ஜடேஜா, அஸ்வின் சுழலில் சுருண்ட ஆஸி., - இரண்டாவது டெஸ்டிலும் இந்திய அணி வெற்றி 

By செய்திப்பிரிவு

டெல்லி: ஆஸ்திரேலியாவுக்கு எதிரான இரண்டாவது டெஸ்ட் கிரிக்கெட் போட்டியில் இந்திய அணி 6 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றுள்ளது.

இந்தியாவுக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள ஆஸ்திரேலியா 4 டெஸ்ட் போட்டிகள் கொண்ட தொடரில் விளையாடி வருகிறது. முதல் டெஸ்ட் போட்டியில் இந்திய அணி இன்னிங்ஸ் வெற்றி பெற்ற நிலையில் இரண்டாவது டெஸ்ட் போட்டி டெல்லியில் நேற்று முன் தினம் தொடங்கியது.

இதில் டாஸ் வென்று முதலில் பேட்டிங் செய்த ஆஸ்திரேலிய அணி 263 ரன்களைச் சேர்த்தது. அடுத்ததாக களமிறங்கிய இந்திய அணி 262 ரன்களை சேர்த்தது. 1 ரன் முன்னிலையில் இரண்டாவது இன்னிங்ஸை தொடங்கிய ஆஸ்திரேலியா இரண்டாவது நாள் முடிவில் 1 விக்கெட்டை இழந்து 61 ரன்களைச் சேர்த்திருந்தது. இதனையடுத்து இன்று தொடங்கிய மூன்றாம் ஆட்டத்தில் ஜடேஜா, அஸ்வின் சுழலில் ஆஸ்திரேலியா 113 ரன்களில் சுருண்டது.

இதில், சுழற்பந்துவீச்சாளர்களான ஜடேஜா 7 விக்கெட்டுகளையும் அஸ்வின் 3 விக்கெட்டுகளையும் வீழ்த்தினர். 114 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் களமிறங்கிய இந்திய அணிக்கு ரோஹித் சர்மா - கே.எல்.ராகுல் இணை தொடக்கம் கொடுத்தது. கே.எல்.ராகுல் நம்பிக்கை அளிப்பார் என எதிர்பார்த்த நிலையில் 1 ரன்னில் பெவிலியன் திரும்பினார். மறுமுனையிலிருந்த ரோஹித் அதிரடி காட்டி 20 பந்துகளில் 31 ரன்களைச் சேர்ந்தார்.

எதிர்பாராத விதமாக அவர் ரன் அவுட்டாக, விராட் கோலி - புஜாரா இணை அணியை வெற்றிப்பாதைக்கு அழைத்துச் சென்றது. கோலி 20 ரன்களில் அவுட்டானாலும், புஜாராவுடன் இணைந்து ஸ்ரீகர் பரத் அணியை வெற்றிபெறச்செய்தார். இதன் மூலம் 26.4 ஓவர்களில் வெற்றி இலக்கை எட்டிய இந்திய அணி ஆஸ்திரேலியாவுக்கு எதிரான 2வது டெஸ்ட் போட்டியில் 6 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. ஆஸ்திரேலியா அணி தரப்பில் நாதன் லயன் 2 விக்கெட்டுகளையும், மார்ஃபி ஒரு விக்கெட்டுகளையும் வீழ்த்தினர்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

விளையாட்டு

18 hours ago

விளையாட்டு

20 hours ago

விளையாட்டு

23 hours ago

விளையாட்டு

1 day ago

விளையாட்டு

1 day ago

விளையாட்டு

1 day ago

விளையாட்டு

2 days ago

விளையாட்டு

2 days ago

விளையாட்டு

2 days ago

விளையாட்டு

2 days ago

விளையாட்டு

3 days ago

விளையாட்டு

3 days ago

விளையாட்டு

5 days ago

விளையாட்டு

5 days ago

விளையாட்டு

5 days ago

மேலும்