WPL | ஆர்சிபி வழிகாட்டியாக சானியா மிர்சா நியமனம்

By செய்திப்பிரிவு

பெங்களூரு: எதிர்வரும் மகளிர் ப்ரீமியர் லீக் கிரிக்கெட் முதல் சீசனுக்கு ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணியின் வழிகாட்டியாக டென்னிஸ் வீராங்கனை சானியா மிர்சா நியமிக்கப்பட்டுள்ளார். இதனை அந்த அணியின் நிர்வாகம் அறிவித்துள்ளது.

இரட்டையர் பிரிவில் ஆறு கிராண்ட்ஸ்லாம் பட்டங்களை வென்ற இந்தியா டென்னிஸ் வீராங்கனையான சானியா, இந்த வார இறுதியில் துபாயில் நடைபெறவிருக்கும் WTA 1000 தொடருக்கு பிறகு தொழில்முறை டென்னிஸ் விளையாட்டில் இருந்து ஓய்வு பெறுவார் என தெரிகிறது. இந்த நிலையில்தான் அவர் வழிகாட்டியாக நியமிக்கப்பட்டுள்ளார்.

“இந்திய மகளிர் விளையாட்டில் சானியா முன்னோடியாக அறியப்படுகிறார். களத்திற்கு உள்ளேயும், வெளியேயும் எதிகொள்கின்ற தடைகளை தகர்த்தவர். அவர் ஆர்சிபி அணியின் வழிகாட்டியாக நியமிப்பதில் பெருமை கொள்கிறோம்.

எங்கள் பயிற்சியாளர் குழு பயிற்சி சார்ந்த பணிகளை கையாளும். ஆனால், அழுத்ததின் போது வீராங்கனைகள் திறம்பட செயல்பட சானியாவின் வாழிகாட்டுதல் உதவும் என கருதுகிறோம்” என ஆர்சிபி தனது அறிவிப்பில் தெரிவித்துள்ளது.

“எனது ஓய்வுக்கு பிறகு இளம் வீராங்கனைகளுக்கு வழிகாட்டுவதுதான் எனது திட்டம். அதை விரைவில் செய்ய உள்ளதில் நான் உற்சாகம் அடைந்துள்ளேன். விளையாட்டு கேரியரில் இந்த 20 ஆண்டுகளில் நான் கடந்து வந்ததன் மூலம் பெற்ற அனுபவங்களை நிச்சயம் இளம் வீரங்கனைகளுடன் பகிர்வேன்” என சானியா தெரிவித்துள்ளார்.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE