மும்பை: இந்திய கிரிக்கெட் அணியின் தேர்வுக்குழு தலைவர் சேத்தன் சர்மா தனது பதவியை ராஜினாமா செய்திருக்கிறார்.
சில நாட்களுக்கு முன்னர் இந்திய கிரிக்கெட் அணியின் தேர்வுக்குழு தலைவர் சேத்தன் சர்மாவிடம் இந்திய தனியார் தொலைக்காட்சி நிறுவனம் நடத்திய ரகசிய புலனாய்வு விசாரணையில் பல்வேறு அதிர்ச்சி தகவல்கள் வெளியாகி பரப்பரப்பை ஏற்படுத்தியது.
ரகசிய புலனாய்வு விசாரணையில் சேத்தன் சர்மா, “விராட் கோலி, கங்குலி இடையே ஈகோ பிரச்னைகள் இருந்தன. கிரிக்கெட் வாரியத்தை விடவும் தன்னை மிகப்பெரிய ஆளாக கோலி நினைத்துக் கொண்டார். யாரும் அவரைத் தொட முடியாது என்ற எண்ணமும் அவருக்கு இருந்தது. இந்திய வீரர்கள் உடல் தகுதி பெறாத நிலையில் ஊக்க மருந்து எடுத்து கொண்டனர்” என சர்ச்சைக்கு மிகுந்த கருத்துகளை பேசி இருந்தார். இது தொடர்பான வீடியோ சமூக வலைதளங்களில் வெளியாகி பரப்பரப்பை ஏற்படுத்தியது. ( ஒரு வீரர், பிசிசிஐக்கு எதிராக செயல்படுவது அரிதான ஒன்று - தேர்வுக்குழு தலைவர் சேத்தன் சர்மா )
மேலும், இதனை தொடர்ந்து சேத்தன் சர்மா மீது இந்திய அணி நிர்வாகம் தனது நம்பிக்கையை இழந்துவிட்டதாக கூறப்பட்டது
» யூடியூப்-ன் புதிய தலைமை செயல் அதிகாரியாக அமெரிக்க - இந்தியர் நீல் மோகன் நியமனம்
» அருணாச்சலப் பிரதேசம் இந்தியாவின் ஒருங்கிணைந்த பகுதி: சீனாவை கண்டித்து அமெரிக்கா தீர்மானம்
இந்த நிலையில் இந்திய கிரிக்கெட் அணியின் தேர்வுக்குழு தலைவர் பதவியை சேத்தன் சர்மா இன்று (பிப்.17) ராஜினாமா செய்திருக்கிறார். அவரது ராஜினாமாவை பிசிசிஐ எற்றுக் கொண்டுள்ளதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன.
முக்கிய செய்திகள்
விளையாட்டு
3 hours ago
விளையாட்டு
3 hours ago
விளையாட்டு
3 hours ago
விளையாட்டு
10 hours ago
விளையாட்டு
12 hours ago
விளையாட்டு
14 hours ago
விளையாட்டு
20 hours ago
விளையாட்டு
21 hours ago
விளையாட்டு
23 hours ago
விளையாட்டு
1 day ago
விளையாட்டு
1 day ago
விளையாட்டு
1 day ago
விளையாட்டு
1 day ago
விளையாட்டு
1 day ago
விளையாட்டு
1 day ago