சென்னை: சென்னை ஓபன் ஏடிபி சாலஞ்சர் டென்னிஸ் தொடரில் இந்தியாவின் சசிகுமார் முகுந்த், சுமித் நாகல் ஆகியோர் பிரதான சுற்றில் விளையாட தகுதி பெற்றனர்.
சென்னை ஓபன் ஏடிபி சாலஞ்சர் டென்னிஸ் தொடர் சென்னை நுங்கம்பாக்கத்தில் உள்ள எஸ்டிஏடி மைதானத்தில் நேற்று தொடங்கியது. தகுதி சுற்று ஆட்டத்தில் இந்தியாவின் சசிகுமார் முகுந்த் 4-6, 6-4, 6-4 என்ற செட் கணக்கில் சீன தைபேவின் ஜேசன் ஜங்கை வீழ்த்தி பிரதான சுற்றுக்கு தகுதி பெற்றார். இந்த ஆட்டம் 2 மணி நேரம் 24 நிமிடங்கள் நடைபெற்றது. 26 வயதான சசிகுமார் முகுந்த் முதல் சுற்றில் 2022-ம் ஆண்டு விம்பிள்டன் இரட்டையர் பிரிவு சாம்பியனான ஆஸ்திரேலியாவின் மேக்ஸ் பர்செல்லுடன் மோதுகிறார்.
மற்றொரு இந்திய வீரரான சுமித் நாகல் 6-1, 6-3 என்ற நேர் செட்டில் தென் கொரியாவின் ஜி சிங் நாமை வீழ்த்தினார். இந்த ஆட்டம் ஒரு மணி நேரம் 28 நிமிடங்கள் நடைபெற்றது. முதல் சுற்றில் சுமித் நாகல், போட்டித் தரவரிசையில் 4-வது இடத்தில் உள்ள கிரேட் பிரிட்டனின் ரியான் பெனிஸ்டனுடன் மோதுகிறார். இவர்கள் இருவருடன் பிரதான சுற்றில் இந்தியாவின் முன்னணி வீரர்களான பிரஜ்னேஷ் குணேஷ்வரன், ராம்குமார் ராமநாதன் ஆகியோரும் களமிறங்குகின்றனர். இவர்கள் 4 பேரும் பங்கேற்கும் முதல் சுற்று ஆட்டங்கள் இன்று நடைபெறுகிறது.
ராம்குமார் ராமநாதன், பல்கேரியாவின் டிமிடர் குஸ்மானோவுடனும் பிரஜ்னேஷ் குணேஷ்வரன், கிரேட் பிரிட்டனின் ஜே கிளார்க்குடனும் மோதுகின்றனர்.
முக்கிய செய்திகள்
விளையாட்டு
12 hours ago
விளையாட்டு
1 day ago
விளையாட்டு
1 day ago
விளையாட்டு
1 day ago
விளையாட்டு
1 day ago
விளையாட்டு
2 days ago
விளையாட்டு
2 days ago
விளையாட்டு
2 days ago
விளையாட்டு
2 days ago
விளையாட்டு
2 days ago
விளையாட்டு
2 days ago
விளையாட்டு
2 days ago
விளையாட்டு
2 days ago
விளையாட்டு
3 days ago
விளையாட்டு
3 days ago