டேபிள் டென்னிஸ் போட்டி - முதல் ஆட்டத்தில் தமிழக மகளிர் அணி வெற்றி

By செய்திப்பிரிவு

சென்னை: யுடிடி 84-வது மாநிலங்களுக்கு இடையிலான யு-17, யு-19 தேசிய டேபிள் டென்னிஸ் போட்டி சென்னை நேரு உள் விளையாட்டரங்கில் நேற்று தொடங்கியது.

தமிழக விளையாட்டுத்துறை அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் சிறப்பு விருந்தினராக கலந்துகொண்டு போட்டியை தொடங்கி வைத்தார். தொடக்க நாளில் யு-19 மகளிருக்கான அணிகள் பிரிவில் நடைபெற்ற ஆட்டம் ஒன்றில் தமிழகம் 3-1 என்ற கணக்கில் தெலங்கானாவை தோற்கடித்தது.

முதல் ஆட்டத்தில் தமிழகத்தின் காவியா 9-11,11-7,10-12,11-3,11-9 என்ற செட் கணக்கில் சத்யா அஸ்பாதியை தோற்கடித்தார். 2-வது ஆட்டத்தில் தெலங்கானாவின் பாவிதா 4-11,11-9,11-5,5-11,11-9 என்ற செட்கணக்கில் தமிழகத்தின் அம்ருதாவை வீழ்த்தினார்.

3-வது ஆட்டத்தில் தமிழகத்தின் எம்.ஹன்சினி 11-4,11-9,11-8 என்ற கணக்கில் எளிதாக பலுரு ஜலானியை வென்றார். 4-வது ஆட்டத்தில் தமிழகத்தின் காவியா, பாவிதாவை வீழ்த்த தமிழக அணி வெற்றியை பதிவு செய்தது.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

விளையாட்டு

18 mins ago

விளையாட்டு

4 hours ago

விளையாட்டு

16 hours ago

விளையாட்டு

2 days ago

விளையாட்டு

2 days ago

விளையாட்டு

2 days ago

விளையாட்டு

3 days ago

விளையாட்டு

3 days ago

விளையாட்டு

4 days ago

விளையாட்டு

4 days ago

விளையாட்டு

4 days ago

விளையாட்டு

5 days ago

விளையாட்டு

5 days ago

விளையாட்டு

5 days ago

விளையாட்டு

5 days ago

மேலும்