மும்பை: ஐபிஎல் டி20 கிரிக்கெட் தொடரின்16-வது சீசனுக்கான போட்டி அட்டவணையை பிசிசிஐ நேற்று வெளியிட்டது. 10 அணிகள் பங்கேற்கும் இந்த டி20 கிரிக்கெட் திருவிழா வரும் மார்ச் 31-ம் தேதி தொடங்குகிறது. லீக் போட்டிக்கான அட்டவணை மட்டும் தற்போது வெளியிடப்பட்டுள்ளது. 52 நாட்களில் மொத்தம் 70 லீக் ஆட்டங்கள் நடைபெறுகிறது. லீக் ஆட்டம் மே 21-ம்தேதி முடிவடைகிறது.
பிளே ஆஃப், இறுதிப் போட்டிநடைபெறும் இடங்கள் பின்னர் அறிவிக்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. இறுதிப் போட்டி மே 28-ம்தேதி நடைபெறுகிறது. இம்முறை பழைய பாணியில் ஒவ்வொரு அணியும் தனது சொந்த மைதானத்தில் 7 ஆட்டத்திலும், வெளி மைதானங்களில் 7 ஆட்டத்திலும் விளையாட உள்ளன. மொத்தம் 12 நகரங்களில் போட்டி நடைபெறுகிறது.
டி 20 கிரிக்கெட் திருவிழாவின் தொடக்க ஆட்டத்தில் மார்ச் 31-ம்தேதி நடப்பு சாம்பியனான குஜராத் டைட்டன்ஸ், 4 முறை சாம்பியனான சென்னை சூப்பர் கிங்ஸ் (சிஎஸ்கே) அணியுடன் மோதுகிறது. இந்த ஆட்டம் அகமதாபாத்தில் உள்ள நரேந்திர மோடி மைதானத்தில் இரவு 7.30 மணிக்கு நடைபெறுகிறது. சிஎஸ்கே தனது சொந்த மைதானமான சேப்பாக்கத்தில் முதல் ஆட்டத்தை ஏப்ரல் 3-ம் தேதி லக்னோவுக்கு எதிராக விளையாடுகிறது. இம்முறை 18 ‘டபுள்ஹெட்டர்ஸ்’ (ஒரே நாளில் இரு ஆட்டங்கள்) நடத்தப்பட உள்ளது.
ராஜஸ்தான் ராயல்ஸ் தனது முதல் இரு சொந்த மைதான ஆட்டங்களை குவாஹாட்டியிலும், எஞ்சியுள்ள 5 ஆட்டங்களை ஜெய்ப்பூரிலும் விளையாடுகிறது.பஞ்சாப் 5 ஆட்டங்களை மொஹாலியிலும் இரு ஆட்டங்களை தரம்சாலாவிலும் விளையாட உள்ளது.
» விளையாட்டுத் துளிகள் | தமிழ்நாடு கிரிக்கெட் அணியின் பயிற்சியாளரானார் குல்கர்னி
» சென்னை ஓபன் ஏடிபி சாலஞ்சர் டென்னிஸ் - அரை இறுதியில் நுழைந்தார் சுமித் நாகல்
முக்கிய செய்திகள்
விளையாட்டு
5 hours ago
விளையாட்டு
5 hours ago
விளையாட்டு
1 day ago
விளையாட்டு
1 day ago
விளையாட்டு
1 day ago
விளையாட்டு
1 day ago
விளையாட்டு
1 day ago
விளையாட்டு
1 day ago
விளையாட்டு
2 days ago
விளையாட்டு
2 days ago
விளையாட்டு
2 days ago
விளையாட்டு
2 days ago
விளையாட்டு
2 days ago
விளையாட்டு
2 days ago
விளையாட்டு
2 days ago