடுத்தார்.
பின்னர் மூன்றாவது விக்கெட்டிற்கு இணைந்த கவாஜா மற்றும் அந்த அணியின் கேப்டன் ஸ்மித், 79 ரன்களுக்கு பார்ட்னர்ஷிப் அமைத்தனர். 135 பந்துகளுக்கு 38 ரன்களை எடுத்திருந்த ஸ்மித், ஜடேஜா சுழலில் சிக்கி விக்கெட்டை இழந்தார். தொடர்ந்து வந்த ஹேன்ட்ஸ்கோம்ப், 17 ரன்கள் எடுத்து விக்கெட்டை இழந்தார்.
» வட சென்னையில் ஓர் ஆண்டில் பயன்பாட்டுக்கு வரும் நவீன விளையாட்டு வளாகம்: சிறப்பு அம்சங்கள் என்னென்ன?
» கோவை மருத்துவமனைகளில் புறநோயாளிகளாக சிகிச்சைக்கு வருவோரில் 10% பேருக்கு ஃப்ளு காய்ச்சல் பாதிப்பு
கவாஜா, கேமரூன் கிரீன் உடன் இணைந்து 85 ரன்களுக்கு பார்ட்னர்ஷிப் அமைத்தார். 246 பந்துகள் விளையாடி தனது சதத்தை பதிவு செய்தார் கவாஜா. முதல் நாளின் கடைசி ஓவரில் இந்த சதத்தை அவர் பதிவு செய்தார். இந்த தொடரில் ஆஸ்திரேலிய அணி வீரர் பதிவு செய்துள்ள முதல் சதம் இது.
முதல் நாள் ஆட்ட நேர முடிவில் ஆஸ்திரேலிய அணி 4 விக்கெட்டுகள் இழப்பிற்கு 255 ரன்கள் எடுத்துள்ளது. கவாஜா 104 ரன்கள் மற்றும் கிரீன் 49 ரன்களுடன் களத்தில் உள்ளனர். கவாஜாவின் சதம் ஆஸ்திரேலிய அணியின் ஆதிக்கத்தை இந்தப் போட்டியில் இப்போதைக்கு கொண்டு வந்துள்ளது.
முக்கிய செய்திகள்
விளையாட்டு
12 hours ago
விளையாட்டு
13 hours ago
விளையாட்டு
16 hours ago
விளையாட்டு
1 day ago
விளையாட்டு
1 day ago
விளையாட்டு
1 day ago
விளையாட்டு
1 day ago
விளையாட்டு
1 day ago
விளையாட்டு
2 days ago
விளையாட்டு
2 days ago
விளையாட்டு
2 days ago
விளையாட்டு
2 days ago
விளையாட்டு
2 days ago
விளையாட்டு
2 days ago
விளையாட்டு
2 days ago