நியூசிலாந்து: வெலிங்டனில் நடைபெறும் இங்கிலாந்து - நியூஸிலாந்து அணிகளுக்கு இடையிலான 2-வது டெஸ்ட் போட்டியின் 2-ம் நாள் ஆட்டத்தில் இங்கிலாந்தை ஓரளவுக்கு மட்டுப்படுத்தியது நியூஸிலாந்து. இங்கிலாந்து தன் முதல் இன்னிங்சில் 8 விக்கெட்டுகள் இழப்புக்கு 435 ரன்களில் டிக்ளேர் செய்தது. தொடர்ந்து ஆடிய நியூஸிலாந்து அணி பேட்டிங்கில் சொதப்பி 7 விக்கெட்டுகளை 138 ரன்களுக்கு இழந்து பாலோ ஆனைத் தவிர்க்க திணறி வருகின்றது.
இங்கிலாந்து தன் புதிய பிராண்ட் டெஸ்ட் கிரிக்கெட்டை ஆடி வருகின்றது. எதிரணி அடிக்கும் ரன்களெல்லாம் கணக்கல்ல நாங்கள் சாத்தி எடுப்போம் என்ற ஆக்ரோஷ பேட்டிங்கும் பிறகு திடீர் டிக்ளேர், பென் ஸ்டோக்ஸின் அற்புதமான பந்து வீச்சு மாற்றம் களவியூகம், மற்றும் நெருக்கடி கொடுக்கும் அட்டாகாச கேப்டன்சியின் மூலம் டெஸ்ட் கிரிக்கெட்டின் பரிமாணத்தையே மாற்றி வருகின்றது. 21/3 லிருந்து ஹாரி புரூக், ஜோ ரூட் மூலம் அதிரடி 302 ரன்கள் கூட்டணி அமைத்தது, இன்று ஹாரி புரூக் வந்தவுடனேயே 186 ரன்களில் ஹென்றி பந்தில் அவரிடமே கேட்ச் கொடுத்து வெளியேறினார். அவரது முழங்கை அருகே பட்டு தெறித்த பந்தை ஹென்றி அபாரமாகப் பிடித்தார்.
ரூட் இறங்கி 5 பவுண்டரிகளுடன் அதிரடி 27 ரன்களை விளாசினார். அடிக்கடி வேகப்பந்து வீச்சாளர்களை ஒதுங்கிக் கொண்டு ஆஃப் திசையில் சாத்த முயற்சி செய்தார். சாத்துப்படி வாங்கிய நீல் வாக்னரிடம் போனாப் போகிறது என்று விக்கெட்டைக் கொடுத்தார் பென் ஸ்டோக்ஸ். பென் ஃபோக்ஸ், பிரேஸ்வெல் பந்தில் ஸ்டம்ப்டு ஆனார். ஸ்டூவர்ட் பிராட் உடனேயே பிரேஸ்வெல் பந்தில் எல்.பி.ஆனார்.
இரண்டாவது புதிய பந்து வரும் தறுவாயில் இங்கிலாந்து 66 ரன்களுக்கு 4 விக்கெட்டுகளை பறிகொடுத்தது. ஆனால் ரூட் மட்டையைச் சுழற்றினார். பிரேஸ்வெல்லை ஆன் திசையில் ரசிகர்களிடையே ஒரு ஸ்லாக் ஸ்வீப் சிக்ஸ் விளாசினார். பிறகு டிம் சவுதியை ஒரு சிக்ஸ், ஒரு பவுண்டரி என்று சாத்தினார். ரூட் 224 பந்துகளில் 10 பவுண்டரி 3 சிக்சர்களுடன் 153 நாட் அவுட். ஆலி ராபின்சன் 18 எடுத்து ஆட்டமிழக்க, ஜாக் லீச் 6 நாட் அவுட். பென் ஸ்டோக்ஸ் திடீர் டிக்ளேர் செய்தார்.
ஆண்டர்சன், லீச்சிடம் மடிந்த நியூசிலாந்து: ஜேம்ஸ் ஆண்டர்சன் வயது ஒரு தடையில்லை என்பது போல் ஆயிரம் விக்கெட்டுகளில்தான் ஓய்வார் போலிருக்கின்றது. வந்தவுடனேயே டெவன் கான்வேயை டக் அவுட் செய்தார். ஒரு மெலிதான எட்ஜ், ரிவியூவில் காலியானார் கான்வே. கேன் வில்லியம்சன் மோசமான பார்ம் தொடர விக்கெட் கீப்பரிடம் கேட்ச் கொடுத்து 4 ரன்களில் காலியானார். வில் யங்கும் சொற்ப ரன்களில் ஆண்டர்சனின் ஆஃப் ஸ்டம்ப்பின் அருமையான திசை பந்தில் எட்ஜ் ஆகி வெளியேறினார். நியூசிலாந்தும் இங்கிலாந்து போலவே 21/3. என்று ஆனது.
அதன் பிறகு டாம் லேதம் (35), நிகோலஸ் (30) சேர்ந்து ஸ்கோரை 60 ரன்களுக்குக் கொண்டு சென்றனர். அப்போது ஜாக் லீச் பவுலிங்கிற்கு வர ரிவர்ஸ் ஸ்வீப் ஒன்றை தேவையில்லாமல் ஆடி ஸ்லிப்பில் ரூட்டிடம் கேட்ச் ஆனார் லேதம். அதே போல் நிகோலஸும் ஜாக் லீச் பந்தை ரிவர்ஸ் ஸ்வீப் ஆட முயன்று கேட்ச் ஆனார். டேரில் மிட்செல் 13 ரன்களில் அருமையான ஜாக் லீச் பந்தில் சில்லி பாயிண்டில் கேட்ச் ஆகி வெளியேறினார்.
கடைசியாக மைக்கேல் பிரேஸ்வெல் பிராட் பந்தில் அவுட் ஆக டாம் பிளெண்டல் 25 நாட் அவுட், டிம் சவுதி 1 பவுண்டரி 2 பெரிய சிக்சர்களுடன் 23 நாட் அவுட் என்று நிலை நிறுத்த நியூசிலாந்து 138/7. ஜாக் லீச், ஆண்டர்சன் தலா 3 விக்கெட், பிராட் ஒரு விக்கெட். பாலோ ஆனைத் தவிர்க்க இன்னும் 98 ரன்கள் தேவை, தவிர்க்குமா என்பது சந்தேகமே.
முக்கிய செய்திகள்
விளையாட்டு
4 hours ago
விளையாட்டு
1 day ago
விளையாட்டு
1 day ago
விளையாட்டு
2 days ago
விளையாட்டு
3 days ago
விளையாட்டு
3 days ago
விளையாட்டு
3 days ago
விளையாட்டு
4 days ago
விளையாட்டு
4 days ago
விளையாட்டு
4 days ago
விளையாட்டு
4 days ago
விளையாட்டு
5 days ago
விளையாட்டு
5 days ago
விளையாட்டு
5 days ago
விளையாட்டு
5 days ago