சென்னை: மாநிலங்களுக்கு இடையிலான 84-வது இளையோர் மற்றும் ஜூனியர் தேசிய சாம்பியன்ஷிப் டேபிள் டென்னிஸ் போட்டியில் இன்று அணிகளிடையிலான ஆட்டங்கள் நடைபெறவுள்ளன. இந்தப் போட்டி சென்னை நேரு உள் விளையாட்டரங்கில் நடைபெற்று வருகிறது.
கடந்த 5 நாட்களாக நடைபெற்று வரும் இப்போட்டியில் இன்று அணிகளிடையிலான ஆட்டங்கள் தொடங்க உள்ளன. இந்தப் போட்டியில் கடந்த 2 ஆண்டுகளாக அணிகளிடையிலான ஆட்டங்கள் நடைபெறவில்லை. இந்த ஆண்டு மீண்டும் அணிகளிடையிலான ஆட்டங்கள் அரங்கேறுகின்றன. அணிகள் பிரிவில் மொத்தம் 27 அணிகள் களமிறங்கவுள்ளன.
சாம்பியன் பட்டம் வெல்லக்கூடிய அணியாகக் கருதப்படும் மேற்கு வங்க அணி 1-வது குரூப் பிரிவில் இடம்பெற்றுள்ளது. ஆனாலும் மேற்கு வங்க அணிக்கு சவால் அளிக்கும் வகையில் மணிப்பூர் அணி விளையாடி வருகிறது.
தமிழக அணி 6-வது குரூப்பில் இடம்பெற்றுள்ளது. தமிழக அணி வீரர்கள் வருண் கணேஷ், பி.பி.அபிநந்த், பிரயேஷ் ராஜ் சுரேஷ், தருண் சண்முகம் ஆகியோர் சிறப்பான முறையில் விளையாடி வருகின்றனர்.
அணிகள் விவரம்: குரூப் 1: மேற்கு வங்கம், ஒடிசா, இமாச்சல் பிரதேசம், குரூப் 2: உத்தரபிரதேசம், மத்தியபிரதேசம், டாமன் அன்ட் டையூ, குரூப் 3: டெல்லி, சண்டிகர், ஆந்திரா, குரூப் 4: மகாராஷ்டிரா, பஞ்சாப், ஜார்க்கண்ட், குரூப் 5: மணிப்பூர், ஹரியாணா, பிஹார், குரூப் 6: தமிழ்நாடு, கேரளா, சத்தீஸ்கர், உத்தராகண்ட், குரூப் 7: அசாம், தெலங்கானா, புதுச்சேரி, ஜம்மு- காஷ்மீர், குரூப் 8: கர்நாடகா, குஜராத், கோவா, ராஜஸ்தான்.
முக்கிய செய்திகள்
விளையாட்டு
1 hour ago
விளையாட்டு
2 hours ago
விளையாட்டு
6 hours ago
விளையாட்டு
19 hours ago
விளையாட்டு
2 days ago
விளையாட்டு
2 days ago
விளையாட்டு
2 days ago
விளையாட்டு
3 days ago
விளையாட்டு
4 days ago
விளையாட்டு
4 days ago
விளையாட்டு
4 days ago
விளையாட்டு
4 days ago
விளையாட்டு
5 days ago
விளையாட்டு
5 days ago
விளையாட்டு
5 days ago