ஆஸ்திரேலிய கிரிக்கெட் அணி இந்தியாவில் சுற்றுப்பயணம் செய்து விளையாடி இருகிறது. இரு அணிகள் இடையிலான 4 டெஸ்ட் போட்டிகள் கொண்ட தொடரில் முதல் இரு ஆட்டங்களிலும் இந்திய அணி வெற்றி பெற்றது. இதனால் தொடரில் இந்திய அணி 2-0 என முன்னிலை வகிக்கிறது.
இந்த இரு டெஸ்ட் போட்டிகளிலும் ஆஸ்திரேலிய அணி 3 நாட்கள் கூட தாக்குப்பிடிக்கவில்லை. சுழற்பந்து வீச்சுக்கு எதிராக அந்த அணியின் பேட்ஸ்மேன்கள் கையாண்ட பேட்டிங் யுத்திகளும் கடும் விமர்சனங்களுக்கு உள்ளாகி உள்ளன. பந்துகள் தாழ்வாக வரும் ஆடுகளங்களில் ஸ்வீப், ரிவர்ஸ் ஸ்வீட் ஷாட்களை விளையாடி ஆஸ்திரேலிய அணியின் பேட்ஸ்மேன்கள் தங்களது விக்கெட்களை தாரை வார்த்தனர்.
3-வது டெஸ்ட் போட்டி வரும் மார்ச் 1-ம் தேதி இந்தூரில் தொடங்க உள்ளது. இதனையொட்டி ஆஸ்திரேலிய அணி மீது அந்நாட்டு முன்னாள் வீரர்கள் விமர்சனங்களை முன்வைத்து வருகின்றனர்.
இந்நிலையில், ஆஸ்திரேலியாவுக்கு எதிராக இந்தியா 4-0 என்ற கணக்கில் வெற்றி பெறும் என்று சவுரவ் கங்குலி கணித்துள்ளார். முன்னாள் இந்திய கிரிக்கெட் வீரர் சவுரவ் கங்குலி இதுதொடர்பாக அளித்துள்ள பேட்டியில், “இந்தியா 4-0 என ஆஸ்திரேலியாவை வீழ்த்தும் என நான் நினைக்கிறேன். இந்தியாவை வீழ்த்துவது ஆஸ்திரேலியாவுக்கு கடினமாக இருக்கும். இதுமாதிரியான பிட்ச் கண்டிஷன்களில், நாமே அனுபவம் வாய்ந்த அணியாக இருக்கிறோம்” என்று தெரிவித்துள்ளார்.
முக்கிய செய்திகள்
விளையாட்டு
4 hours ago
விளையாட்டு
22 hours ago
விளையாட்டு
23 hours ago
விளையாட்டு
1 day ago
விளையாட்டு
1 day ago
விளையாட்டு
1 day ago
விளையாட்டு
1 day ago
விளையாட்டு
2 days ago
விளையாட்டு
2 days ago
விளையாட்டு
2 days ago
விளையாட்டு
2 days ago
விளையாட்டு
2 days ago
விளையாட்டு
3 days ago
விளையாட்டு
3 days ago
விளையாட்டு
3 days ago