சென்னை ஓபன் சாலஞ்சர் தொடரில் சுமித் நாகல் கால் இறுதிக்கு முன்னேற்றம்

By செய்திப்பிரிவு

சென்னை: சென்னை ஓபன் ஏடிபி சாலஞ்சர் டென்னிஸ் தொடர் நுங்கம்பாக்கத்தில் உள்ள எஸ்டிஏடி மைதானத்தில் நடைபெற்று வருகிறது. இதில் நேற்று நடைபெற்ற ஆடவர் ஒற்றையர் பிரிவு 2-வது சுற்று ஆட்டத்தில் தரவரிசையில் 506-வது இடத்தில் உள்ள இந்தியாவின் சுமித் நாகல், 343-வது இடத்தில் உள்ள சீன தைபேவின் ஜேசன் ஜங்கை எதிர்த்து விளையாடினார்.

ஒரு மணி நேரம் 56 நிமிடங்கள் நடைபெற்ற இந்த ஆட்டத்தில் சுமித் நாகல் 3-6, 6-2, 6-0 என்ற செட் கணக்கில் வெற்றி பெற்று கால் இறுதி சுற்றுக்கு முன்னேறினார். இன்று நடைபெறும் கால் இறுதி சுற்றில் 313-ம் நிலை வீரரான கிரேட் பிரிட்டனின் ஜே கிளார்க்குடன் மோதுகிறார் சுமித் நாகல்.

ஆடவர் இரட்டையர் பிரிவு கால் இறுதி சுற்றில்இந்தியாவின் ராம் பாலாஜி, ஜீவன் நெடுஞ்செழியன் ஜோடி சகநாட்டைச் சேர்ந்த சுமித் நாகல், முகுந்த் சசிகுமார் ஜோடியை எதிர்கொண்டது. ஒரு மணி நேரம்12 நிமிடங்கள் நடைபெற்ற இந்த ஆட்டத்தில் ராம்பாலாஜி, ஜீவன் நெடுஞ்செழியன் ஜோடி 7-6, 6-0 என்ற செட் கணக்கில் வெற்றி பெற்று அரை இறுதிக்கு முன்னேறியது. அரை இறுதி சுற்றில் ஆஸ்திரியாவின் செபாஸ்டியன் ஆஃப்னர், குரோஷியாவின் நினோ செர்டருசிக் ஜோடியை சந்திக்கிறது ராம் பாலாஜி, ஜீவன் நெடுஞ்செழியன் இணை.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

விளையாட்டு

4 hours ago

விளையாட்டு

1 day ago

விளையாட்டு

1 day ago

விளையாட்டு

1 day ago

விளையாட்டு

2 days ago

விளையாட்டு

3 days ago

விளையாட்டு

3 days ago

விளையாட்டு

3 days ago

விளையாட்டு

3 days ago

விளையாட்டு

3 days ago

விளையாட்டு

3 days ago

விளையாட்டு

3 days ago

விளையாட்டு

4 days ago

விளையாட்டு

4 days ago

விளையாட்டு

5 days ago

மேலும்