செய்தி துளிகள்… - ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணியின் ஆலோசகராக சானியா மிர்சா

By செய்திப்பிரிவு

> இங்கிலாந்து- நியூஸிலாந்து அணிகள் இடையிலான பகல் இரவு டெஸ்ட் போட்டி மவுண்ட் மவுன்கனுயில் இந்திய நேரப்படி இன்று காலை 6.30 மணிக்கு தொடங்குகிறது.

> தருமபுரியில் நடைபெற்ற மாநில அளவிலான பால் பாட்மிண்டன் போட்டியில் சென்னை கத்திவாக்கம் அரசு மேல்நிலைப் பள்ளிஅணி 38–36, 33–35, 35–33 என்ற செட் கணக்கில் மதுரை ஓ.சி.பி.எம். அரசு பெண்கள் மேல்நிலைப் பள்ளி அணியை தோற்கடித்து முதல் இடத்தை பிடித்தது.

> கிளப்களுக்கு இடையிலான கால்பந்து உலகக் கோப்பை தொடர் சவுதி அரேபியாவில் வரும் டிசம்பர் 12 முதல் 22-ம் தேதி வரை நடைபெறும் சர்வதேச கால்பந்து சம்மேளனம் அறிவித்துள்ளது. இந்தத் தொடரில் 7 அணிகள் கலந்து கொள்கின்றன.

> முதல்வர் கோப்பைக்கான சென்னை மாவட்ட மகளிர் வாலிபால் போட்டியில் எம்.ஓ.பி.வைஷ்ணவா கல்லூரி 31–29,25–22 என்ற கணக்கில் எத்திராஜ் கல்லூரியை வீழ்த்தி முதலிடம் பிடித்தது.

> ரஞ்சி கோப்பை கிரிக்கெட் தொடரின் இறுதி ஆட்டத்தில் பெங்கால் – சவுராஷ்டிரா அணிகள் இன்று மோதுகின்றன. கொல்கத்தா ஈடன் கார்டன் மைதானத்தில் காலை 9 மணிக்கு போட்டி தொடங்குகிறது.

> மகளிர் பிரீமியர் லீக் டி 20 கிரிக்கெட் தொடரில் கலந்து கொள்ளும் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணியின் ஆலோசகராக இந்திய டென்னிஸ் நட்சத்திரம் சானியா மிர்சா நியமிக்கப்பட்டுள்ளார்.

> மாநிலங்களுக்கு இடையிலான 84-வது இளையோர் மற்றும் ஜூனியர் தேசிய சாம்பியன்ஷிப் டேபிள் டென்னிஸ் போட்டிசென்னை நேரு உள் விளையாட்டரங்கில் நடைபெற்று வருகிறது. இதில் நேற்று ஆடவருக்கான யு-19 அணிகள் பிரிவு இறுதிப் போட்டியில் மேற்கு வங்கம் – உத்தரபிரதேசம் மோதின. இந்த ஆட்டத்தில் மேற்கு வங்கம் 3-0 என்ற கணக்கில் வெற்றி பெற்று சாம்பியன் பட்டம் வென்றது.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

விளையாட்டு

3 hours ago

விளையாட்டு

4 hours ago

விளையாட்டு

5 hours ago

விளையாட்டு

23 hours ago

விளையாட்டு

1 day ago

விளையாட்டு

1 day ago

விளையாட்டு

1 day ago

விளையாட்டு

2 days ago

விளையாட்டு

2 days ago

விளையாட்டு

3 days ago

விளையாட்டு

3 days ago

விளையாட்டு

3 days ago

விளையாட்டு

3 days ago

விளையாட்டு

3 days ago

விளையாட்டு

3 days ago

மேலும்