யு.எஸ். ஓபன் கிராண்ட் ஸ்லாம் டென்னிஸ் மகளிர் இறுதிப் போட்டியில் மேடிசன் கீஸ் என்பவரை 6-3, 6-0 என்ற நேர் செட்களில் நொறுக்கிய ஸ்லான் ஸ்டீஃபென்ஸ் சாம்பியன் பட்டம் வென்றார்.
முதல் செட்டில் ஸ்டீஃபென்ஸ் 3-2 என்று முன்னிலை பெற கீஸ் சர்வை பிரேக் செய்தார், மேடிசன் கீஸ் தனது ஃபோர்ஹேண்ட் ஷாட்டை வெளியே அடித்தார், பிறகு இன்னொரு சர்வில் தன் பேக் ஹேண்ட் ஷாட்டை வெளியே அடித்து ஸ்டீஃபென்ஸுக்கு இன்னொரு பிரேக்கை அளித்தா கீஸ், அந்தச் செட்டைப் பிறகு தன் சர்வ்களில் வென்று ஸ்டீஃபென்ஸ் 6-3 என்று கைப்பற்றினார்.
முதல் செட்டிலேயெ கீஸ் 17 முறை தவறுகளைச் செய்தார், ஸ்லான் ஸ்டீஃபென்ஸ் இருமுறையே தவறிழைத்தார். 2வது செட்டின் தொடக்கத்திலேயே ஸ்டீஃபென்ஸ் ஒரு அபாரமான ஃபோர் ஹேண்ட் ஷாட் மூலம் கீஸ் சர்வை முறியடித்து 2-0 என்று முன்னிலை பெற்றார். பிறகு கீஸ் சர்வில் டபுள் ஃபால்ட் செய்ய ஸ்டீஃபென்ஸ் 4-0 என்று முன்னிலை பெற்றார். 5-வது சர்வ் கேமில் கீஸ் ஆட்டம் கொஞ்சம் சூடுபிடிக்க 3 முறை பிரேக் வாய்ப்பு கிடைத்தது, ஆனால் ஸ்டீஃபென்ஸ் விட்டுக்கொடுக்காமல் 5-0 என்று முன்னிலை பெற்றார். பிறகு செட்டை 6-0 என்று கைப்பற்றி யு.எஸ். ஓபன் சாம்பியன் என்று நம்பால் சிறிது நேரம் அப்படியே நின்றார். பிறகு கொண்டாடினார், பிறகு வலையருகில் சென்று கண்ணீருடன் கீஸைக் கட்டித் தழுவினார்.
தனது கடந்த 17 போட்டிகளில் 15 ஆட்டங்களில் வென்ற ஸ்டீஃபென்ஸ் தரவரிசையில் இல்லாமலேயே கிராண்ட் ஸ்லாம் பட்டம் வென்ற 5-வது வீராங்கனையாவார். இந்த ஆண்டு பிரெஞ்ச் ஓபனிலும் தரவரிசை வழங்கப்படாத ஜெலெனா ஆஸ்டபென்கோ பட்டம் வென்றது குறிப்பிடத்தக்கது.
கீஸ் 30 முறை தவறுகளைச் செய்ய ஸ்டீஃபென்ஸ் 6 முறையே தவறிழைத்தார். இந்த சாம்பியன் பட்டத்துக்குப் பிறகு ஸ்டீபென்ஸ் உலக டென்னிஸ் தரவரிசையில் 17-ம் இடத்துக்கு உயர்வார். கீஸ் 12-ம் இடத்துக்கு உயர்வார்.
முக்கிய செய்திகள்
விளையாட்டு
24 mins ago
விளையாட்டு
10 hours ago
விளையாட்டு
14 hours ago
விளையாட்டு
15 hours ago
விளையாட்டு
17 hours ago
விளையாட்டு
19 hours ago
விளையாட்டு
23 hours ago
விளையாட்டு
1 day ago
விளையாட்டு
1 day ago
விளையாட்டு
1 day ago
விளையாட்டு
1 day ago
விளையாட்டு
1 day ago
விளையாட்டு
1 day ago
விளையாட்டு
1 day ago
விளையாட்டு
2 days ago