உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப் போட்டிக்கு முன்னேறுமா இந்திய அணி?

By செய்திப்பிரிவு

சென்னை: எதிர்வரும் ஐசிசி உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப் போட்டியில் இந்திய அணி பங்கேற்குமா என்ற கேள்வி எழுந்துள்ளது. ஆஸ்திரேலிய அணிக்கு எதிராக இந்தூர் டெஸ்ட் போட்டியில் இந்திய அணி தோல்வியை தழுவியுள்ள நிலையில், உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதியில் பங்கேற்பதில் பின்னடைவு ஏற்பட்டுள்ளது.

இந்த வெற்றியின் மூலம் ஆஸ்திரேலியா உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப் போட்டிக்கு தகுதி பெற்றுள்ளது. இந்தப் போட்டி வரும் ஜூன் மாதம் இங்கிலாந்து நாட்டில் உள்ள ஓவல் கிரிக்கெட் மைதானத்தில் நடைபெற உள்ளது.

இந்திய அணிக்கான வாய்ப்பு எப்படி? - 4 போட்டிகள் கொண்ட பார்டர் - கவாஸ்கர் கோப்பை தொடரின் கடைசிப் போட்டி வரும் 13-ம் தேதி அகமதாபாத் நகரில் நடைபெற உள்ளது. இந்தப் போட்டியில் இந்திய அணி வெற்றி பெற்றால் உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப் போட்டியில் விளையாட தகுதி பெறும். அதே நேரத்தில் இந்த தொடரையும் 3-1 என்ற கணக்கில் வெல்லும்.

அதுவே, ஆஸ்திரேலிய அணி இந்தப் போட்டியில் வெற்றி பெற்றால் 2-2 என தொடர் சமனில் நிறைவடையும். அல்லது அகமாதாபாத் போட்டி சமனில் முடிந்தால் 2-1 என தொடரை இந்தியா வெல்லும். இதனால், இறுதிப் போட்டியில் விளையாடும் ரேஸில் உள்ள மற்றொரு அணியான இலங்கைக்கு ஒரு வாய்ப்பு உருவாகும். இலங்கை, நியூஸிலாந்துக்கு எதிரான டெஸ்ட் தொடரை 2-0 என்ற கணக்கில் வென்றால் இறுதிப் போட்டிக்கு தகுதி பெறும்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

விளையாட்டு

14 hours ago

விளையாட்டு

15 hours ago

விளையாட்டு

18 hours ago

விளையாட்டு

1 day ago

விளையாட்டு

1 day ago

விளையாட்டு

1 day ago

விளையாட்டு

1 day ago

விளையாட்டு

1 day ago

விளையாட்டு

2 days ago

விளையாட்டு

2 days ago

விளையாட்டு

2 days ago

விளையாட்டு

2 days ago

விளையாட்டு

2 days ago

விளையாட்டு

2 days ago

விளையாட்டு

2 days ago

மேலும்