ஸ்காட்லாந்தின் கிளாஸ்கோ நகரில் மகளிர் சர்வதேச ஹாக்கி சாம்பியன்ஸ் சேலஞ்ச் போட்டி நடைபெற்று வருகிறது.இதில் இந்திய மகளிர் அணி தனது முதல் போட்டியில் தென்கொரியாவிடம் 2-4 என்ற கோல் கணக்கில் தோல்வியடைந்தது.
முன்னதாக ஆட்டத்தின் 12-வது நிமிடத்தில் இந்திய வீராங்கனை வந்தனா கட்டாரியா முதல் கோலை அடித்து முன்னிலை பெற்றுத் தந்தார். ஆனால் இந்த மகிழ்ச்சி இரு நிமிடமே நீடித்தது. 14-வது நிமிடத்திலேயே தென் கொரிய வீராங்கனைகள் கோல் அடித்து சமன் செய்தனர். இதைத் தொடர்ந்து ஆட்டத்தில் ஆதிக்கம் செலுத்திய கொரிய வீரங்கனைகள் 24, 25 நிமிடங்களில் அடுத்தடுத்து கோல் அடித்து முதல் பாதியில் 3-1 என்ற முன்னிலையைப் பெற்றனர்.
2-வது பாதி ஆட்டத்திலும் கொரிய வீராங்கனைகள் ஆதிக்கம் செலுத்தினர். 42-வது நிமிடத்தில் மேலும் ஒரு கோல் அடிக்கப்பட்டது. இந்திய மகளிரின் கோல் முயற்சிக்கு 69-வது நிமிடத்தில்தான் பலன் கிடைத்தது. பூணம் இந்த கோலை அடித்தார். இறுதியில் 4-2 என்ற கோல் கணக்கில் தென் கொரியா வென்றது. இந்தியா தனது அடுத்த ஆட்டத்தில் இன்று ஸ்காட்லாந்தை எதிர்கொள்கிறது.
முக்கிய செய்திகள்
விளையாட்டு
6 hours ago
விளையாட்டு
6 hours ago
விளையாட்டு
9 hours ago
விளையாட்டு
1 day ago
விளையாட்டு
1 day ago
விளையாட்டு
1 day ago
விளையாட்டு
2 days ago
விளையாட்டு
2 days ago
விளையாட்டு
2 days ago
விளையாட்டு
2 days ago
விளையாட்டு
3 days ago
விளையாட்டு
3 days ago
விளையாட்டு
3 days ago
விளையாட்டு
3 days ago
விளையாட்டு
4 days ago