நடந்துமுடிந்த கால்பந்து உலகக் கோப்பையில் சிறப்பாக செயல்பட்டவர்களுக்கு ஃபிஃபா அமைப்பு விருது அறிவித்துள்ளது.
உலகக் கோப்பை கால்பந்து இறுதிப் போட்டியில் விளையாடிய அர்ஜென்டினாவின் லியோனல் மெஸ்ஸி மற்றும் பிரான்சின் கைலியன் எம்பாப்வே ஆகியோர் சிறந்த வீரர் விருதுக்கான பட்டியலில் போட்டி போட்ட நிலையில் லயோனல் மெஸ்ஸி அந்த விருதை தட்டிச் சென்றார்.
சிறந்த மகளிர் கால்பந்து வீராங்கனை விருதுக்கான போட்டியில், இங்கிலாந்தின் பெத் மீட், அமெரிக்காவின் அலெக்ஸ் மோர்கன் மற்றும் ஸ்பெயினின் அலெக்ஸியா புடெல்லாஸ் பட்டியலில் இடம்பெற்றிருந்தனர். இறுதியில் அலெக்ஸியா புட்டெல்லாஸ் விருதுக்கு தேர்வு செய்யப்பட்டார்.
மொராக்கோவின் யாசின் பவுனோ, அர்ஜென்டினாவின் எமிலியானோ மார்டினெஸ், பெல்ஜியத்தின் திபாட் கோர்டோஸ் ஆகியோர் சிறந்த கோல்கீப்பர் விருதுக்கான போட்டியில் இடம்பெற்றிருந்த நிலையில் எமிலியானோ மார்டினெஸுக்கு விருது வழங்கப்பட்டது.
» அடுத்த ஓரிரு ஆண்டுகளில் பந்த் மீண்டும் இந்திய அணிக்காக விளையாடுவார்: கங்குலி கருத்து
» “இந்தியாவுக்கு சாதகமான பிட்ச்கள்தான்... ஆஸி. வசம் ஆட்ட நுட்பம் இல்லை” - மார்க் டெய்லர் கருத்து
விருதுகள் விவரம்:
சிறந்த ஃபிஃபா மகளிர் வீராங்கனை: அலெக்ஸியா புட்டெல்லாஸ்
சிறந்த ஃபிஃபா ஆண்கள் வீரர்: லியோனல் மெஸ்ஸி
சிறந்த ஃபிஃபா மகளிர் பயிற்சியாளர்: சரினா வீக்மேன்
சிறந்த ஃபிஃபா ஆண்கள் பயிற்சியாளர்: லியோனல் ஸ்கலோனி
சிறந்த ஃபிஃபா மகளிர் கோல்கீப்பர்: மேரி ஏர்ப்ஸ்
சிறந்த ஃபிஃபா ஆண்கள் கோல்கீப்பர்: எமிலியானோ மார்டினெஸ்
முக்கிய செய்திகள்
விளையாட்டு
2 hours ago
விளையாட்டு
1 day ago
விளையாட்டு
1 day ago
விளையாட்டு
1 day ago
விளையாட்டு
3 days ago
விளையாட்டு
3 days ago
விளையாட்டு
3 days ago
விளையாட்டு
4 days ago
விளையாட்டு
4 days ago
விளையாட்டு
4 days ago
விளையாட்டு
4 days ago
விளையாட்டு
4 days ago
விளையாட்டு
5 days ago
விளையாட்டு
5 days ago
விளையாட்டு
5 days ago