“ஏதாவது செய்யுங்க பாஸ்... இல்லைன்னா பொட்டலம்தான்!” - ஆஸி.யை கிண்டல் செய்த ஸ்ரீகாந்த்

By ஆர்.முத்துக்குமார்

மிகவும் ஜாலியாக பேசுவதிலும் நகைச்சுவையாக சில விஷயங்களை அணுகுவதிலும் இந்திய அணியின் முன்னாள் கேப்டனும் தொடக்க வீரருமான கிருஷ்ணமாச்சாரி ஸ்ரீகாந்த் பெயர் பெற்றவர். ஆஸ்திரேலிய அணி 2-0 என்று டெஸ்ட்டில் தோற்றதோடு மொத்தமே 2 டெஸ்ட்களும் 5 நாட்களில் முடிந்து போனது. ஸ்ரீகாந்த் ஸ்டைலில் கூற வேண்டுமானால், ஆஸ்திரேலியா 2 டெஸ்ட்களில் பொட்டலம் கட்டப்பட்டனர்.

நாக்பூரிலும் டெல்லியிலும் குட்லெந்த் ஸ்பாட்களில் தண்ணீரே காட்டாத வறண்ட, பந்துகள் தாழ்வாகவும் குழியில் பட்டு எம்பும் விதமாகவும் போடப்பட்ட பிட்சில் ‘பொட்டலம்’ ஆகியுள்ளனர். நாக்பூரில் படுமோசமாக 2வது இன்னிங்ஸில் 91 ரன்களுக்கு காலியாகி இன்னிங்ஸ் தோல்வியடைந்தனர். டெல்லியில் கொஞ்சம் முதல் இன்னிங்ஸில் நன்றாக ஆடி இந்திய அணியையும் தங்கள் ஸ்கோருக்கு அருகேயே சுருட்டி ஃபைட் கொடுத்தனர்.

2ஆவது இன்னிங்ஸில் 61/1 என்ற நிலையிலிருந்து தட்டுத் தடுமாறி ஆடி ஜடேஜா, அஸ்வினிடம் 28 ரன்களுக்கு 8 விக்கெட்டுகளைப் பறிகொடுத்து, இந்தியா வெற்றி வாகை சூட ஆஸ்திரேலியா இழிவான தோல்வியைச் சந்தித்தது. 6 விக்கெட்டுகள் ஸ்வீப் ஷாட்களில் பலியாகின. ஸ்வீப் ஷாட்களை இந்தக் குழிப் பிட்ச்சுகளில் ஆட முடியாது. ஏனெனில் ஒரே ஸ்பாட்டில், அதாவது குழியில் பிட்ச்சாகும் பந்து ஒன்று திரும்பி எழும்பும்; இன்னொன்று திரும்பாமல் நேராக தாழ்வாக கணுக்காலுக்குக் கீழே வரும் இதில் ஸ்வீப் ஆட முடியாது.

ஸ்டம்புக்கு நேரே வரும் பந்தை ஸ்வீப் ஆடுவது அதி ஆபத்தானது. அதைத்தான் செய்தனர் ஆஸ்திரேலியா. இப்படியாக பொட்டலம் ஆகிவிட்டனர் ஆஸ்திரேலிய அணியினர். இந்நிலையில் கிருஷ்ணமாச்சாரி ஸ்ரீகாந்த் ஆஸ்திரேலிய அணியின் ஆட்டம் குறித்து தன் கடும் ஏமாற்றத்தை அவருக்கேயுரிய பாணியில் தெரிவித்தார்.

அவர் கூறும்போது, “ஆஸ்திரேலிய மேனேஜருக்கு என் மெசேஜ், ‘ஏதாவது செய்ங்க பாஸ்! இந்தத் தொடர் பற்றி பெரிதாக ஊதிப் பெருக்கப்பட்டது. உங்கள் நலனுக்காக நான் ஆங்கிலத்திலேயே பேசுகின்றேன். ஏதாவது செய்யுங்கள் இல்லையேல் பொட்டலம்தான். ஏற்கெனவே நாங்க உங்கள பொட்லம் கட்டிட்டோம்” என்று யூடியூப் சேனலில் தெரிவித்துள்ளார்.

3ஆவது டெஸ்ட் போட்டி இந்தூரில் மார்ச் 1ஆம் தேதி தொடங்கவுள்ள நிலையில், ஆஸ்திரேலிய கேப்டன் பாட் கமின்ஸ் தன் தாயார் உடல் நிலை குன்றியதன் காரணமாக விலகியுள்ளார். ஸ்மித் கேப்டன் பொறுப்பை ஏற்றுள்ளார்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

விளையாட்டு

5 hours ago

விளையாட்டு

2 days ago

விளையாட்டு

2 days ago

விளையாட்டு

2 days ago

விளையாட்டு

3 days ago

விளையாட்டு

3 days ago

விளையாட்டு

3 days ago

விளையாட்டு

4 days ago

விளையாட்டு

4 days ago

விளையாட்டு

4 days ago

விளையாட்டு

4 days ago

விளையாட்டு

5 days ago

விளையாட்டு

5 days ago

விளையாட்டு

5 days ago

விளையாட்டு

5 days ago

மேலும்