சென்னை: மாநிலங்களுக்கு இடையிலான 84-வது இளையோர் மற்றும் ஜூனியர் தேசிய சாம்பியன்ஷிப் டேபிள் டென்னிஸ் போட்டி சென்னை நேரு உள் விளையாட்டரங்கில் நடைபெற்று வருகிறது.
இதில் நேற்று ஆடவருக்கான யு-19 அணிகள் பிரிவு கால் இறுதி சுற்றில் தமிழகம் – உத்தரபிரதேசம் அணிகள் மோதின. இந்த ஆட்டத்தில் தமிழகம் 1-3 என்ற கணக்கில் உத்தரபிரதேசத்திடம் தோல்வி அடைந்து பதக்க வேட்டையில் இருந்து வெளியேறியது.
தமிழகத்தின் பிரேயேஷ் ராஜ் 5-11,11-4,9-11,6-11 என்ற செட் கணக்கில் சரத் மிஸ்ராவிடம் தோல்வியடைந்தார். இதேபோன்று வருண் கணேஷ் 4-11,5-11,11-8,11-9,8-11 என்ற கணக்கில் திவ்யான்ஷ் வஸ்தவாவிடம் வீழ்ந்தார். 3-வது ஆட்டத்தில் அபிநந்த் 5-11,11-4,13-11,11-8 என்ற கணக்கில் அக் ஷத் தியாகியை தோற்கடித்தார். ஆனால் 4-வது ஆட்டத்தில் பிரேயேஷ் ராஜ் 9-11,9-11,11-7,9-11 என்ற கணக்கில் திவ்யான்ஷ் வஸ்தவாவிடம் தோல்வியடைந்தார். இதன் மூலம் தமிழக அணி பதக்க சுற்றுக்கு முன்னேறுவதற்கான வாய்ப்பை இழந்தது.
முக்கிய செய்திகள்
விளையாட்டு
1 day ago
விளையாட்டு
1 day ago
விளையாட்டு
1 day ago
விளையாட்டு
2 days ago
விளையாட்டு
2 days ago
விளையாட்டு
2 days ago
விளையாட்டு
3 days ago
விளையாட்டு
3 days ago
விளையாட்டு
3 days ago
விளையாட்டு
3 days ago
விளையாட்டு
4 days ago
விளையாட்டு
4 days ago
விளையாட்டு
4 days ago
விளையாட்டு
4 days ago
விளையாட்டு
5 days ago