2018 உலகக்கோப்பை கால்பந்துத் தொடருக்கான தகுதிப்போட்டிகள் நடைபெற்று வருகின்றன இதில் அர்ஜெண்டினா அணி வெனிசூலாவுக்கு எதிராக 1-1 என்று டிரா செய்ய சிலி அணி பொலிவியாவுக்கு எதிராக 0-1 என்ற கோல் கணக்கில் தோல்வி தழுவியது.
அர்ஜெண்டினா அணி இடைவேளை வரை ஏகப்பட்ட கோல் வாய்ப்புகளை கோல் அருகில் சென்று மோசமான பினிஷிங்கினால், திட்டமிடலின்மையால் தவற விட்டது. கடைசியில் வெனிசூலா அணி தன் கோலில் அடித்த ஷாட்டின் மூலமே அர்ஜெண்டீனா அணி டிரா செய்ய முடிந்தது என்பது அது ஆடிய விதத்திற்கும் முடிவுக்குமிடையேயான மிகப்பெரிய முரணாகும்.
இதன் மூலம் அர்ஜெண்டினா 16 ஆட்டங்களில் 24 புள்ளிகளுடன் 5-ம் இடத்திலும் சிலி அணி 23 புள்ளிகளுடன் 6-ம் இடத்திலும் உள்ளதால் நேரடியாகத் தகுதி பெறுவது பெரும் சிக்கலுக்குள்ளாகியுள்ளது. 5-ம் நிலையிலேயே அர்ஜெண்டினா நீடித்தால் அது நியூஸிலாந்துக்கு எதிராக பிளே ஆஃப் சுற்றில் ஆட வேண்டிய கட்டயாம் ஏற்படும். அடுத்த மாதம் 4-ம் இடத்தில் உள்ள பெரூ அணியை அர்ஜெண்டினா சந்திக்கிறது, அடுத்த கடைசி போட்டியில் உயரமான பகுதியில் ஈக்வடாருக்கு எதிராக ஆடுகிறது.
பிரேசில் அணி முதலிடத்தில் ஏற்கெனவே தகுதி பெற்று விட்டது, மேலும் கொலம்பியா அணிக்கு எதிராக 1-1 என்று டிரா செய்தது. இடைவேளைக்கு முன்னதாக வில்லியன் அடித்த அபாரமான கோல் அது. ஆனால் இந்த மகிழ்ச்சி நீடிக்கவில்லை கொலம்பிய வீரர் ரடாமெல் ஃபால்கோ தலையால் முட்டி சமன் கோலை அடித்தார்.
அர்ஜெண்டினா, வெனிசூலா ஆட்டத்தில் அர்ஜெண்டினா கோலே அடிக்கவில்லை என்றே கூற வேண்டும், கடைசியில் வெனிசுலா அடித்த சொந்த கோலினால் அர்ஜெண்டினா கணக்கில் ஒரு கோல் சேர்ந்தது, முன்னதாக வெனிசூலா அணிக்கு கிடைத்த வாய்ப்பை அது கோலாக மாற்றியது, அர்ஜெண்டினா தடுப்பு உத்தி, பாஸ் தோல்வியடைய கிட்டத்தட்ட வெனிசூலா வீரர் ஒருவர் தன்னந்தனியாக பந்தை எடுத்துச் சென்று கோலாக மாற்றினார்.
அதற்கு முன்னதாக தொடக்கம் முதல் இடைவேளை வரை அர்ஜெண்டினா அணி ஒரு 6-7 கோல் வாய்ப்புகளையாவது தவற விட்டிருக்கும், அருமையான பாஸ்கள் மோசமான பினிஷிங்கினால் கோலாக மாறவில்லை, 49வது நிமிடத்தில் மெஸ்ஸி அடித்த ஃப்ரீ கிக் கோலுக்கு அருகே வளைந்து வெளியே சென்றது, இன்னொரு மெஸ்சியின் அபாரமான ஷாட்டை வெனிசூலா கோல் கீப்பர் டைவ் அடித்துப் பிடித்தார்.
இதற்கிடையே உருகுவே அணி பராகுவே அணிக்கு எதிரான சவாலான ஆட்டத்தில் 2-1 என்ற கோல் கணக்கில் வென்று உலகக்கோப்பை தகுதியை நெருங்கியுள்ளது. சிலி அணியை பராகுவே அணி 3-0 என்று நொறுக்கியதை அடுத்து இந்தப் போட்டி உருகுவே அணிக்கு பெரும் சவாலாக அமைந்தது. பெடரிகோ வால்வர்டே 76-வது நிமிடத்தில் அபாரமான ஷாட் ஒன்றில் உருகுவேயை முன்னிலையாக்கினார். சுவாரேஸ் இரண்டாவது கோலுக்கான வாய்ப்பை அருமையாக அமைத்துக் கொடுத்தார். இந்த வெற்றி மூலம் உருகுவே அணி 27 புள்ளிகளுடன் 2-ம் இடத்தில் உள்ளது. வெனிசூலாவை அடுத்த போட்டியில் வீழ்த்தி விட்டா உருகுவே தகுதி பெறுவது உறுதி.
வெனிசூலா அணி 7-ம் இடத்தில் உள்ளது, இது கொலம்பியாவை அடுத்த போட்டியில் வீழ்த்தி பிறகு கடைசி போட்டியில் வெனிசூலாவையும் வீழ்த்தினால் தகுதி பெற வாய்ப்புள்ளது.
முக்கிய செய்திகள்
விளையாட்டு
7 hours ago
விளையாட்டு
12 hours ago
விளையாட்டு
15 hours ago
விளையாட்டு
18 hours ago
விளையாட்டு
1 day ago
விளையாட்டு
1 day ago
விளையாட்டு
1 day ago
விளையாட்டு
2 days ago
விளையாட்டு
2 days ago
விளையாட்டு
2 days ago
விளையாட்டு
2 days ago
விளையாட்டு
3 days ago
விளையாட்டு
3 days ago
விளையாட்டு
3 days ago
விளையாட்டு
4 days ago