சென்னை சூப்பர் கிங்ஸ் அணிக்காக விளையாடுவதில் மகிழ்ச்சி: வேலூரில் ரஹானே பெருமிதம்

By செய்திப்பிரிவு

வேலூர்: இந்தாண்டு ஐபிஎல் போட்டியில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணிக்காக விளையாடுவதில் மகிழ்ச்சி அடைகிறேன் என விஐடி பல்கலையில் நடைபெற்ற ரிவேரா-23 கலை திருவிழாவில் கிரிக்கெட் வீரர் ரஹானே தெரிவித்தார்.

வேலூர் விஐடி பல்கலைக்கழகத்தில் ரிவேரா-23 கலை திருவிழா நேற்று தொடங்கியது. நான்கு நாட்கள் நடைபெறும் கலை திருவிழாவை பிரபல கிரிக்கெட் வீரர் ரஹானே தொடங்கி வைத்து பேசும்போது, ‘‘விஐடியில் நடைபெறும் இந்த நிகழ்ச்சியில் கலந்து கொள்வதில் மகிழ்ச்சி அடைகிறேன்.

கல்வியும், விளையாட்டும் எப்போதும் எதிர் எதிராகத்தான் இருக்கும். ஆனால், இங்கு ஒன்றாக சேர்ந்து இருப்பதை பார்க்கிறேன். ரிவேராவில் 45 ஆயிரம் பேர் பங்கேற்றுள்ளனர். இதனால், கிரிக்கெட் மைதானத்தில் இருப்பது போன்ற உணர்வு எனக்கு இருக்கிறது. கல்லூரி நாட்களை நான் தவற விட்டேன். அந்த நேரத்தில் நாட்டுக்காக விளையாடிக்கொண்டிருந்தேன்.

இளைஞர்கள் புத்தி கூர்மையானவர்களாகவும் தகவல்களை தெரிந்தவர்களாகவும் பயமில்லாதவர்களாகவும் இருக்கிறார்கள். இளம் இந்தியாவை நான் விரும்புகிறேன். இந்தாண்டு ஐபிஎல் போட்டியில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணிக்காக விளையாடுகிறேன் என்பதில் மகிழ்ச்சியாக உள்ளது’’ என்றார்.

தொடர்ந்து மாணவர்களின் கேள்விகளுக்கு ரஹானே பதில் அளித்து பேசும்போது, ‘‘ராகுல் டிராவிட், சச்சின் டெண்டுல்கர் ஆகியோரை பார்த்து கிரிக்கெட் விளையாட தொடங்கினேன். தோனியையும் குறிப்பிட வேண்டும். ஆஸ்திரேலியா நாட்டின் காபா மைதானத்தில் விளையாடியதை உங்களாலும், என்னாலும் மறக்க முடியாது.

அந்த போட்டியில் கடினமாக விளையாடி வெற்றி பெற்றோம். கிரிக்கெட்டை தவிர்த்து வாகனம் ஓட்டுவது, நேரம் கிடைக்கும்போது புத்தகம் படிப்பதுடன் தற்காப்பு கலை பிடிக்கும். கராத்தே பயிற்சியில் கருப்பு பட்டை பெற்றுள்ளேன். நான் கல்லூரிக்கு ஒரே ஒரு நாள் மட்டுமே சென்றுள்ளேன்.

அதை எப்போதும் மறக்க முடியாது. இந்தியாவுக்காக கிரிக்கெட் விளையாட தொடங்கி யதால் கல்லூரி வாழ்க்கையை தவற விட்டேன். நடுத்தர குடும்பத்தில் பிறந்த எனக்கு எனது பெற்றோர்கள் உதவியாக இருந்தார்கள். அவர்களுடைய உதவியால் என்னுடைய இலக்கை அடைந்தேன். இளைஞர்கள் மற்றவர்களுக்கு மரியாதை கொடுக்க வேண்டும். ஒழுக்கம் இருந்தால் இலக்கை அடையலாம்’’ என தெரிவித்தார்.

இந்த நிகழ்ச்சியில், விஐடி துணைத் தலைவர்கள் சங்கர் விசுவநாதன், ஜி.வி.செல்வம், உதவி துணை தலைவர் காதம்பரி விசுவநாதன், துணை வேந்தர் ராம் பாபு கோடாளி, இணை துணை வேந்தர் பார்த்தசாரதி மல்லிக் உள்ளிட்டோர் பங்கேற்றனர். ரிவேரா-23 திருவிழாவின் முதல் நாளான நேற்று காலை ‘மன நலன் மற்றும் மன உறுதி’ என்ற நோக்கத்துடன் ஆயிரத்துக்கும் மேற்பட்ட மாணவ, மாணவிகள் பங்கேற்ற 9 கி.மீ தொலைவு மாரத்தான் ஓட்டத்தை விஐடி துணைத் தலைவர் ஜி.வி.செல்வம் கொடியசைத்து தொடங்கி வைத்தார்.

காட்பாடியின் முக்கிய சாலைகளின் வழியாக சென்ற மாரத்தான் ஓட்டம் விஐடியில் நிறைவு பெற்றது. இதில், வெற்றி பெற்றவர்களுக்கு கிரிக்கெட் வீரர் ரஹானே பரிசுகளை வழங்கி பாராட்டினார். முதல் நாளான நேற்றிரவு தாய்க்குடம் பிரிட்ஜ் மற்றும் அர்மான் மாலிக் குழுவினரின் இசை நிகழ்ச்சி நடைபெற்றது.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

விளையாட்டு

1 hour ago

விளையாட்டு

3 hours ago

விளையாட்டு

4 hours ago

விளையாட்டு

11 hours ago

விளையாட்டு

11 hours ago

விளையாட்டு

13 hours ago

விளையாட்டு

1 day ago

விளையாட்டு

1 day ago

விளையாட்டு

1 day ago

விளையாட்டு

1 day ago

விளையாட்டு

1 day ago

விளையாட்டு

1 day ago

விளையாட்டு

1 day ago

விளையாட்டு

3 days ago

விளையாட்டு

3 days ago

மேலும்