டாம் பிளண்டெலின் அபார ஆட்டம்: இங்கிலாந்துக்கு தலைவலி கொடுத்த அட்டகாச சதம்!

By ஆர்.முத்துக்குமார்

மவுண்ட் மாங்குனியில் நடைபெறும் இங்கிலாந்து - நியூஸிலாந்து அணிகளுக்கு இடையிலான பகலிரவு முதல் டெஸ்ட் போட்டியின் 2ஆம் நாளான இன்று டாம் பிளண்டெலின் அட்டகாசமான சதத்துடன் நியூஸிலாந்து தன் முதல் இன்னிங்ஸில் 306 ரன்கள் எடுத்து இங்கிலாந்தின் 325 ரன்களுக்கு அருகில் வந்தது. இங்கிலாந்து ஆட்ட முடிவில் 2 விக்கெட்டுகள் இழப்பிற்கு 79 ரன்கள் எடுத்து மொத்தமாக 98 ரன்கள் முன்னிலை பெற்றுள்ளது.

ஆட்ட முடிவில் ஆலி போப், 14 ரன்களுடனும், இரவுக்காவலன் பிராட், 6 ரன்களுடனும் களத்தில் இருக்கின்றனர். முன்னதாக, இங்கிலாந்து தொடக்க வீரர்கள் ஜாக் கிராலி 6 பவுண்டரிகளுடன் அதிரடியாக 28 ரன்களையும், பென் டக்கெட் 27 பந்துகளில் 4 பவுண்டரிகளுடன் 25 ரன்கள் எடுத்தும் குக்கலைன் வேகத்தில் வெளியேறினர். இங்கிலாந்து தன் அதிரடி முறைகளை மாற்றிக் கொள்வதாக இல்லை. பிராட் இறங்கிய வேகத்தில் மேலேறி வந்து அடிக்கப் போய் கொடியேற்றிய கேட்சை விக்கெட் கீப்பர் பிளண்டெலும், பவுலர் குக்கலைனும் ஒருவருக்கொருவர் வேடிக்கைப் பார்த்துக் கோட்டை விட்டனர். இங்கிலாந்து 16 ஓவர்களில் 2 விக்கெட்டுகள் இழப்புக்கு 79 ரன்கள் எங்க வேகவேகமாக ரன்களைக் குவித்து வருகின்றது.

பிராட் - ஆண்டர்சன் இணைந்து 1001 விக்கெட்டுகள்: முன்னதாக, 3 விக்கெட்டுகளை இழந்து 37 ரன்கள் எடுத்த நிலையில் இரண்டாம் நாள் ஆட்டத்தை துவங்கிய நியூஸிலாந்து அணி, முதல் 2 மணி நேர ஆட்டத்திற்குள் மேலும் 2 விக்கெட்டுகளை இழந்தது. நீல் வாக்னர் தன் பங்குக்கு 1 பவுண்டரி 2 சிக்சர்களுடன் 32 பந்துகளில் 27 ரன்கள் எடுத்து ராபின்சனிடம் கேட்ச் கொடுத்து பிராட் பந்தில் வெளியேறினார். இது பிராட் - ஆண்டர்சன் இணைந்து எடுத்த 1000-வது டெஸ்ட் விக்கெட் ஆகும். பிறகு இதே இன்னிங்ஸில் ஆண்டர்சன் மேலும் ஒரு விக்கெட்டை வீழ்த்த 1,001 விக்கெட்டுகள் கண்ட சாதனை பவுலிங் கூட்டாளிகள் என்ற பெயரை பெற்றனர்.

அடுத்ததாக டேரில் மிட்செல் சோம்பேறித்தனமாக ராபின்சன் பந்திற்கு பேட்டைக் கொண்டு வர பந்து முன்னமேயே கால்காப்பைத் தாக்க எல்பி.ஆகி டக் அவுட் ஆனார்.

டாம் பிளெண்டல் அட்டாக்: பிளண்டெலும், கான்வேயும் மூழ்கும் கப்பலை நிலை நிறுத்திச் செலுத்தினர். பிளாட் பேட்டிங் பிட்ச் ஆன நிலையில் ஸ்விங் இல்லை. அப்போது கேப்டன் ஸ்டோக்ஸ் தனது வழக்கமான ஷார்ட் பிட்ச் பந்துகளை வீசத் தொடங்கினார். ஆனால், இதுவும் பலனளித்தது 77 ரன்களில் இங்கிலாந்தின் பெரிய தலைவலியாக இருந்த டெவன் கான்வே புல் ஷாட் ஆடப்போய் கேட்ச் கொடுத்து ஸ்டோக்ஸிடம் காலியானார். 75 ரன்களே இருவருக்குமான பார்ட்னர்ஷிப். ஆனால், இந்த ஓவரில் ஸ்டோக்ஸ் 8 பந்துகள் வீசியதும் குறிப்பிடத்தக்கது. அவர் நோ-பால் பிரச்சனைகளிலிருந்து முழுதும் இன்னும் விடுபட முடியவில்லை. இவருக்குப் பிறகு மைக்கேல் பிரேஸ்வெல் 7 ரன்களில் லீச்சிடம் வெளியேற நியூஸிலாந்து மீண்டும் 7 விக்கெட்டுகள் இழப்பிற்கு 182 ரன்கள் என திணறல் பாதைக்குத் திரும்பியது. ஆனால், இங்குதான் டாம் பிளண்டெல் சதம் சாதாரண சதங்களிலிருந்து வேறுபட்டு கிரேட் சதமாக மாறியது.

குக்கெலைன் ஒரு புறம் நிற்க (20), டாம் பிளெண்டல் அட்டாக் செய்யத் தொடங்கினார். இருவரும் 53 ரன்களைச் சேர்த்தனர். குக்கலைன் ராபின்சன் பந்தில் பவுல்டு ஆனார். 8 விக்கெட்டுகள் இழப்பிற்கு 235 ரன்கள் எடுத்தது நியூஸிலாந்து. டிம் சவுதியும் 10 ரன்களில் வெளியேறினார். அப்போது அறிமுக வீரர் டிக்னர் (3 நாட் அவுட்) ஸ்டாண்ட் கொடுக்க டாம் பிளெண்டல் அதிரடிக் காட்டத் தொடங்கினார். லீச்சின் ஒரே ஓவரில் 2 பவுண்டரிகள் ஒரு அற்புதமான நேர் சிக்ஸருடன் 96 ரன்களை எட்டி சதத்திற்கு அருகில் வந்தார். அடுத்த ஓவரில் 143 பந்துகளில் சதம் கண்டார் பிளண்டெல்.

டிக்னர் மறுமுனையில் டெஸ்ட்டிங் பந்துகளையெல்லாம் அனாயசமாக தடுத்து ரசிகர்களின் ஏகோபித்தப் பாராட்டுகளைப் பெற பிளண்டெல் ஸ்டோக்ஸின் ஷார்ட் பிட்ச் பந்துகளை புல், கட், தூக்கி அடித்தல் என்றும், நேராக டென்னிஸ் ஷாட்டில் பவுண்டரி என்றும் இவர் பாணி ‘பாஸ்பால்’ இன்னிங்ஸை ஆடி மேலும் 8 பவுண்டரிகளை விளாசி 181 பந்துகளில் 19 பவுண்டரிகள், 1 சிக்சருடன் 138 ரன்கள் எடுத்து ஜேம்ஸ் ஆண்டர்சனின் புதிய பந்து டெலிவரியை தூக்கி அடிக்க முயன்று கேட்ச் ஆகி வெளியேற நியூசிலாந்து 306 ரன்களுக்கு ஆல் அவுட்டானது. இது டாம் பிளெண்டலின் 4வது டெஸ்ட் சதமாகும். இது இவரது அதிகபட்ச டெஸ்ட் ஸ்கோருமாகும்.

இங்கிலாந்து தரப்பில் ஆண்டர்சன் 3 விக்கெட்டுகளையும், ஆலி ராபின்சன் 4 விக்கெட்டுகளையும் கைப்பற்றினர். பிராட், லீச், ஸ்டோக்ஸ் தலா 1 விக்கெட்டைக் கைப்பற்றினர்.

இரண்டாவது இன்னிங்ஸை 19 ரன்கள் முன்னிலையில் தொடங்கியது இங்கிலாந்து. இரண்டாம் நாள் ஆட்ட முடிவில் 2 விக்கெட்டுகள் இழப்பிற்கு 79 ரன்கள் எடுத்தது அந்த அணி. அதன் மூலம் இந்த ஆட்டத்தில் 98 ரன்கள் முன்னிலை பெற்றுள்ளது.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

விளையாட்டு

3 hours ago

விளையாட்டு

3 hours ago

விளையாட்டு

6 hours ago

விளையாட்டு

1 day ago

விளையாட்டு

1 day ago

விளையாட்டு

1 day ago

விளையாட்டு

2 days ago

விளையாட்டு

2 days ago

விளையாட்டு

2 days ago

விளையாட்டு

2 days ago

விளையாட்டு

3 days ago

விளையாட்டு

3 days ago

விளையாட்டு

3 days ago

விளையாட்டு

3 days ago

விளையாட்டு

4 days ago

மேலும்