மீண்டும் இந்தியா - பாகிஸ்தான் கிரிக்கெட் போட்டி: காணொலியில் பங்கேற்ற வாசிம் அக்ரம் வலியுறுத்தல்

By செய்திப்பிரிவு

சென்னை: ‘தி இந்து’ ஆங்கில நாளிதழ் சார்பில் நடத்தப்பட்ட ‘லிட் ஃபார் லைஃப்’ இலக்கியத் திருவிழாவில் பேசிய பாகிஸ்தான் கிரிக்கெட்அணியின் முன்னாள் கேப்டன் வாசிம் அக்ரம், இந்தியா - பாகிஸ்தான் இடையிலான கிரிக்கெட் போட்டிகள் மீண்டும் தொடங்கப்பட வேண்டும் என்று வலியுறுத்தினார்.

‘தி இந்து’ ஆங்கில நாளிதழ் சார்பில் ஆண்டுதோறும் ஜனவரி அல்லது பிப்ரவரி மாதத்தில் நடத்தப்படும் ‘லிட் ஃபார் லைஃப்’நிகழ்வில் எழுத்தாளர்கள், பத்திரிகையாளர்கள், திரைக் கலைஞர்கள், சிந்தனையாளர்கள், சமூக செயற்பாட்டாளர்கள், விளையாட்டு வீரர்கள் என பல்வேறு துறைகளை சேர்ந்த ஆளுமைகள் உரையாற்றுவர்.

இந்த ஆண்டுக்கான நிகழ்வு, சென்னை மியூசிக் அகாடமியின் டிடிகே அரங்கிலும், கஸ்தூரி நிவாசன் ஹாலிலும் கடந்த 24, 25-ம் தேதிகளில் நடைபெற்றது.

‘தி இந்து’ குழுமம் மற்றும் ‘லிட் ஃபார் லைஃப்’ இயக்குநர் நிர்மலா லக்‌ஷ்மணின் உரையுடன் முதல் நாள் நிகழ்வு தொடங்கியது. வித்யா சிங், கவுர் கோபால் தாஸ், கேப்டன் ஜி.ஆர்.கோபிநாத், கோபாலகிருஷ்ண காந்தி, சுமந்த் சி.ராமன், சுசீலா ரவீந்திரநாத் ஆகியோர் உரையாற்றினர். கடந்த 25-ம் தேதி நடந்த 2-ம் நாள் நிகழ்வில் உச்ச நீதிமன்ற நீதிபதி சஞ்சய் கிஷன் கவுல், தொடக்க உரை நிகழ்த்தினார்.

பாகிஸ்தான் கிரிக்கெட் அணியின் முன் னாள் கேப்டன் வாசிம் அக்ரம், காணொலி மூலம் நிகழ்ச்சியில் கலந்துகொண்டார்.

மூத்த பத்திரிகையாளர் ‘இந்து’ என்.ராம்தொகுத்து வழங்கினார். அப்போது பேசியவாசிம் அக்ரம், 1999-ல் சென்னையில் நடந்த டெஸ்ட் கிரிக்கெட் போட்டியில் இந்திய அணியை வென்றது குறித்து நினைவு கூர்ந்தார். சச்சின் டெண்டுல்கரை ‘அவுட்’ செய்ய ‘தூஸ்ரா’ முறையில் சுழற்பந்தை வீசுமாறு சக்லைன் முஷ்டாக்கிடம் சொன்னதை பற்றியும் குறிப்பிட்டார். மேலும், ‘‘விளையாட்டில் இருந்து அரசியல் விலகிஇருக்க வேண்டும். இந்தியா - பாகிஸ்தான் இடையிலான கிரிக்கெட் போட்டிகள் மீண்டும் தொடங்கப்பட வேண்டும். இரு நாட்டுமக்கள் இடையிலான தொடர்பும் அதிகரிக்க வேண்டும்’’ என்று கூறினார்.

‘இணைய யுகத்தில் பேச்சு சுதந்திரம்’ எனும் விவாத நிகழ்ச்சியை கஸ்தூரி அண்ட் சன்ஸ் நிறுவனத்தின் தலைவர் என்.ரவி தொகுத்து வழங்கினார். இந்த நிகழ்வில், தனிமனித உரிமையை மீறும் வகையிலான சட்டங்களை தடை செய்வதன் அவசியம் குறித்து சென்னை உயர் நீதிமன்ற வழக்கறிஞர் சுஹ்ரித் பார்த்தசாரதி பேசினார். கருத்து சுதந்திரத்தை காப்பதில் ஊடகத் துறை எதிர்கொள்ளும் சவால்கள் குறித்து ‘தி நியூஸ் மினிட்’ முதன்மை ஆசிரியர் தன்யா ராஜேந்திரன் எடுத்துரைத்தார். டெல்லியில், இணைய சுதந்திரம் தொடர்பான தொண்டு நிறுவனத்தை நடத்திவரும் வழக்கறிஞர் அபார் குப்தா, கருத்துசுதந்திரத்துக்கு எதிராக சட்டரீதியாக எடுக்கப்படும் நடவடிக்கைகள் குறித்து பேசினார். பொய் செய்திகளை பரப்ப அரசியல் கட்சிகள் நிதி வழங்குவதாகவும் அவர் சுட்டிக்காட்டினார்.

மொழிபெயர்ப்பு குறித்த விவாத அரங்கில் தமிழ்நாடு பாடநூல் மற்றும் கல்வியியல் பணிகள் கழக ஒருங்கிணைப்பு ஆசிரியர் மினி கிருஷ்ணன், ஓய்வுபெற்ற உயர் நீதிமன்ற நீதிபதி பிரபா தேவன்,பத்திரிகையாளர் டி.ஐ.அரவிந்தன் ஆகியோர்கலந்துகொண்டனர். பத்திரிகையாளர் கவிதா முரளிதரன் ஒருங்கிணைத்தார்

இரண்டு நாள் நிகழ்வுகளில் நடிகை தீப்தி நவல், நடனக் கலைஞர் அனிதா ரத்னம், மூத்த பத்திரிகையாளர் பி.சாய் நாத், கர்னாடக இசைக் கலைஞரும், சமூகசெயற்பாட்டாளருமான டி.எம்.கிருஷ்ணா உள்ளிட்ட பலர் கலந்துகொண்டனர்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

விளையாட்டு

8 hours ago

விளையாட்டு

20 hours ago

விளையாட்டு

1 day ago

விளையாட்டு

1 day ago

விளையாட்டு

1 day ago

விளையாட்டு

1 day ago

விளையாட்டு

1 day ago

விளையாட்டு

1 day ago

விளையாட்டு

1 day ago

விளையாட்டு

2 days ago

விளையாட்டு

2 days ago

விளையாட்டு

2 days ago

விளையாட்டு

2 days ago

விளையாட்டு

2 days ago

விளையாட்டு

3 days ago

மேலும்