மான்செஸ்டர் யுனைடெட் அணியை 7-0 என்ற கோல் கணக்கில் வீழ்த்திய லிவர்பூல்

By செய்திப்பிரிவு

லிவர்பூல்: நடப்பு ப்ரீமியர் லீக் சீசன் தொடரில் மான்செஸ்டர் யுனைடெட் அணியை 7-0 என்ற கோல் கணக்கில் வீழ்த்தியுள்ளது லிவர்பூல் அணி. கேக்போ, நுநெஸ், சாலா ஆகியோர் தலா 2 கோல்களை பதிவு செய்தனர். ஃபிர்மினோ, ஒரு கோல் பதிவு செய்திருந்தார்.

ஆட்டத்தின் 43, 47, 50, 66, 75, 83, 88-வது நிமிடங்களில் கோல் பதிவு செய்திருந்தது லிவர்பூல் அணி. இதன் மூலம் மான்செஸ்டர் அணியை இந்தப் போட்டியில் பந்தாடி உள்ளது லிவர்பூல். லீக் போட்டிகளுக்கான புள்ளிப்பட்டியலில் லிவர்பூல் அணி ஐந்தாவது இடத்தில் உள்ளது. மேலும் இந்த வெற்றியின் மூலம் நடப்பு சீசனில் டாப் 4 இடங்களை பிடிக்கும் வாய்ப்பை உயிர்ப்போடு அந்த அணி வைத்துள்ளதாக சொல்லப்படுகிறது.

இந்தப் போட்டியின் இரண்டாவது பாதியில் 6 கோல்களை பதிவு செய்து மிரட்டி இருந்தது லிவர்பூல் அணி. அந்த அணி பதிவு செய்த கோல்களில் 2 கோல்களை பதிவு செய்த முகமது சாலா, 2 கோல்களை பதிவு செய்ய உதவி இருந்தார். அதோடு ப்ரீமியர் லீக் போட்டிகளில் லிவர்பூல் அணிக்காக 129 கோல்களை பதிவு செய்துள்ளார் சாலா.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

விளையாட்டு

11 hours ago

விளையாட்டு

2 days ago

விளையாட்டு

2 days ago

விளையாட்டு

2 days ago

விளையாட்டு

3 days ago

விளையாட்டு

3 days ago

விளையாட்டு

3 days ago

விளையாட்டு

4 days ago

விளையாட்டு

4 days ago

விளையாட்டு

4 days ago

விளையாட்டு

4 days ago

விளையாட்டு

5 days ago

விளையாட்டு

5 days ago

விளையாட்டு

5 days ago

விளையாட்டு

5 days ago

மேலும்