இங்கிலாந்தின் 2019 உலகக் கோப்பை நாயகன் மோர்கன் தொழில்முறை கிரிக்கெட்டில் இருந்து ஓய்வு

By செய்திப்பிரிவு

லண்டன்: தொழில்முறை கிரிக்கெட்டில் இருந்து ஓய்வு பெறுவதாக அறிவித்துள்ளார் இங்கிலாந்து அணியின் முன்னாள் வீரர் இயன் மோர்கன். இவர் கடந்த 2019 உலகக் கோப்பை வென்ற இங்கிலாந்து அணியின் கேப்டனாக செயல்பட்டவர் என்பது குறிப்பிடத்தக்கது.

36 வயதான மோர்கன், அயர்லாந்து நாட்டில் பிறந்தவர். 2006 வாக்கில் சர்வதேச கிரிக்கெட்டில் அறிமுகமானார். அவர் முதன் முதலில் விளையாடிய சர்வதேச கிரிக்கெட் போட்டி அயர்லாந்து அணிக்காக தான். 2009 ஏப்ரல் வரை அயர்லாந்து அணிக்காக விளையாடி வந்தார். அதே ஆண்டின் மே மாதம் முதல் இங்கிலாந்து அணிக்காக விளையாட தொடங்கினார். அது முதல் கடந்த ஆண்டு வரையில் இங்கிலாந்து அணிக்காக அவர் விளையாடி இருந்தார்.

கடந்த ஆண்டு ஜூனில் சர்வதேச கிரிக்கெட்டில் இருந்து ஓய்வு பெறுவதாக அறிவித்தார். இருந்தாலும் தொழில்முறை சார்ந்த கிரிக்கெட் தொடர்களில் விளையாடி வந்தார். இந்த சூழலில் அதிலிருந்தும் ஓய்வு பெறுவதாக தற்போது அவர் அறிவித்துள்ளார்.

“அனைத்து வகையான கிரிக்கெட்டில் இருந்தும் ஓய்வு பெறுவதை பெருமையுடன் தெரிவித்துக் கொள்கிறேன். நீண்ட ஆலோசனைக்குப் பிறகு எடுத்த முடிவு இது. நான் நேசிக்கும் விளையாட்டிலிருந்து ஓய்வு எடுத்துக் கொள்ள இதுவே சரியான நேரம். 2005-ல் மிடில்செக்ஸ் அணியில் தொடங்கியது முதல் SA20 லீகில் பார்ல் ராயல்ஸ் அணிக்காக விளையாடியது வரை களத்தில் ஒவ்வொரு தருணத்தையும் நான் நேசித்தேன்.

எல்லா விளையாட்டு வீரர்களை போலவும் எனது கரியரில் ஏற்றத் தாழ்வுகள் இருந்துள்ளன. அனைத்து நேரங்களிலும் என் குடும்பத்தினரும், நண்பர்களும் துணையாக இருந்துள்ளனர். குறிப்பாக எனக்கு உறுதுணையாக இருந்த எனது மனைவிக்கு நான் நன்றி தெரிவித்துக் கொள்கிறேன்.

என்னை ஒரு வீரராக மாற்றிய சக வீரர்கள், பயிற்சியாளர்கள், ரசிகர்கள் என அனைவருக்கும் நன்றி. உலக அளவில் உள்ள ஃப்ரான்சைஸ் கிரிக்கெட் அணிகளுக்காக விளையாடியது மறக்க முடியாத பல நினைவுகளை எனக்கு கொடுத்துள்ளது.

சர்வதேச கிரிக்கெட்டில் இருந்து ஓய்வு பெற்ற பிறகு அன்புக்குரியவர்களுடன் அதிக நேரத்தை செலவிட முடிந்தது. வரும் நாட்களில் அதை தொடர்ந்து செய்வேன் என நம்புகிறேன்.

நான் களத்தில் விளையாடதான் விடை கொடுத்துள்ளேன். ஆனால், கிரிக்கெட் விளையாட்டுடன் தொடர்ந்து நான் பயணிப்பேன். அது வர்ணனையாளராக, வல்லுனராக இருக்கலாம்” என மோர்கன் தெரிவித்துள்ளார்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

விளையாட்டு

19 hours ago

விளையாட்டு

19 hours ago

விளையாட்டு

1 day ago

விளையாட்டு

1 day ago

விளையாட்டு

1 day ago

விளையாட்டு

1 day ago

விளையாட்டு

1 day ago

விளையாட்டு

2 days ago

விளையாட்டு

3 days ago

விளையாட்டு

3 days ago

விளையாட்டு

3 days ago

விளையாட்டு

3 days ago

விளையாட்டு

3 days ago

விளையாட்டு

4 days ago

விளையாட்டு

4 days ago

மேலும்