6 டெஸ்ட், 9 இன்னிங்ஸ், 812 பந்துகள், 807 ரன்கள்... - ஹாரி ப்ரூக் எனும்‌ அசாத்திய வீரர்!

By செய்திப்பிரிவு

வெலிங்டன்: நியூஸிலாந்து அணிக்கு எதிரான இரண்டாவது டெஸ்ட் போட்டியின் முதல் இன்னிங்ஸில் 169 பந்துகளில் 184 ரன்கள் குவித்துள்ளார் இங்கிலாந்து வீரர் ஹாரி ப்ரூக். இதன் மூலம் சுமார் 145 ஆண்டுகால டெஸ்ட் கிரிக்கெட் வரலாற்றில் மிகக் குறைந்த இன்னிங்ஸ் விளையாடி (முதல் 9 இன்னிங்ஸ்) 800+ ரன்களை கடந்தவர் என்ற சாதனையை அவர் படைத்துள்ளார்.

இதற்கு முன்னர் இந்திய அணியின் முன்னாள் வீரர் வினோத் காம்ப்ளி, முதல் 9 இன்னிங்ஸில் 798 ரன்களை எடுத்ததே சாதனையாக இருந்தது. அதே போல 9 டெஸ்ட் இன்னிங்ஸில் ஹெர்பர்ட் சட்க்ளிஃப் (780 ரன்கள்), சுனில் கவாஸ்கர் (778 ரன்கள்), எவர்டன் வீக்ஸ் (777 ரன்கள்) போன்ற ஜாம்பவான்களை ஹாரி ப்ரூக் முந்தியுள்ளார்.

24 வயதான அவர் கடந்த 2022-ல் டெஸ்ட் கிரிக்கெட்டில் அறிமுகமானவர். இதுவரையில் 6 டெஸ்ட் போட்டிகளில் இங்கிலாந்து அணிக்காக விளையாடி உள்ளார். 9 இன்னிங்ஸில் மொத்தம் 812 பந்துகளை எதிர்கொண்டு 807 ரன்களை குவித்துள்ளார். இதில் 4 சதங்கள் மற்றும் 3 அரைசதங்கள் அடங்கும். இதுவரையில் 20 சிக்ஸர்கள் மற்றும் 101 பவுண்டரிகளை விளாசியுள்ளார்.

நியூஸிலாந்து அணிக்கு எதிரான இரண்டாவது டெஸ்ட் போட்டியில் 169 பந்துகளில் 184 ரன்கள் எடுத்து விளையாடி வருகிறார். முதல் நாள் ஆட்டம் முடிந்த நிலையில் நாளை அவர் டெஸ்ட் கிரிக்கெட்டில் தனது முதல் இரட்டை சதத்தை பதிவு செய்வார் என எதிர்பார்க்கப்படுகிறது. இந்தப் போட்டியில் இங்கிலாந்து அணி 21 ரன்களுக்கு 3 விக்கெட்டுகளை இழந்து தடுமாறியது. இருந்தும் முதல் நாள் ஆட்ட நேர முடிவில் அதே 3 விக்கெட்டுகள் இழப்பிற்கு 315 ரன்கள் எடுத்திருந்தது. அதற்கு காரணம் ப்ரூக் மற்றும் ரூட் இணையரின் பார்ட்னர்ஷிப்தான். இங்கிலாந்து அணியின் அதிரடி பாஸ்பால் பாணி அதிரடி ஆட்டத்திற்கு உயிர் கூடுக்கும் வீரர்களில் ப்ரூக்கும் ஒருவர் என்பது குறிப்பிடத்தக்கது.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

விளையாட்டு

1 hour ago

விளையாட்டு

6 hours ago

விளையாட்டு

8 hours ago

விளையாட்டு

12 hours ago

விளையாட்டு

13 hours ago

விளையாட்டு

13 hours ago

விளையாட்டு

13 hours ago

விளையாட்டு

13 hours ago

விளையாட்டு

14 hours ago

விளையாட்டு

1 day ago

விளையாட்டு

1 day ago

விளையாட்டு

1 day ago

விளையாட்டு

1 day ago

விளையாட்டு

1 day ago

விளையாட்டு

1 day ago

மேலும்