மெல்பர்ன்: ஆஸ்திரேலிய கிரிக்கெட் அணி இந்தியாவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ளது. இரு அணிகள் இடையிலான 4 டெஸ்ட் கிரிக்கெட் போட்டிகள் கொண்ட தொடரில் முதல் இரு போட்டியிலும் இந்திய அணி வெற்றி பெற்றது. இதன் மூலம் இந்திய அணி தொடரில் 2-0 என முன்னிலை வகிக்கிறது. 3-வது ஆட்டம் வரும் 1-ம் தேதி இந்தூரில் தொடங்குகிறது. தொடர்ந்து கடைசி டெஸ்ட் போட்டி 9-ம் தேதி அகமதாபாத்தில் நடைபெறுகிறது.
டெஸ்ட் தொடரை அடுத்து இந்தியா – ஆஸ்திரேலியா அணிகள்இடையே 3 ஆட்டங்கள் கொண்ட ஒருநாள் கிரிக்கெட் போட்டி தொடர் நடைபெறுகிறது. இதன் முதல்ஆட்டம் மார்ச் 17-ம் தேதி மும்பையில் நடைபெறுகிறது. 2-வது ஆட்டம் 19-ம் தேதி விசாகப்பட்டிணத்திலும் கடைசி மற்றும் 3-வது ஆட்டம் 22-ம் தேதி சென்னை சேப்பாக்கம் மைதானத்திலும் நடைபெற உள்ளன.
16 பேர் கொண்ட அணி: இந்த தொடருக்கான 16 பேர் கொண்ட ஆஸ்திரேலிய அணியை அந்நாட்டு கிரிக்கெட் வாரியம் நேற்று அறிவித்தது. இதில் ஆல்ரவுண்டர்களான கிளென் மேக்ஸ்வெல், மிட்செல் மார்ஷ் மற்றும் வேகப்பந்து வீச்சாளர் ஜே ரிச்சர்ட்சன் ஆகியோர் அணிக்கு மீண்டும் திரும்பி உள்ளனர். பாட் கம்மின்ஸ், டேவிட் வார்னர், அஷ்டன் அகர் ஆகியோரும் அணியில் உள்ளனர்.
பாட் கம்மின்ஸ், டெல்லியில் முடிவடைந்த 2-வது டெஸ்ட் போட்டியுடன் சொந்த காரணங்களுக்காக அவசரமாக சிட்னி திரும்பினார். டேவிட் வார்னர் முழங்கையில் ஏற்பட்ட காயம் காரணமாக கடைசிஇரு டெஸ்ட் போட்டிகளில் இருந்தும் விலகி இருந்தார். அதேவேளையில் அஷ்டன் அகர், உள்நாட்டுகிரிக்கெட் போட்டிகளில் பங்கேற்பதற்காக விடுவிக்கப்பட்டிருந்தார். இவர்களில் பாட் கம்மின்ஸ் இந்தூரில் மார்ச் 1-ம் தேதி தொடங்க உள்ள 3-வது டெஸ்ட் போட்டிக்கு முன்னதாக அணியினருடன் இணையக்கூடும் என எதிர்பார்க்கப்படுகிறது.
» 2019ல் தோனி... இன்று ஹர்மன்பிரீத்... - ரன் அவுட்டால் கலைந்த இந்தியாவின் உலகக்கோப்பை கனவு
» WT20 WC அரையிறுதி | கடின இலக்கை விரட்டிப் பிடிக்க முயன்ற இந்தியா - ஆஸி. வெற்றி!
மேக்ஸ்வெல், மார்ஷ் ஆகியோர் தங்களது காலில் ஏற்பட்ட காயங்களுக்காக அறுவை சிகிச்சை செய்திருந்தனர். இருவரும் கடைசியாக கடந்த ஆண்டு நவம்பர் மாதம் ஆஸ்திரேலிய அணிக்காக விளையாடி இருந்தனர். தற்போது காயத்தில் இருந்து குணமடைந்து முழு உடற்தகுதியை அடைந்ததால் அணிக்கு மீண்டும் திரும்பி உள்ளனர்.
இந்தியாவுக்கு எதிரான ஒருநாள் கிரிக்கெட் போட்டித் தொடரில் டேவிட் வார்னருடன் தொடக்கவீரராக டிராவிஸ் ஹெட் களமிறங்குவார் என எதிர்பார்க்கப்படுகிறது.
அணி விவரம்: பாட் கம்மின்ஸ் (கேப்டன்), டேவிட் வார்னர், ஸ்டீவ் ஸ்மித், மார்னஷ் லபுஷேன், மிட்செல் மார்ஷ், டிராவிஸ் ஹெட், கிளென் மேக்ஸ்வெல், அலெக்ஸ் கேரி, மார்கஸ் ஸ்டாய்னிஸ், கேமரூன் கிரீன், ஜோஷ் இங்லிஸ், அஷ்டன் அகர், ஆடம் ஸம்பா, சீன் அபாட், ஜே ரிச்சர்ட்சன், மிட்செல் ஸ்டார்க்.
முக்கிய செய்திகள்
விளையாட்டு
7 hours ago
விளையாட்டு
21 hours ago
விளையாட்டு
1 day ago
விளையாட்டு
1 day ago
விளையாட்டு
1 day ago
விளையாட்டு
2 days ago
விளையாட்டு
2 days ago
விளையாட்டு
2 days ago
விளையாட்டு
2 days ago
விளையாட்டு
3 days ago
விளையாட்டு
3 days ago
விளையாட்டு
4 days ago
விளையாட்டு
4 days ago
விளையாட்டு
4 days ago
விளையாட்டு
4 days ago