துபாய்: DP World ILT20 லீகின் முதல் சீசனில் சாம்பியன் பட்டம் வென்றது கல்ஃப் ஜெயண்ட்ஸ் அணி. டெசர்ட் வைபர்ஸ் அணிக்கு எதிரான இறுதிப் போட்டியில் 7 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் அந்த அணி வெற்றி பெற்றுள்ளது. கல்ஃப் ஜெயண்ட்ஸ் அணிக்காக பேட்டிங்கில் கிறிஸ் லின், ஷிம்ரோன் ஹெட்மயர் ஆகியோர் சிறப்பான ஆட்டத்தை இறுதிப் போட்டியில் வெளிப்படுத்தி இருந்தனர்.
துபாய் மைதானத்தில் நடைபெற்ற இந்த போட்டியில் டாஸ் வென்ற கல்ஃப் ஜெயண்ட்ஸ் அணி பவுலிங் தேர்வு செய்தது. டெசர்ட் வைபர்ஸ் அணி 20 ஓவர்களில் 8 விக்கெட்டுகள் இழப்பிற்கு 146 ரன்கள் எடுத்தது. ஹசரங்கா, 27 பந்துகளில் 55 ரன்கள் எடுத்திருந்தார். பில்லிங்ஸ், 29 பந்துகளில் 31 ரன்கள் எடுத்தார்.
147 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்கை கல்ஃப் ஜெயண்ட்ஸ் அணி விரட்டியது. தொடக்க ஆட்டக்காரராக களம் கண்ட கிறிஸ் லின், 50 பந்துகளில் 72 ரன்கள் எடுத்து இறுதிவரை அவுட்டாகாமல் இருந்தார். எராஸ்மஸ் 30 ரன்களும், ஹெட்மயர் 13 பந்துகளில் 25 ரன்களும் எடுத்திருந்தனர்.
DP World ILT20: அபுதாபி நைட் ரைடர்ஸ், துபாய் கேபிடல்ஸ், எம்ஐ எமிரேட்ஸ், ஷார்ஜா வாரியர்ஸ், கல்ஃப் ஜெயண்ட்ஸ், டெசர்ட் வைபர்ஸ் என ஆறு அணிகள் முதல் சீசனில் பங்கேற்றன. கொல்கத்தா, டெல்லி, மும்பை போன்ற ஐபிஎல் அணிகள் இதில் அணிகளை வாங்கி இருந்தன. ரவுண்ட் ராபின் மற்றும் பிளே-ஆஃப் என முதல் சீசன் நடைபெற்றது. இதில் சாம்பியன் பட்டத்தை கல்ஃப் ஜெயண்ட்ஸ் வென்றுள்ளது.
முக்கிய செய்திகள்
விளையாட்டு
6 hours ago
விளையாட்டு
6 hours ago
விளையாட்டு
10 hours ago
விளையாட்டு
23 hours ago
விளையாட்டு
2 days ago
விளையாட்டு
2 days ago
விளையாட்டு
2 days ago
விளையாட்டு
4 days ago
விளையாட்டு
4 days ago
விளையாட்டு
4 days ago
விளையாட்டு
4 days ago
விளையாட்டு
5 days ago
விளையாட்டு
5 days ago
விளையாட்டு
5 days ago
விளையாட்டு
5 days ago