WTC பட்டத்தை வெல்ல வேண்டும் என்பதே என் கனா: 100-வது டெஸ்ட் போட்டியில் விளையாடும் புஜாரா

By செய்திப்பிரிவு

புதுடெல்லி: தனது 100-வது டெஸ்ட் போட்டியில் விளையாட உள்ளார் இந்திய கிரிக்கெட் வீரர் புஜாரா. இந்நிலையில், உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் பட்டத்தை வெல்ல வேண்டும் என்பதே தன் கனா என அவர் தெரிவித்துள்ளார். நாளை தொடங்கும் ஆஸ்திரேலிய அணிக்கு எதிரான 2-வது டெஸ்ட் போட்டி புஜாரா விளையாட உள்ள 100-வது டெஸ்ட் போட்டியாக அமைந்துள்ளது.

இந்திய அணியின் சீனியர் வீரர்களில் ஒருவர் புஜாரா. டெஸ்ட் அணியில் ரெகுலர் பேட்ஸ்மேனாக சர்வதேச கிரிக்கெட்டில் விளையாடி வருகிறார். இதுவரையில் இந்திய அணிக்காக 99 டெஸ்ட் போட்டிகளில் விளையாடி, 7,021 ரன்கள் குவித்துள்ளார். இதில் 19 சதங்கள் மற்றும் 34 அரை சதங்கள் அடங்கும். டெஸ்ட் கிரிக்கெட்டில் இவரது பேட்டிங் சராசரி 44.45. மொத்தம் 15,797 பந்துகளை எதிர்கொண்டுள்ளார்.

100 டெஸ்ட் போட்டிகளில் விளையாடிய 13-வது இந்தியர் என்ற சாதனையை புஜாரா படைக்க உள்ளார். கடந்த 2010-ல் அறிமுக வீரராக டெஸ்ட் கிரிக்கெட்டில் விளையாட துவங்கினார். தடுப்புமுறை ஆட்டத்திற்கு பெயர் போனவர்.

“100 டெஸ்ட் போட்டிகளில் விளையாடுவது என்பது எனக்கும், என் குடும்பத்தினருக்கும் மிகப்பெரியது. இதில் எனது தந்தைக்கு முக்கிய பங்கு உள்ளது. அவர் இந்தப் போட்டியை பார்க்க நாளை இங்கு இருப்பார். எனது குடும்பம் எனக்கு கொடுத்த ஆதரவுக்கு இந்நேரத்தில் நன்றி தெரிவித்துக் கொள்கிறேன். ஆனால், இன்னும் இங்கு நான் சாதிக்க வேண்டியது நிறைய உள்ளது.

இந்திய அணியில் இருந்து டிராப் ஆன போது நான் செய்ய வேண்டியது என்ன? எதில் கவனம் செலுத்த வேண்டும்? என ராகுல் திராவிட் வசம் கேட்டு தெரிந்துக் கொண்டேன். அது மிகவும் சவாலான காலம். உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப்பில் இந்தியா பட்டம் வெல்ல வேண்டும் என்பதே எனது கனா” என புஜாரா தெரிவித்துள்ளார். வரும் ஜூன் மாதம் இங்கிலாந்தில் நடைபெற உள்ள உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் தொடரில் இந்தியா தகுதி பெற இன்னும் 2 டெஸ்ட் போட்டிகளில் வெற்றி பெற வேண்டும்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

விளையாட்டு

15 hours ago

விளையாட்டு

15 hours ago

விளையாட்டு

16 hours ago

விளையாட்டு

1 day ago

விளையாட்டு

2 days ago

விளையாட்டு

2 days ago

விளையாட்டு

2 days ago

விளையாட்டு

2 days ago

விளையாட்டு

2 days ago

விளையாட்டு

2 days ago

விளையாட்டு

2 days ago

விளையாட்டு

3 days ago

விளையாட்டு

3 days ago

விளையாட்டு

4 days ago

விளையாட்டு

4 days ago

மேலும்